என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்ட காட்சி.
குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள்
குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள், பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை அலுவலர் ஆர்.அன்பழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு ஒரு விவசாயிக்கு மானிய விலையில் ரோட்டாவேட்டர் கருவியும், விவசாயிகளுக்கு மானிய விலையில் 2500 தென்னங்கன்றுகளையும், தார்பாய்கள், விவசாய பண்ணை கருவிகள் வழங்கினார்.
Next Story






