என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டி.கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 180 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மற்றும் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 64 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தேர்தலுக்கு 666 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 91 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்குச் சாவடிகள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளன.இங்கு வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வேலூர் மாவட்டத்தில் 11 வாக்குசாவடிகளில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 11 வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதியும் நடைபெற உள்ளது.
வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 180 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதில், 5 லட்சத்து 93 ஆயிரத்து 64 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க 208 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க 208 வாக்குச்சாவடிகள், ஆண், பெண் இருவரும் வாக்களிக்க 230 வாக்குச்சாவடிகள் என்று மொத்தம் 646 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் வாக்குப்பதிவை கேமராக்கள் மூலம் நேரடியாக தேர்தல் ஆணைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளில் 400-க்கும் குறைவான வாக்காளர்களும், 32 வாக்குச்சாவடிகளில் 401 முதல் 600 வாக்காளர்களும், 158 வாக்குச்சாவடிகளில் 601 முதல் 800 வாக்காளர்களும் உள்ளனர்.
188 வாக்குச்சாவடிகளில் 801 முதல் 1,000 வாக்காளர்களும், 252 வாக்குச்சாவடிகளில் 1,001 முதல் 1,200 வாக்காளர்களும், 11 வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை குடியாத்தம் நகராட்சியில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளர்களின் இறுதிபட்டியல் முடிவான பின்னரே வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவியின் எண்ணிக்கை தெரிய வரும்.
ஒரு வார்டில் 14-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால். அங்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி 7 இடங்களில் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சிகள் பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர், ஒடுகத்தூர் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக தேர்தல் பணிக்கான ஆணை ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
வேலூர் மாநகராட்சியில் டி.கே.எம். கல்லூரி, குடியாத்தம் நகராட்சி திருவள்ளுவர் பள்ளி, பேரணாம்பட்டு இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி, பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாத்தூர் பேரூராட்சியில் அடுக்கம்பாறை அரசு நடுநிலைப்பள்ளி, திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒடுகத்தூர் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 2 ஆயிரத்து 331 பேர் கலந்து கொண்டனர்.
வேலூர் டி.கே.எம் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கான பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 9-ந் தேதியும், 3-வது கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 18-ந்தேதியும் நடக்க உள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்மா கிளினிக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பி பிளாக் வளாகத்தில் இன்று காலை அம்மா மினி கிளினிகில் பணியாற்றிய பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு அனுமதி இன்றி எந்தவித போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் கூறினர்.
அப்போது பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலகத்தில் மனு அளித்து விட்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் கூறுகையில்:-
நாங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்குகளில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியில் சேர்ந்தோம். தற்போது திடீரென அனைத்து அம்மா கிளினிக்குகளும் மூடப்பட்டு விட்டது.
அதற்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா மையங்களில் பணி தருவதாக கூறினார்கள்.
தற்போது அந்த பணியும் தரவில்லை. மேலும் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. எங்களது வாழ்வாதாரத்திற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.
இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் இன்று 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 56,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,922 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,162 பேர் பலியானார்கள். தற்போது 1,443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரில் குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை செய்வதாக ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் துணிக்கடை வைத்துள்ளார்.
தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை விளம்பரத்தை பார்த்தார்.
அதை உண்மை என நம்பி முன்பணமாக ரூ.24,800 செலுத்தி ஆர்டர் கொடுத்துள்ளார்.
பணத்தை செலுத்திய பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் துரித நடவடிக்கை எடுத்த போலீசார், அவர் இழந்த ரூ.24,800 பணத்தை மீட்டனர், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தனர்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு 15 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 15 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கியதால் பாதிக் கப்பட்ட கிராமப்புற ஏழை, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 15 மாணவ, மாணவிகள் இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேரு வதற்கு தேர்வாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் டி.டி.மோட்டூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும்,
திருவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் யோசியா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி, நாகப் பட்டிணம் அரசு மருத்துவக் கல்லூரியிலும்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் வசந்த், காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியிலும்,
பொன்னை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிகா, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா,
தருமபுரி அரசினர் மருத்துவக் கல்லூரியிலும், பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்கதேர்வாகியுள்ளனர்.
ஒடுக்கத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதபிரியா, திருவள்ளூர் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார்.
வேலூர் மீன் மார்க்கெட் இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் மீன் மார்க்கெட் மற்றும் மீன் இறைச்சி கடைகள் மூடிக்கிடந்தன.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இன்று அமலில் இருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று காலை வேலூர் மீன் மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.
அங்குள்ள அனைத்து கடைகளிலும் மீன்கள், ஆடு, கோழி இறைச்சி போன்றவை விற்பனைக்கு அதிகளவில் வைத்திருந்தனர்.
வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்குள்ள சில்லரை விற்பனை கடைகளில் மீன்கள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையானது.
இதேபோன்று அங்குள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன், இறைச்சி வாங்க மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல் குவிந்து நின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது.
சத்துவாச்சாரி மீன் இறைச்சி கடைகளிலும் அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். தொரப்பாடி, பாகாயம் சேண்பாக்கம் பகுதிகளில் மீன் இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட இன்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்துக்கொண்டு மீன் இறைச்சி வாங்கி சென்றனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மீன் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று நண்டு கிலோ ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450 வரையிலும், சங்கரா மீன் ரூ.350 முதல் 400 வரையிலும், கட்லா மீன் ரூ.200, வவ்வால் ரூ.350 முதல் 400 வரையிலும், மத்தி மீன்கள் ரூ.250 வரையிலும் விற்பனையானது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் அதிகம் கூடும் மீன்மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 98 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 56,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,922 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,162 பேர் பலியானார்கள். தற்போது 1,443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 182 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் பலியானார்.
பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர்ந்த பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவிக்கு ரூ.1.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரி தொழிலாளிகள்.
இவர்களின் மகள் சத்யா, மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இவர் நீட் தேர்வில் தகுதி பெற்றார்.
இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்று, தமிழக அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான ஆணையை பெற்றார்.
இந்நிலையில், மாணவியின் குடும்ப ஏழ்மையை அறிந்ததும், நந்தகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு மாணவி சத்யா மற்றும் அவருடைய பெற்றோரை வரவழைத்தார்.
தன் சொந்த பணம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மருத்துவ படிப்பு செலவுக்காக, மாணவி சத்யாவிடம் வழங்கினார்.
வேலூரில் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நில அளவையர் வீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.22 லட்சத்தி 84 ஆயிரத்தி 650 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கம் கழனிக்காட்டு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 37). திருப்பத்தூர் மாவட்டம் ஆ ம்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருகிறார்.
ஆம்பூர் அருகே உள்ள மின்னூரை சேர்ந்தவர் சேகர். சென்னையில் தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் தனது கிராமத்தில் உள்ள 22 சென்ட் நிலம் மற்றும் வீட்டு மனைகளை அளவிடுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து நில அளவையர் பாலாஜி, சேகரை அழைத்து பேசினார். அப்போது 4 இடங்களை அளவீடு செய்து பட்டாவை பிரித்து பதிவு செய்வதற்காக 12 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இறுதியாக ரூ.8 ஆயிரம் கேட்டார்.
இதுகுறித்து சேகர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.அதன் பேரில் ஒரு மாதமாக பாலாஜியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.
நேற்று பிற்பகல் சேகரிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை பாலாஜி லஞ்சமாக வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள நில அளவையர் பாலாஜியின் வீட்டில் மாலை 4 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்று அதிகாலை 2.30 மணி வரை சோதனை நீடித்தது. 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நில அளவையர் பாலாஜி வீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.22 லட்சத்தி 84 ஆயிரத்தி 650 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கி, வீடு தொடர்பான ஆவணங்களை கணக்கிட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் லஞ்சமாக வாங்கி குவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நில அளவையர் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நில அளவையர் பாலாஜியின் தந்தையும் நில அளவையர் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். வாரிசு அடிப்படையில் பாலாஜிக்கு வேலை கிடைத்து. இவர் 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நில அளவையாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் வாக்குசாவடிகளில் 874 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
வேலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி, வேலூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் மொத்தம் 437 ஏற்க வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், தேர்தல் நாளில் ஓட்டுபோட வரும் வாக்காளர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வகையிலும், வாக்குச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே நடக்கும் கண்காணிக்கும் வகையிலும், தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 874 கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதேநேரம் நிகழ்வுகளை மாநகநகராட்சி பகுதியில் உள்ள 71 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என பட்டியலில் உள்ளதால், அவற்றில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில், “லைவ் ஸ்டிரிமிங்” எனப்படும் ஆன்லைனில் பார்க்கக்கூடிய வகையிலான கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.
அதேபோல், ஒட்டுப்பதிவு முடிந்து, ஓட்டு மிஷின்களை பாதுகாப்பாக வைக்கும் “ஸ்டிராங்” ரூமில் 6 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இதற்கிடையே, வேட்புமனு தாக்கலுக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைகளில், ஆன்லைனில் பார்க்கக்கூடிய வகையில் 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவின்போது நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இந்த கேமராக்களிலேயே பதிவாகும்.
தொடர்ந்து ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்த கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகள் அனைத்தும், பாதுகாப்பாக ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் அறையில் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






