என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எஸ்.பி. பணத்தை ஒப்படைத்த காட்சி.
குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை செய்வதாக ஆன்லைனில் மோசடி
வேலூரில் குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை செய்வதாக ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் துணிக்கடை வைத்துள்ளார்.
தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை விளம்பரத்தை பார்த்தார்.
அதை உண்மை என நம்பி முன்பணமாக ரூ.24,800 செலுத்தி ஆர்டர் கொடுத்துள்ளார்.
பணத்தை செலுத்திய பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் துரித நடவடிக்கை எடுத்த போலீசார், அவர் இழந்த ரூ.24,800 பணத்தை மீட்டனர், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தனர்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






