என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சி மேயருக்கான புதிய அங்கியை கமிஷனர் அசோக்குமார் இன்று பார்வையிட்டார்.
    X
    வேலூர் மாநகராட்சி மேயருக்கான புதிய அங்கியை கமிஷனர் அசோக்குமார் இன்று பார்வையிட்டார்.

    வேலூர் மேயருக்கு புதிய அங்கி தயார்

    வேலூர் மேயருக்கு புதிய அங்கி தயார் செய்யப்பட்டுள்ளது.

    வேலூர்

    வேலூர் மாநகராட்சி 60 வார்டு கவுன்சிலர்களுகாண வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.அ.தி.மு.க 7, சுயேட்சை 6 இடங்களிலும் பா.ம.க. பா.ஜ.க தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு வருகிற 2&ந் தேதி காலை 11 மணிக்கு வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் புது பொலிவு படுத்தும் பணி நடந்து வருகிறது.
    மேலும் மேயர், துணை மேயர் அறைகளும் தயார் செய்து வருகின்றனர்.

    மாநகராட்சி மேயர் பயன்படுத்தும் வெள்ளி செங்கோல், 140 பவுன் தங்க செயின் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் அணியக்கூடிய அங்கி கடந்த 2008&ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த அங்கி பயன்படுத்தப்படவில்லை.

    இதனால் இந்த முறை மேயருக்கான அங்கி புதிதாக தயார் செய்ய முடிவு செய்துள்ளனர். தி.மு.க.வில் மேயர் யார் என அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவு செய்து புதிய அங்கி தயார் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×