என் மலர்
செய்திகள்

பீகாரில் பரபரப்பு: முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா
பீகார் மாநிலத்தின் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாகவும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன்களில் ஒருவரான தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்தார். அதிலிருந்தே ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும், ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே துறை மந்திரியாக இருந்தபோது, ரயில்வே துறைக்காக வாங்கிய நிலங்களை பினாமி பெயரில் பதிவுசெய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும், லாலுவின் மகள் மற்றும் மருமகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து, தேஜஸ்வி யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், தேஜஸ்வி ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, பீகாரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசித்தார். இதைதொடர்ந்து, ஆளுனர் மாளிகைக்கு சென்ற நிதிஷ்குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இது குறித்து மாநில ஆளுனரிடம் கடிதம் கொடுத்த நிதிஷ்குமார், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பீகாரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் என்னால் ஆட்சியை தொடர முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவேன். நான் அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுனர் ஏற்றுக்கொண்டார். அடுத்த நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து பதவியில் இருக்கும்படி கூறியுள்ளார். எனது ராஜினாமாவுக்காக நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை’’ என தெரிவித்துள்ளார்.
பீகார் துணை முதல் மந்திரி பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய மறுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி டுவிட்டரில் பதிவிடுகையில், ஊழலுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவதற்காக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் உங்களின் இந்த நேர்மையான நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், உறுதுணையாகவும் இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story