என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் பதட்டமான வாக்குச்சாவடிகள் தீவிர கண்காணிப்பு
வேலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டி.கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 180 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மற்றும் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 64 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தேர்தலுக்கு 666 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 91 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்குச் சாவடிகள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளன.இங்கு வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Next Story






