என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்புக்கு தேர்வான திமிரி அரசு பள்ளி மாணவி ரஞ்சினியை, பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரி பாராட்டினர
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மருத்துவ படிப்புக்கு 15 மாணவர்கள் தேர்வு
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு 15 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 15 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கியதால் பாதிக் கப்பட்ட கிராமப்புற ஏழை, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 15 மாணவ, மாணவிகள் இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேரு வதற்கு தேர்வாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் டி.டி.மோட்டூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும்,
திருவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் யோசியா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி, நாகப் பட்டிணம் அரசு மருத்துவக் கல்லூரியிலும்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் வசந்த், காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியிலும்,
பொன்னை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிகா, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா,
தருமபுரி அரசினர் மருத்துவக் கல்லூரியிலும், பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்கதேர்வாகியுள்ளனர்.
ஒடுக்கத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதபிரியா, திருவள்ளூர் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார்.
Next Story






