என் மலர்
வேலூர்
வேலூர் அண்ணா சாலையில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் சைதாப் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35) கூலித்தொழிலாளி.இவர் நேற்று அண்ணாசாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேட்டு இடையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த படையப்பா என்கிற ராஜா (23) என்பவர் வெங்கடேஷை வழிமறித்தார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 வழிப்பறி செய்தார்.
இதுபற்றி வெங்கடேஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.சப்& இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் வழிப்பறியில் ஈடுபட்டது படையப்பா என்கிற ராஜா என்பதைக் கண்டறிந்தனர். நேற்று மாலை அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர் பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரம் நடந்து வருகிறது.
வேலூர்
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை நாளில் முன் னோர்களை நினைவு கூர்ந்து வழிபடும் வகையில், வேலூர் மாவட்டத்தில் ‘மயானக் கொள்ளை‘ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர், விருதம்பட்டு, ஓல்டு டவுன், தோட்டப்பாளையம், கோட்டை சுற்றுச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அங்காளம்மன் மற்றும் காளியம் மன் கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட புஷ்ப பல்லக்கு மற் றும் தேர்களில் ஊர்வலமாக,
வேலு£ர் புது பஸ் நிலையத்தில் இருந்து அம்மன், அருகே உள்ள பாலாறு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சுண்டல், பழ வகை கள், மாவிளக்கு, தானியங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை மயான சூறையிட்டு அங்காளம் மனை பக்தர்கள் பக்தி பரவசத் துடன் வழிபடுவது வழக்கம். 10 அதன்படி, இந்த ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா, வரும் 2-ந் தேதி நடக்கிறது.
இதை யொட்டி, வேலு£ர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற் றங்கரை பகுதியை சுத்தம் செய் யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், அங்கு மண்ணில் அம்மன் உருவம் பணிகளும் வடிவமைக்கும் தொடங்கியுள்ளது.
வேலூர் மேயருக்கு புதிய அங்கி தயார் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி 60 வார்டு கவுன்சிலர்களுகாண வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.அ.தி.மு.க 7, சுயேட்சை 6 இடங்களிலும் பா.ம.க. பா.ஜ.க தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு வருகிற 2&ந் தேதி காலை 11 மணிக்கு வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் புது பொலிவு படுத்தும் பணி நடந்து வருகிறது.
மேலும் மேயர், துணை மேயர் அறைகளும் தயார் செய்து வருகின்றனர்.
மாநகராட்சி மேயர் பயன்படுத்தும் வெள்ளி செங்கோல், 140 பவுன் தங்க செயின் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் அணியக்கூடிய அங்கி கடந்த 2008&ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த அங்கி பயன்படுத்தப்படவில்லை.
இதனால் இந்த முறை மேயருக்கான அங்கி புதிதாக தயார் செய்ய முடிவு செய்துள்ளனர். தி.மு.க.வில் மேயர் யார் என அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவு செய்து புதிய அங்கி தயார் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க-8,693, காங்கிரஸ் கட்சிக்கு 3,164 வாக்குகள் பெற்றுள்ளன.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஏற்கனவே 2 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர் கள் போட் டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. அதனடிப்படையில், மாநகராட்சியில் 44 வார்டுகளை தி.மு.க.வும், 7 வார்டுகளை அ.தி.மு.க.வும், சுயேட்சைகள் 6 வார்டுகளையும், பா.ஜ.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.
தேர்தலில் தேசிய கட்சியான பாஜக மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டுகளில் தனித்து களமிறங்கியது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலர் வேலூர் இப்ராஹிம் உள்பட முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி 18-வது வார்டில் மட்டும் பா.ஜ.க வேட்பாளர் சுமதிமனோகரன் 109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம், வேலூர் மாநகராட்சியில் பாஜக முதன்முதலாக தடம் பதித்து உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட 35 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 8693 வாக்குகள் பெற்றுள் ளதுடன், தோல்வியடைந்த வார்டுகள் பெரும்பாலானவற்றிலும் அக்கட்சி 2-வது, 3-வது இடத்திலேயே உள்ளது.
இது வேலூரில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் பாஜக ஒரு முக்கிய கட்சியாக உருவெடுக்க தொடங்கியிருப்பதை காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், தி.மு.க கூட்டணியில் 3 வார்டுகளை பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அந்த 3 வார்டுகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த 3 வார்டுகளிலும் அக்கட்சிக்கு மொத்தம் 3164 வாக்குகள் கிடைத்துள்ளது.
உள்ளூர்வாசிகள் அனைவரும் உடைமைகளுடன் வேறு இடத்துக்கு செல்கின்றனர். நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்று உக்ரைனில் படிக்கும் மருத்துவ மாணவி செல்போனில் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்- பொற்செல்வி தம்பதியின் மூத்த மகள் தீபா (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள போல்டாவா என்ற பகுதியில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் உக்ரைன் சென்றார். தற்போது போர் நடப்பதால் அவர் அங்கு சிக்கியுள்ளார். அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-
நான் உக்ரைன் நாட்டில் உள்ள போல்டாவா மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். இங்கு இந்தியாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். நாங்கள் குண்டு வெடிப்பு சத்தங்களை அடிக்கடி கேட்கிறோம். வானில் பல விமானங்கள் பறக்கிறது. முதலில் போர் நடப்பது தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது. எங்கள் பகுதி தற்போது பாதுகாப்பாக உள்ளது. ஆனால் பிற பகுதிகளில் குண்டுகள் போடப்படுகிறது. எங்கள் பகுதியிலும் குண்டுகள் போட வாய்ப்புள்ளதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். உள்ளூர்வாசிகள் அனைவரும் உடைமைகளுடன் வேறு இடத்துக்கு செல்கின்றனர். நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை.
எங்கள் பகுதியில் மட்டும் தற்போது தொலைதொடர்பு சாதனங்கள் செயல்பாட்டில் உள்ளது. எங்கள் நகருக்கு அருகில் உள்ள சுமி, டினிப்ரோ, கார்கிவ் ஆகிய பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. போல்டாவாவையும் தாக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நான் இந்திய அரசுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன். அவர்களிடத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று தகவல் வந்துள்ளது. ஆனால் மீட்பு குறித்து அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. அருகில் உள்ள விமான நிலையங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது. சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
கடைகளில் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி இருப்பு வைக்கின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்களும் காலியாகிவிட்டது. நாங்கள் அனைவரும் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளோம். எங்களை மீட்க இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது மகள் அங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளார். அவரை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 26-ந் தேதி அவர் தமிழகம் வர இருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு சிக்கிக்கொண்டார். அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவளை போன்று பல இந்தியர்களும் அங்கு மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

வலிமை திரைப்படத்தில் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் காட்சி ட்ரெய்லரில் வெளியாகியிருந்தன. அதேபோன்று அவருடைய ரசிகர்களும் தியேட்டர் வளாகத்தில் பைக்கில் சாகசம் செய்து கொண்டாடினர்.
வேலூர்:
வேலூரில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது. ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள், பேனர்கள் அதிகளவில் வைத்திருந்தனர். இதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அலங்கார் தியேட்டரில் நேற்று மாலை முதலே ரசிகர்கள் குவிய தொடங்கினர். அஜித் ரசிகர்கள் அந்த தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்க கூடிய அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளத்துடன் மாலை அணிவித்தனர்.
மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் காட்சி ட்ரெய்லரில் வெளியாகியிருந்தன. அதேபோன்று அவருடைய ரசிகர்களும் தியேட்டர் வளாகத்தில் பைக்கில் சாகசம் செய்து கொண்டாடினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் சாகசம் நடந்ததால் தியேட்டர் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்வி பாடங்கள் திருத்தும் பணியில் வேலூர் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் தொழிற்கல்வி பாடங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
தணிக்கையியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணுவியல், அடிப்படை இயந்திரவியல், (நர்சிங்) செவிலியம், வேளாண் அறிவியல், ஆடை வடிவமைத்தல் தயாரித்தலும், அலுவலக செயலரியல் உள்ளிட்ட 8 பாடங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைப்பதற்கான தொழிற்கல்வி ஆசிரியர் களுக்கான பணிமனை தொடங்கியது.
இந்த பயிற்சியில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தொழிற்கல்வி ஆசிரியர் க.ராஜா உள்ளிட்டோர் வேலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிமனையானது மார்ச் 15-ந் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடை பெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் 11,12-ம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட உள்ளன.
மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து இப் பணிமனையை நடத்துகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முதல்வர் செல்வி, நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது, வரும் ஞாயிற்றுக்கிழமை 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரத்து 345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 934 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர் கள், சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள் ளவர்கள், பொம்மை விற்பனை யாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 3,548 பணியாளர்களும் மேற்பார்வையிட 116 பணியாளர்களும் ஏற்படுத்தப்பட உள்ளன.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகள் எடுத்துச் செல்லவும் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 56 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள், பேனர்கள், போஸ்டர்கள், அடையாள மை பேனாக்கள் மற்றும் முகாமிற்கு தேவையான அனைத்து பொருட்களும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் இருந்து பெறப்பட்டு முகாம் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே வழக்கமாக போடும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை போட்டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என பேசினார்.
கைதி தப்பி ஓடிய சம்பவத்தால் வேலூர் ஜெயிலில் காவலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ் வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்கிற முத்துக்குமார்.இவர் கொலை வழக்கு தொடர்பாக பள்ளிகொண்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டார்.
தொடர்ந்து இவருக்கு வேலூர் கோர்ட்டு மூலம் 2019-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் வேலூர் ஜெயிலுக்கு எதிரே உள்ள சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் சிறைத் துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது.
முன்னதாக அந்த இடத்தைத் தூய்மை செய்யும் பணிக்காக ஆயுள் கைதி நந்தா உள்ளிட்ட 21 கைதிகளை சிறை வார்டன்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதை சற்றும் எதிர்பாராத வார்டன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் நந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் நந்தாவை பிடிப்பதற்காக பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஒரு குழுவும், சிறைத் துறையினர் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு வேலூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நன்னடத்தை கைதிகளை சிறைக்கு வெளியே அழைத்து சென்று பணியில் ஈடுபடுத்தும் போது கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்தது.
நந்தாவை அழைத்துச்சென்ற சிறைக்காவலர்கள் சரவணன், சுரேஷ், அன்பரசு மற்றும் துப்புரவு தொழிலாளி உள்பட 4 பேரை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை எஸ்.பி ருக்மணி பிரியதர்ஷினி நேற்று உத்தரவிட்டார்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலூர்:
திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருநங்கைகள் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறன்களை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைக்கும் திருநங்கைகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ந்தேதி திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2021-22-ம் நிதியாண்டுக்கான திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதினை பெற விரும்பும் திருநங்கைகள் அரசு உதவி எதுவும் பெறாமல் தாமாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும்.
குறிப்பாக திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. இந்த தகுதிகள் உள்ள திருநங்கைகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான பயோடேட்டா, ஒரு பக்க அளவிலான சாதனை புரிந்த விவரம், ஏற்கனவே விருதுகள் எதாவது பெற்றிருந்தால் அதன் விவரம், புகைப்படத்துடன் கூடிய செயல் முறை விளக்கம், சேவைகளை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை இருக்க வேண்டும்.
மேலும் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் சமூக பணியாளர் இடத்தின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வரும் 28-ந் தேதி மாலைக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், 2மாவட்ட கலெக்டர் அலுவலகம், என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வேலூர் மெயின் பஜார் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் மெயின் பஜார் அருகே உள்ள சர்க்கார் மண்டித் தெருவில் மசூதி கட்ட ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று காலை மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெயின் பஜாரில் உள்ள நகை, அடகு கடைகள், டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
மேலும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டனர்.
இதேபோல மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும் ஒன்று திரண்டனர். ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அந்த இடத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.இரு தரப்பினரும் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பினர் இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவியது.
வேலூரில் தாய் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஜான் ஜெயகரன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் ரொனால்டினோ இமானுவேல் (வயது 17). ஒரு மகள் உள்ளார்.
கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக ஜெயகரன் இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகன் மகளுடன் வசித்து வந்தார்.
ரொனால்டினோ இமானுவேல் டான் பாஸ்கோ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.மாலை நேரங்களில் வெல்டிங் வேலைக்கு சென்றார்.
படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டாம் என சுதா அவரது மகனை கண்டித்தார்.
இதனால் ரொனால் டினோ இமானுவேல் மனமுடைந்தார். நேற்று மாலை சுதா அவரது மகளுடன் வெளியே சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ரொனால்டினோ இமானுவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடுதிரும்பிய சுதா மகன் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதார்.
வேலூர் தெற்கு போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.