என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயானக்கொள்ளை திருவிழா நடைபெற உள்ள இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி இன்று நடந்தது
வேலூர்பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரம்
வேலூர் பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரம் நடந்து வருகிறது.
வேலூர்
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை நாளில் முன் னோர்களை நினைவு கூர்ந்து வழிபடும் வகையில், வேலூர் மாவட்டத்தில் ‘மயானக் கொள்ளை‘ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர், விருதம்பட்டு, ஓல்டு டவுன், தோட்டப்பாளையம், கோட்டை சுற்றுச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அங்காளம்மன் மற்றும் காளியம் மன் கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட புஷ்ப பல்லக்கு மற் றும் தேர்களில் ஊர்வலமாக,
வேலு£ர் புது பஸ் நிலையத்தில் இருந்து அம்மன், அருகே உள்ள பாலாறு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சுண்டல், பழ வகை கள், மாவிளக்கு, தானியங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை மயான சூறையிட்டு அங்காளம் மனை பக்தர்கள் பக்தி பரவசத் துடன் வழிபடுவது வழக்கம். 10 அதன்படி, இந்த ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா, வரும் 2-ந் தேதி நடக்கிறது.
இதை யொட்டி, வேலு£ர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற் றங்கரை பகுதியை சுத்தம் செய் யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், அங்கு மண்ணில் அம்மன் உருவம் பணிகளும் வடிவமைக்கும் தொடங்கியுள்ளது.
Next Story






