என் மலர்
வேலூர்
பெண்கள் தங்கள் உடலை பேணி பாதுகாக்க வேண்டுமென டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேசினார்.
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 277 பெண் போலீசாருக்கு பயிற்சி இன்று தொடங்கியது. வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பெண்கள் தங்களது உடலை பேணி பாதுகாக்க வேண்டும். குடும்பப் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் அனைவரையும் கவனிக்க முடியும். சமுதாயத்தில் பெண்கள் முக்கியமானவர்கள்.
தற்போது பயிற்சி பெற உள்ள நீங்கள் அனைத்து பயிற்சிகளையும் நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்கு கடைசி வரை கை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி ரவிச்சந்திரன் பயிற்சி பள்ளி முதல்வர் அசோக் குமார் கவாத்து பயிற்சியாளர் பாலாஜி சட்ட பயிற்சியாளர் கனிமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வன விலங்குகளின் தாகம் தீர்க்க வேலூர் மாவட்டத்திலுள்ள வனப் பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தைச் சுற்றி வனப் பகுதிகளும், காப்புக் காடுகளும் நிறைந்துள்ளன. இவற்றில் மான்கள், நரிகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள் உள்ளிட்ட பறவைகளும் அதிகளவில் உள்ளன.
இதுதவிர, வேலூர் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து யானைகளும் அவ்வப்போது வேலூர் வனப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
இந்த நிலையில், கோடைக்காலம் தொடங்கி, நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் வனப் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால், வன விலங்குகள் தண்ணீருக்காக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
வனப் பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும், விஷமிகளால் இரையாக்கப்படுவதும் நடைபெறுகின்றன.
இதைத் தவிர்க்க, வனப் பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் இருக்கவும், வனப் பகுதிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள அந்தந்த வனச் சரக ஊழியர்கள் டிராக்டர் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று, வனப்பகுதியிலுள்ள தொட்டிகளில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொட்டிகளில் நீர் இருப்பை அவ்வப்போது கண்காணித்து, வாரத்தில் ஒரு முறையேனும் தண்ணீர் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் கோடைக்காலம் முடியும் வரை நடைமுறைப்படுத் தப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை, மாதகடப்பா, நெக்னாமலை, காவனூர், பனங்காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரும் ஒருசில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் தூக்கி போடுவதால் மூலிகை செடிகள், வன உயிரினங்கள் தீயில் கருகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் வன மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதிகள் உள்ளன.
இங்கு ஏராளமான வன விலங்குகளும், அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும், மருத்துவ குணம் கொண்ட செடி, கொடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கோடை காலம் நெருங்குவதால் இலைகள் காய்ந்து சருகாகிறது.
இதனால் விஷமிகள் காய்ந்த கருகிற்கு தீ வைக்கின்றனர். கடந்த சில நாட்களாக ஏலகிரிமலை, நெக்கனாமலையில் தீ வைப்பு சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, மூலக்கொல்லை, சைதாப்பேட்டை, வேலப்பாடி, ஓல்டுடவுன் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலைப்பகுதிலும் தீ வைப்பு சம்பவம் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.
திருப்பத்தூர் வன மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை, மாதகடப்பா, நெக்னாமலை, காவனூர், பனங்காட்டேரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீ வைப்பதால் அந்த பகுதி முழுவதும் தீயினால் சேதமடைந்துள்ளது.
தீ வைப்பு சம்பவத்தில் ஈடுடுபடுபவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
எனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து வனப்பகுதிக்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டு சட்டம் பதிவு செய்து அவர்கள் கைது செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்கும்.
வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்து தீ வைப்பவர்களை பொதுமக்கள் கண்டால் உடனடியாக திருப்பத்தூர் வனசரக அலுவலகம் 99943 94417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.
வேலூர், ஏலகிரி, வாணியம்பாடியில் மலைகளுக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி, மூலக்கொல்லை, சைதாப்பேட்டை, வேலப்பாடி, ஓல்டுடவுன் பகுதியை சூழ்ந்து மலை உள்ளது.
இந்த மலையில் கோடை காலத்தில் அடிக்கடி தீ பற்றி எரிகிறது. கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த மலைகளில் தீ பற்றியது.
இதில் ஏராளமான செடி, கொடிகள் எரிந்து நாசமானது. வேலூரில் சமீபத்தில் பெய்த மழையால் கண்ணுக்கு பசுமையாக காட்சியளித்த மலைகள் தற்போது எரியும் தீயால் வறண்டு காணப்படுகிறது. தீ எப்படி பிடிக்கிறது என்று வனத்துறையினருக்கு இதுவரை தெரியவில்லை.
தீ வைக்கும் கும்பலை வனத்துறையினர் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏலகிரி மலையானது 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் தமிழ் புலவர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது.
மேலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோசன நிலை நிலவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரும் சமூக விரோதிகள் சிலர் விடுமுறை நாட்களில் மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விடுவதால் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் காய்ந்து கிடக்கும் சருகுகளால் தீப்பிடித்து அரிய வகை மரங்கள் மூலிகைச் செடி கொடிகள் உள்ளிட்ட கரடி மான் முயல் மலைப் பாம்பு போன்ற உயிரினங்கள் தீயில் கருகி உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சமூக விரோதிகள் ஏலகிரி மலைக்கு வந்து மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டுச் சென்றதால் சிறிய அளவில் பற்றிய தீயானது மளமளவென 4 வது வளைவில் இருந்து 9 வது கொண்டை ஊசி வளைவுகள் வரைக்கும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதனால் பல்வேறு அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் காட்டுப் பகுதியில் வசிக்கும் உயிரினங்கள் போன்றவை தீயில் கருகியது.
மேலும் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரிமலை வனத்து பரந்தாமன் தலைமையிலான வனக்காவலர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் காட்டுத் தீயானது மளமளவென பரவி மலையில் மேல் பகுதிக்கு சென்றது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
பின்னர் மலைச் சாலைகளில் பற்றி எரிந்ததால் ஏலகிரி மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் செல்லமுடியாமல் அனலின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து காட்டுத் தீ வைத்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டும், பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவாரத்தில் 3&வது முறையாக ஏலகிரிமலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வனசரகத்திற்கு உட்பட்ட நெக்னாமலை, வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் நெக்னாமலை ஊராட்சி மலை கிராமம் உள்ளது. இந்த காட்டின் வழியாக மலை கிராமங்களுக்கு செல்பவர்களும், இந்த வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து கொண்டு சென்று மீண்டும் திரும்பி வருபவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த காட்டுப்பகுதிக்கு மர்மகும்பல் தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவி காடுகள் முழுவதும் எரிந்து வருகின்றது. வனத்துறை அதிகாரிகள் வந்து தீயை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வந்தாலும், 100&க்கும் மேற்பட்ட ஏக்கர் காடுகள் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி வரை எரிந்தது.
வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும், மாடுகளும் மீண்டும் வீடு திரும்பாமல் காட்டுப்பகுதியில் உள்ளதால், இதில் அவைகளும் எரிந்து கருகி இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால் மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் காடுகளுக்கு தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதி முழுவதும் எரிந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதில் அலட்சிய போக்காக இருப்பதால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
வேலூரில் புகழ்பெற்ற சி.எம்.சி. ஆஸ்பத்திரி, தங்க கோவில், வி.ஐ.டி பல்கலைக் கழகம் மற்றும் பல கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன.
சென்னை, பெங்களூர் மெட்ரோ நகரங்களுக்கு இடையில் பெரிய மாநகரமாக வேலூர் உள்ளது. வேலூரிலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ், ரெயில் போக்குவரத்து உள்ளது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காகவும், தங்க கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் வேலூர் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன பிற இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய மீன் மார்க்கெட் அருகே இருந்து இயக்கப்படுகிறது.
மக்கள் தொகையும், வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அளவிற்கு வேலூரில் புதிதாக பாலமோ, சாலை அமைப்போ ஏற்படுத்தவில்லை. இதனால் வேலூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேஷனல் தியேட்டர் சர்க்கிள் கிரீன் சர்க்கிள் வரை வாகனங்களின் அணிவகுப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பழைய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள மண்டி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான சாலைகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசாரும் அடிக்கடி போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை. அண்ணா சாலையில் இருந்து காட்பாடி, சத்துவாச்சாரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மக்கான் சிக்னலில் திரும்பாமல் பழைய பைபாஸ் சாலையில் செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதிலும் நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணவில்லை.
சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து போலீசாரால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே போக்குவரத்து போலீசார் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தனர். மேலும் வேலூர் மாநகரை சேர்ந்தவர்களும் விஷேசங்களுக்கு செல்வதற்காக வாகனங்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர் அண்ணா சாலை, கிரீன் சர்க்கில், சத்துவாச்சாரி, சேண்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி திணறின. சுமார் 3 மணி நேரம் வாகனங்களின் நடுவில் சிக்கிக்கொண்டு வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் திணறினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிபிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
சாலை வசதி மற்றும் புதிதாக பாலங்கள் அமைக்காவிட்டால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. வேலூர் இதய பகுதியான கிரீன் சர்க்கிளே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய பகுதியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் கிரீன் சர்க்கிளுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்க வேண்டும். அதற்கு புதிதாக 3 இடங்களில் பாலம் அமைத்தால் தீர்வு காணப்படலாம்.
நேஷ்னல் சிக்னலில் இருந்து பெட்ரோல் பங்க் வழியாக செல்லும் சாலை 6 வழிச்சாலையில் முட்டும் இடத்தில் சுரங்கப்பாலம் அமைத்து புதிய காட்பாடி பாலாற்று பாலத்துடன் இணைக்க வேண்டும். அவ்வாறு அதில் சுரங்கப்பாதை அமைத்தால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிளுக்கு செல்லாமல் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடிக்கு செல்லலாம். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் இந்த சுரங்கப்பாதையும் அமைத்தால் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேலூர் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. ஆபீஸ் சாலை வழியாக பாலாற்றில் புதிதாக தரைப்பாலம் அமைத்து காங்கேயநல்லூர் ரவுண்டானாவை இணைக்க வேண்டும்.
இதனால் ஆந்திரா, காட்பாடி பகுதியில் இருந்து வாகனங்கள் கிரீன் சர்க்கிள் செல்லாமல் சத்துவாச்சாரியை அடைந்து சென்னை, ராணிப்பேட்டை, வாலாஜாவுக்கு செல்லலாம். இதே வழியை சத்துவாச்சாரியில் இருந்து காட்பாடிக்கு செல்பவர்களும் பயன்படுத்துவார்கள்.
காங்கேயநல்லூர், சத்துவாச்சாரி தரைப்பாலம் அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ரங்காபுரம் பஸ் டெப்போ எதிரில் இருந்து பிரம்மபுரத்தை இணைக்கும் வகையில் பாலாற்றில் பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாலம் கட்ட நீண்ட பாலம் பிடிக்கும் என்பதால் அதற்கு முன்பாக தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் சேண்பாக்கம் ரெயில்வே பாலத்தையொட்டி புதிதாக ஒரு பாலம் அமைத்தால் காட்பாடி, ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வராமல் செல்லலாம்.
வேலூர், மக்கான் சிக்னலில் இருந்து நேஷனல் சிக்னல் வரை பாலம் அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு கிடப்பில் உள்ளது. அதனை செயல்பாட்டு கொண்டு வந்தால் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு முன்பே கிரீன் சார்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் மேலும் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து பெரும் அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ந்து வரும் மாநகரத்தில் புதிதாக பாலம் கட்டாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மறுதினம் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுளளது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்துவாச்சாரி பேஸ் 1 முதல் 5 வரை, வள்ளலார், ரங்காபுரம் அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை காகிதப்பட்டறை, கலெக்டர் ஆபீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல் தொரப்பாடி, சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம் விருப்பாச்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 4 மாவட்ட பெண் போலீசாருக்கு நாளை பயிற்சி வகுப்பு தொடக்கம்.
வேலூர்:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுசெய்யப்பட்ட போலீசாருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற வில்லை.
இந்த நிலையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 277 பெண் போலீசாருக்கு நாளை (திங்கட்கிழமை) வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
தேர்ச்சி பெற்ற பெண் போலீசார் இன்று காலை முதலே காவலர் பயிற்சி வகுப்பிற்கு தங்கள் உடமைகளுடன் பெற்றோர்களை அழைத்து வந்தனர். பயிற்சி வகுப்பிற்கு வந்த பெண் போலீசாருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் நெகட்டிவ் சான்று இல்லாமல் வந்தவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதையடுத்து 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாக அமரவைத்து சான்றிதழ், ஆதார் எண் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு பயிற்சி வகுப்பை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தொடங்கி வைக்க உள்ளதாக காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் அசோக் குமார் தெரிவித்தார்.
குடியாத்தம் ஓட்டலில் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் அண்ணா தெருவில் பிரபல ஓட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு மர்ம நபர் ஓட்டலின் மாடிப்பகுதி வழியாக உள்ளே இறங்கி கண்காணிப்பு கேமராக்களின் மானிட்டரை திருடிச் சென்றுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது இது குறித்து இந்த ஓட்டலின் மேலாளர் ரஞ்சித் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். கண்காணிப்பு கேமராக்களின் பதிவினை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் பிச்சனூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சோபன்பாபு (வயது 40) தொழிலாளி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் சோபன்பாபுவை கைது செய்து அவரிடம் இருந்த சிசிடிவி கேமராக்களின் மானிட்டரை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள், பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை அலுவலர் ஆர்.அன்பழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு ஒரு விவசாயிக்கு மானிய விலையில் ரோட்டாவேட்டர் கருவியும், விவசாயிகளுக்கு மானிய விலையில் 2500 தென்னங்கன்றுகளையும், தார்பாய்கள், விவசாய பண்ணை கருவிகள் வழங்கினார்.
குடியாத்தத்தில் கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் மங்களம் கிராமத்தை சேர்ந்த சாயிதா பேகம் (வயது 39).
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ஷான்பாஷா செய்யாறு கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஷான் பாஷா குடும்பத்துடன் குடியாத்தம் காட்பாடி ரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டு எதிரே உள்ள ராஜகோபால் நகரில் வசித்து வருகிறார்.
சாயிதாபேகம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சாயிதா பேகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது கணவர் ஷான்பாஷா குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் சாயிதா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாயிதாபேகம் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் மங்களம் கிராமத்தை சேர்ந்த சாயிதா பேகம் (வயது 39).
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ஷான்பாஷா செய்யாறு கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஷான் பாஷா குடும்பத்துடன் குடியாத்தம் காட்பாடி ரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டு எதிரே உள்ள ராஜகோபால் நகரில் வசித்து வருகிறார்.
சாயிதாபேகம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சாயிதா பேகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது கணவர் ஷான்பாஷா குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் சாயிதா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாயிதாபேகம் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர்:
கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக அமைகிறது. அதனால் அரசின் சார்பில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதாக போட்டுக் கொள்ளும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2&வது தவணை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
2&ம் தவணை செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.
திருவிழாவையொட்டி, கடந்த 1&ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. 11-ந் தேதி அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை படவேட்டம்மன் உற்சவமும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.






