என் மலர்
வேலூர்
திருவலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன் சிலை கடத்தி கொண்டுவரப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருவலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 21) கூலி தொழிலாளி. இவரது வீட்டில் ஐம்பொன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று பிரேம்குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பீடத்தின் மீது அமர்ந்தபடி 4 கைகளுடன் அம்மன் சிலையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த சிலையின் ஒரு கை ஒரு கால் உடைக்கப்பட்டிருந்தது. சிலையை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். பிரேம்குமாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அருகில் உள்ள ஏரியில் மண்ணில் சிலை புதைந்திருந்தது. அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தேன். சிலையின் உடைந்த கை, கால் ஆகியவற்றை எனது உறவினர் குமார் என்பவர் அவரது சொந்த ஊரான விருத்தாசலத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பிரேம் குமார் தெரிவித்தார்.
சாமி சிலை மண்ணில் புதைந்திருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. சிலையின் உதட்டில் பூசப்பட்ட சிவப்பு நிற சாயம் அழியாமல் அப்படியே இருந்தது.
அம்மன் சிலை கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் சிலையை வைத்திருந்த பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். சிலையின் கை கால்களை கொண்டு சென்ற அவரது உறவினர் குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சிலையை விற்பனை செய்வதற்காக உடைந்த பாகங்களை மதிப்பீடு செய்ய கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
இந்த சிலை உண்மையிலேயே ஏரியில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது கடத்திவரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதுபோன்ற அம்மன் சிலை வேறு எங்காவது கொள்ளை போனதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அங்கு அவர்களின் பயன்பாட்டுக்காக நூலகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் அவர்களின் குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் திறந்துவைத்தார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உடனிருந்தார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் உட் கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆர்பர்ட்ஜான் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை வேலூர் உட் கோட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் தொடர்பான பட்டியலை வைத்து எந்தப் பகுதியில் அதிகமாக குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்பதை வைத்து அந்தப பகுதிகளை புவியியல் தகவலமைப்பு வரைபடம் தயார் செய்தார்.
அந்த வரைபடத்தில் வேலூர் உட் கோட்டத்தில் எந்தப் பகுதியில் அதிகமாக குற்றங்கள் நடைபெற்றது என்ற விவரம் குறிக்கப்பட்டிருக்கும்.
அதை வைத்து அந்தப் பகுதியில் இனி குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
மேலும் தனியார் பாதுகாவலர்களும் குடியிருப்புவாசிகளின் உதவியுடன் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
இனி வரும் நாட்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த பகுப்பாய்வு உதவும். இதன்மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான தி.மு.க.வில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக திருநங்கை கங்கா போட்டியிடுகிறார். ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில் பின்புறமுள்ள பகுதியில் வசித்து வரும் கங்கா ஏற்கனவே சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளேன். கடந்த கருணாநிதி ஆட்சியின் போது திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பதவி வகித்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன்.
மேலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினேன். இந்த பகுதியில் போர்வெல் சேதமடைந்தால் எனது சொந்த செலவில் அவற்றை சீரமைத்துள்ளேன். ஏழைகளுக்கு ஈமச்சடங்கு உதவியும் செய்து கொடுத்துள்ளேன்.
மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். எனது சமூக சேவைகள் குறித்து அவர்கள் விசாரித்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எனக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மக்கள் நலப் பணிகளில் திறம்பட செயலாற்றுவேன் என்றார்.
வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான தி.மு.க.வில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறுகையில்:-
37-வது வார்டில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என அந்த பகுதி பொது மக்களிடம் நேரடியாக விசாரித்தோம். பொதுமக்கள் பலர் கங்காவிற்கு சீட் கொடுங்கள். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றனர்.
மேலும் கங்காவுக்கு அந்த பகுதியில் நற்பெயர் மக்கள் செல்வாக்கு உள்ளது. அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் அவருக்கு சீட் வழங்கியுள்ளது என்றார்.

வேலூர் மாநகராட்சி தேர்தலில் 57 வார்டுகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவோர் குறித்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட இப்பட்டியலின் அடிப்படையில் வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 57 வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1-வது வார்டு - சி.ஆர்.ஜெயக்குமா£, 2-வது வார்டு -ஜெ.கார்த்தி, 3-வது வார்டு -சி.இளங்கோவன், 5-வது வார்டு-ஏ.கலைச்செல்வி, 6-வது வார்டு-ஜெ.ஆனந்தன், 7-வது வார்டு -ஆர்.சந்தியா, 8-வது வார்டு -கேபிள் ஏ.சுரேஷ்குமார், 9-வது வார்டு-என்.குமுதவல்லி, 10-வது வார்டு- பி.ரமேஷ்.
11-வது வார்டு -ஏ.சுகேந்திரன், 12-வது வார்டு- ஜெ.வி.ஆர்.வெங்கட்ராமன், 13-வது வார்டு-கே.ஆர்.கலைச்செல்வி, 14-வது வார்டு - எஸ்.தமிழ்ச்செல்வி, 15-வது வார்டு-கே.மைதிலி.
16-வது வார்டு- கே.அமலாநிருபா, 17-வது வார்டு - பி.லட்சுமி, 18-வது வார்டு - டி.சாந்தி, 19-வது வார்டு - என்.பவானி, 20-வது வார்டு- எஸ்.உஷா, 21-வது வார்டு- ஜி.கிருஷ்ணமூர்த்தி, 22-வது வார்டு- ஏ.பி.எல். சுந்தரம், 23-வது வார்டு-எஸ்.ராஜேஸ்வரி.
24-வது வார்டு- சி.கே.எஸ்.வினோத்குமார், 25-வது வார்டு- டி.சீனிவாசன், 26-வது வார்டு -ஜி.கே.முரளி என்கிற முரளிக்குமார், 27-வது வார்டு-ஏ.ஞானசேகர், 28-வது வார்டு - டி.கவிதா, 29-வது வார்டு - ஜெ.பொற்செல்வி, 30-வது வார்டு - ஜெ.ஷகிலா.
31-வது வார்டு- டி.காவியா, 32-வது வார்டு -எஸ்.கீதா, 33-வது வார்டு -வி.பச்சையப்பன், 34-வது வார்டு-ஜெ.சுரேஷ்பாபு, 35-வது வார்டு- வி.லட்சுமணன், 36-வது வார்டு-எஸ்.மொய்தீன், 37-வது வார்டு- எஸ்.மகேஸ்வரி, 38-வது வார்டு - வி.உமா, 39-வது வார்டு - கே.பிரகாஷ், 40-வது வார்டு - எம்.ஷாஜாதி.
41-வது வார்டு- கே.லூர்துமேரிகோடீஸ், 42-வது வார்டு- எஸ்.சாந்தி, 43-வது வார்டு- பி.பிரான்சிஸ்கா, 44-வது வார்டு - ஏ.தரணி, 45-வது வார்டு-ஜி.அஷ்மிதா, 46-வது வார்டு - ஏ.லஷ்மி, 47-வது வார்டு - எஸ்.எழிலரசன், 48-வது வார்டு - பி.செல்வி, 50-வது வார்டு - வி.அருணா.
51-வது வார்டு- ஜி.செந்தில்குமார், 52-வது வார்டு பி.எஸ்.பழனி, 53-வது வார்டு -எஸ்.கோமதி, 54-வது வார்டு - சி.விஜயன், 55-வது வார்டு-எஸ்.சரவணன், 56-வது வார்டு - ஜி.பரிமளா, 57-வது வார்டு - எஸ்.மாலினி, 58-வது வார்டு -ஏ.ஜி.பாண்டியன், 59-வது வார்டு-கே.சசிக்குமார்.
வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சிக்கு வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சி வாக்குகள் அங்குள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும்.
பேரணாம்பட்டு நகராட்சி வாக்குகள் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
ஒடுகத்தூர் பள்ளிகொண்டா பேரூராட்சி வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் பள்ளியிலும், பென்னாத்தூர் திருவலம் பேரூராட்சி வாக்குகள் பள்ளிகொண்டாவில் உள்ள ஆர்.சி.எம். பள்ளியிலும் எண்ணிக்கை நடைபெற உள்ளன.
வேலூர் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தி.மு.க சார்பில் போட்டியிடுவோர் குறித்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டு களில் 50 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
1-வது வார்டு - கே.அன்பு, 2-வது வார்டு - டி.விமலா சீனிவாசன், 3-வது வார்டு- ஜி.ரவிக்குமார், 4-வது வார்டு- எல்.சித்ரா, 5-வது வார்டு -வி.சித்ரா, 6-வது வார்டு- எ.எம்.சம்மந்தம், 7-வது வார்டு - வ.புஷ்பலதா, 8-வது வார்டு- எம்.சுனில்குமார், 9-வது வார்டு- ப.விஜயலட்சுமி, 10-வது வார்டு - கே.ஆர்.மோகனசுந்தரம், 1
1-வது வார்டு - எஸ்.ஆர்.ரஜினி, 12-வது வார்டு - டீட்டா சரவணன், 13-வது வார்டு - சரண்யா, 14-வது வார்டு - சாமுண்டீஸ்வரி, 15-வது வார்டு- ஆர்.நித்யகுமார், 16-வது வார்டு - எம்.விஜயலட்சுமி, 17-வது வார்டு - கே.காஞ்சனா,
21-வது வார்டு - த.சக்கரவர்த்தி, 22-வது வார்டு - ஆர்.பி.ஏழுமலை, 24-வது வார்டு- ஆர்.பி.ரமேஷ், 25-வது வார்டு- எம்.ஏ.கணேஷ்சங்கர், 26-வது வார்டு - எம்.சேகர், 27-வது வார்டு - ஜே.சதீஷ்குமார், 28-வது வார்டு -மம்தாகுமார், 29-வது வார்டு - தர்மாகுப்புசாமி.
31-வது வார்டு- சுஜாதாஆனந்தகுமார், 33-வது வார்டு- கா.சு.சண்முகம், 34-வது வார்டு- வீனஸ் ஆர்.நரேந்திரன், 35-வது வார்டு - சி.சந்திரசேகரன், 36-வது வார்டு- கே.யூசுப்கான், 37-வது வார்டு - ஆர்.கங்கா, 38-வது வார்டு - த.திருப்பாவை, 39-வது வார்டு- ஆர்.அருணாச்சலம்.
41-வது வார்டு - ரேகாஅன்புநிதி, 42-வது வார்டு- கைரூன்னிசா, 43-வது வார்டு- ஆபிதாபேகம், 44-வது வார்டு - தவமணிதாமோதிரன், 46-வது வார்டு -மாலதிஅருணகிரி, 49-வது வார்டு- எஸ்.தனசேகரன்.
50-வது வார்டு- பாரதிஷம்மிகுமார், 51-வது வார்டு- வி.ஜெய்சங்கர், 52-வது வார்டு - எம்.மகேந்திரன், 53-வது வார்டு - கவிதாதேவராஜ், 54-வது வார்டு - பி.சுதாகர், 55-வது வார்டு - சி.எம்.தங்கதுரை.
56-வது வார்டு சங்கீதாபாபு, 57-வது வார்டு- வி.ஆண்டாள், 58-வது வார்டு - எஸ்.வெங்கடேசன், 59-வது வார்டு - ஆர்.கே.அய்யப்பன், 60-வது வார்டு - பி.கீதா.
மேலும் 10 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இதனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு இந்த வார்டுகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான பட்டியல் வெளியாக உள்ளது.
வேலூர் மாநகராட்சியில் 5 வார்டுகளில் மட்டுமே விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.
வேலூர்:
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கு நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
நடிகர் விஜயின் பெயர் மற்றும் கொடிகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 5-வார்டுகளில் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சியில் தலா 2 வார்டுகள் என மொத்தம் 4 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகின்றனர.
இவர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
வேலூர், காட்பாடியில் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்.
வேலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கலாம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வேலூர், காட்பாடி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
கொரோனா விதிமுறைகள் பின்பற்றி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து பள்ளி வகுப்பறைக்கு மாணவர்கள் சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர். மேலும் விடுமுறை நாட்களில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டதால் வேலூர் பஸ் நிலையங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களை டி.ஐ.ஜி. பாராட்டினார்.
வேலூர்:
அரசு பள்ளிகளில் படித்து 7.5 இது இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள வேலூர் சரகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வேலூர் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று நடந்தது.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், தீபா சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ள 43 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் டி.ஐ.ஜி.ஆனி விஜயா கூறியதாவது;-
வேலூர் சரகத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அதிரடியாக பல்வேறு வாழ்வியல் வழிமுறைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு முதல் மண் மற்றும் இயற்கை வளத்தை அதிகரிக்கும் வகையில் பசுமை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. போலீசார் மூலம் மரங்கள் நடப்படும்.
மேலும் காவலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் யோகா முத்திரை பயிற்சிகள் வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு காவல்துறை மூலம் தொழிற்பயிற்சி போலீசார் தேர்வுக்கு இலவச பயிற்சி போன்ற இலவச பயிற்சிகள் வழங்கப்படும்.
இதுபோன்ற 13 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சீவூர் ஊராட்சி கள்ளூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகோரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர், திருவண்ணாமலை, ஆம்பூர் பகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வேலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் 7-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
வேலூர் மாநகராட்சியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி 18-வது வார்டு லட்சுமி 20-வது வார்டு டாக்டர்ஐஸ்வர்யா, 21 வது வார்டு பவானி, 26-வது வார்டு முரளி, 33-வது வார்டு திலீப்குமார், 47-வது வார்டு சிவகுமார், 48-வது வார்டு சாந்தி நாராயணன், 49-வது வார்டு விஜயகுமார் 51 வது வார்டு ரம்யா, 52-வது பிரவீன் சந்தோஷ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சி 18-வது வார்டு பந்தள ராஜ் குமார், 21-வது வார்டு ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் நகராட்சியில் 2-வது வார்டு மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளராக சுகுணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கஞ்சா போதையில் மகள் என்றும் பாராமல் அத்துமீறிய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் டோபி கானா தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது37). மெக்கானிக் வேலை செய்து வந்தார். மேலும் திருட்டிலும், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் மீது சென்னை அம்பத்தூர், காஞ்சிபுரம் ரத்தினகிரி, வாலாஜா, வேலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவரது மனைவி செல்வி பேபி. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். செல்வி பேபிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அவர் இறந்துவிட்டார்.
இதனை தொடர்ந்து அவரது 6 வயது மகள் வாலாஜா அடுத்த மேல குப்பத்தில் உள்ள அவரது தாத்தா பாதுகாப்பில் இருந்தார். குமரனும் அங்கேயே தங்கியிருந்தார்.
அப்போது குமரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரது மாமனாருடன் தகராறு ஏற்பட்டது. குமரன் அவரது மகளை அழைத்துக்கொண்டு காட்பாடி பிரம்மபுரம் டோபிக்கானா தெருவில் குடியேறினார்.
அங்கு வைத்து மகள் என்றும் கூட பாராமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் பக்கத்து வீட்டிலும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பழைய காட்பாடி ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமி முன்பாகவே அவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் மகளிடமும் அத்துமீறுல் தொடர்ந்தது. இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது எனக் கூறி சிறுமியை பலமுறை அடித்துத் தாக்கி உள்ளார். அடிக்கடி கள்ளக்காதலியை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு குமரனின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. மனைவி இல்லாத இவரது வீட்டிற்கு அடிக்கடி ஒரு பெண் வந்து போவதை அவர் கவனித்தார். இதுபற்றி குமரனின் மகளை தனியாக அழைத்து விசாரித்தார்.
அப்போது சிறுமி எனது தந்தை வீட்டுக்கு பெண் ஒருவரை அழைத்து வருவார். இருவரும் துணி இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள்.
தந்தை என்னிடமும் தவறாக நடந்து கொள்வார். இதுபற்றி வெளியே சொன்னால் என்னை அடிப்பார். என்னை எனது தாத்தா வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என கூறி கதறி அழுதார்.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா மற்றும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் குமரன் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வந்ததும், சிறுமியிடம் அத்து மீறியதும் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமரனை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 6 வயது சிறுமியை வாலாஜாவில் உள்ள அவரது தாத்தா வீட்டில் ஒப்படைத்தனர்.
கஞ்சா போதையில் மகள் என்று கூட பாராமல் அத்துமீறல் நடந்துள்ளது.
பெண் குழந்தைகளை அடிக்கடி கவனித்து கொள்ள வேண்டும். எங்கேயும் தனிமையில் அனுப்பக்கூடாது. அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் தவறு நடக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.