என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் 11 வாக்குசாவடிகளில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள்
வேலூர் மாவட்டத்தில் 11 வாக்குசாவடிகளில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 11 வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதியும் நடைபெற உள்ளது.
வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 180 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதில், 5 லட்சத்து 93 ஆயிரத்து 64 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க 208 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க 208 வாக்குச்சாவடிகள், ஆண், பெண் இருவரும் வாக்களிக்க 230 வாக்குச்சாவடிகள் என்று மொத்தம் 646 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் வாக்குப்பதிவை கேமராக்கள் மூலம் நேரடியாக தேர்தல் ஆணைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளில் 400-க்கும் குறைவான வாக்காளர்களும், 32 வாக்குச்சாவடிகளில் 401 முதல் 600 வாக்காளர்களும், 158 வாக்குச்சாவடிகளில் 601 முதல் 800 வாக்காளர்களும் உள்ளனர்.
188 வாக்குச்சாவடிகளில் 801 முதல் 1,000 வாக்காளர்களும், 252 வாக்குச்சாவடிகளில் 1,001 முதல் 1,200 வாக்காளர்களும், 11 வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை குடியாத்தம் நகராட்சியில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளர்களின் இறுதிபட்டியல் முடிவான பின்னரே வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவியின் எண்ணிக்கை தெரிய வரும்.
ஒரு வார்டில் 14-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால். அங்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






