என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொச்சி அருகே நடுரோட்டில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்
By
மாலை மலர்20 Jun 2017 11:54 AM GMT (Updated: 20 Jun 2017 11:54 AM GMT)

கொச்சி அருகே காதலிக்க மறுப்பு தெரிவித்திருந்த இளம்பெண்ணை வாலிபர் கழுத்தை அறுத்து கொன்றார்.
திருவனந்தபுரம்:
கொச்சி அருகே கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் (வயது 29). பெயிண்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (24) என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். சித்ரா அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதகராக பணியாற்றினார்.
ஷயாமின் காதலை சித்ரா ஏற்கவில்லை. அவரை பலமுறை ஷியாம் பின் தொடர்ந்து சென்று காதலிக்கும்படி வற்புறுத்தியும் அவர் காதலை ஏற்கவில்லை.
தனது உறவினர்கள் மூலம் சித்ராவை ஷியாம் பெண் கேட்டுச் சென்றார். ஆனால் ஷியாமுக்கு அவர்கள் பெண் தர மறுத்துவிட்டனர்.
இதனால் சித்ரா மீது ஷியாமுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் சித்ரா நேற்று காலை தான் பணிபுரியும் ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஷியாம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை பொதுமக்கள் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுபற்றி கோதமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் சிக்னல் மூலம் ஷியாமை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story
×