என் மலர்
வேலூர்
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி பாதுகாப்புக்கு வேலூரில் இருந்து 300 போலீசார் பயணம் சென்றனர்.
வேலூர்:
திருவண்ணாமலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி விழா நடைபெறவில்லை. தொற்று பரவல் குறைந்ததையடுத்து தமிழக அரசு பல்வேறு தலர்வுகளை அறிவித்துள்ளது.
இதையடுத்து சித்ரா பௌர்ணமி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி மற்றும் 3 டிஎஸ்பி தலைமையில் 300 போலீசார் இன்று நேதாஜி மைதானத்திலிருந்து பஸ்கள் மூலம் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலூரில் பெண் டாக்டரை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த மாதம் 17-ந்தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர்.
படம் முடிந்து இரவு 1 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறினர்.
இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார்.இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.
காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.
அப்போது பெண் டாக்டர் ஆட்டோ திசை மாறி செல்கிறதே ஏன் என்று கேட்டார். அந்த பாதையில் வேலை நடப்பதால் சுற்றி செல்வதாக கூறினார்.
கலெக்டர் அலுவலகம் சர்வீஸ் ரோட்டில் வந்த ஆட்டோ பாலாற்றங்கரைக்கு சென்றது. அப்போது பெண் டாக்டரும், அவருடன் வந்த நண்பரும் ஆட்டோவில் இருந்தவர்களிடம் எங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறினர்.
2 பேரையும் பாலாற்றின் கரைக்கு கடத்திச்சென்று அவர்களை தாக்கினர். அவர்கள் வைத்திருந்த ஏடிஎம் கார்டுகள் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆண் நண்பரை 2 பேர் ஆட்டோவில் அழைத்து சென்று வேலூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் அவர்களது கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.40,000 பணம் எடுத்தனர்.
மேலும் பெண் டாக்டரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பெண் டாக்டர் பணம் நகையை எடுத்து விட்டீர்கள்.தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சி கேட்டும் இந்த கும்பல் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் மிருகத்தனமாக நடந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் ஆன்லைன் மூலமாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துவாச்சாரி வ.உ.சி நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 20), சந்தோஷ்குமார் (22,), நேரு நகரை சேர்ந்த பாரத் (18), மணிகண்டன்(21) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
சிறுவன் சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளி காப்பகத்தில் அடைக்கப்பட்டார். மற்றும் 4 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 17 வயது சிறுவனை தவிர்த்து மற்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான நகலை ஜெயிலில் உள்ள 4 பேரிடம் போலீசார் வழங்கினர்.
வேலூரில் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூர்:
வருடந்தோரும் ஏப்ரல் 14&ந் தேதி தேசிய தீயணைப்புத்துறையில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலைய வளாகத்தில் தீவிபத்து மற்றும் மீட்பு அழைப்புகளில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு, வேலூர் வடமேற்கு மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
வேலூர் மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர் சரவணன், உதவி மாவட்ட அலுவலர் தலைமையகம் முகுந்தன் மற்றும் வீரர்கள் மலர் வளையம் வைத்துவீரவணக்கம் செலுத்தினர். மேலும், இன்று முதல் 20&ந் தேதி வரை தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம், போலீஸ் நிலையங்களில் தற்கொலை முயற்சி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய முறையில் தீர்வு கிடைக்கவில்லை எனில் அந்தந்த துறையின் உயர் அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டு அதற்குண்டான தீர்வினை காண அறிவுறுத்தப்படுகிறது.
அதை விடுத்து விலை மதிப்பற்ற தாக போற்றப்படும் மனித உயிர்களை கெரோசின், பெட்ரோல் போன்ற பொருட்களை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு அரசுக் கட்டிடங்களின் வளாகத்தின் உள்ளேயும், காவல் நிலையங்களின் முன்பும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிப்பது சரியான தீர்வாகாது.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படியான குற்றமாகும். இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராகினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூரில் கோபித்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் அருகே கையை அறுத்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் மேல் பாடியில் போலீசார் தொல்லை தருவதாக கூறி வாலிபர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாலிபர் ஒருவர் நிலபிரச் சினையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்றார். கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனால் தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாலும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத தாலும் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு கோபித்து கொண்டு சென்றுவிட்டார் அவரை சேர்த்து வைக்கக்கோரி வாலிபர் ஒருவர் போலீசிஸ் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமோசா வியாபாரம் செய்து வருகிறார்.இவர் நேற்று வடக்கு போலீஸ் நிலையம் முன்பு வந்து திடீரென தனது கையை அறுத்துக் கொண்டார். இதைக் கண்ட போலீசார் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். கையை அறுத்துக் கொண்ட வாலிபருக்கு முதலுதவி அளித்தனர்.
அவரிடம் விசாரித்ததில் எனக்கு திருமணமாகி 5 ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவியுடன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.நான் குடும்பம் நடத்த அழைத்தும் வர மறுக்கிறார்.
மேலும் அவரது குடும்பத்தினரும் என்னை தாக்க வருகின்றனர். தயவுசெய்து என்னோடு மனைவியை சேர்த்து வையுங்கள்.அதற்காகத்தான் கையை அறுத்துக் கொண்டேன் என கூறினார் இதனைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கணவன்- மனைவிக்குள் சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று.
இது குறித்து மனு அளித்திருந்தால் அழைத்துப் பேசி சமாதானம் செய்து வைத்திருப்போம். ஆனால் இப்படி கையை அறுத்துக்கொண்டதால் உனக்கு தான் கஷ்டம்.நீதான் அவதிப்பட வேண்டும் என அறிவுரை கூறினர் அப்போது அவர் சரி மாமு என்றார்.
அப்போதுதான் வாலிபர் மதுபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.இதனையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் இன்று தங்க கவச அலங்காரத்தில் பாலமுருகன் அருள் பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனை வருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப் பட்டது. வள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையிலேயே மூலவர் சாமி சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் பேரி சுப்பிரமணியசாமி கோவில்களில் இன்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பாலமதி முருகன் கோவில் தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சங்ராந்தி புருஷர் ஆண்புலி வாகனத்தில் பாலவ நாம கரணத்தில் வருகிறார். இதனால் உயிரினங்களுக்கு உண்ண உணவு தங்குமிடத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.
வேலூர்:
ஆற்காடு கா.வெ.சீதா ராமய்யர் சர்வ மகூர்த்த பஞ்சாங்கத்தை லாவன்யா பதிப்பக கணிதர் கே.என். சுந்தராஜன் ஐயர் கணித்துள்ளார். அவர் பஞ்சாங்கத்தில் கணித்துள்ள தகவல் படி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.
அதன்படி தற்போதுள்ள நடைமுறைகள் படி பஞ்சாங்கத்தில் கணித்திருப்பதாவது:-
மேஷ ராசிக்கு சூரியன் இன்று காலை 7.36 மணிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி செவ்வாய் ஓரையில் சுபகிருது புத்தாண்டு பிறந்தது. ஏற்கனவே மேஷ ராசியில் புதன், ராகு வீற்றிருக்கின்றனர். தற்போது சூரியன் பெயர்ச்சியானதால் மேஷ ராசியில் புதன், ராகு, சூரியன் இருக்கின்றனர். இது அரிய நிகழ்வாகும். இதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
ஆன்லைன் பரிவர்த்தனை அதிகளவில் நடக்கும். மழை பொழிவும் அதிகமாக இருக்கும் வெயில் தாக்கம் இருந்தாலும் மழையால் குளிர்ச்சி சூழ்நிலை ஏற்படும். விஷ காய்ச்சல் பரவும் ஆனால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. 3 நாட்களில் பாதிப்பு சரியாகிவிடும்.
மகா சங்ராந்தி புருஷர் ஆண்புலி வாகனத்தில் பாலவ நாம கரணத்தில் வருகிறார். இதனால் உயிரினங்களுக்கு உண்ண உணவு தங்குமிடத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.
காடு செழிப்புடன் காணப்படும். தமோ மேகம் வடக்கு திசையில் உற்பத்தியாகி வடமாநிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். மீனத்தில் ஆட்சிபெற்ற குரு தனது 5-ம் பார்வையாக கடக ராசியையும், 7-ம் பார்வையாக கன்னி ராசியையும், 9-ம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்ப்பதால் உலகம் முழுவதும் பரவலாக நல்ல மழைபெய்து சுபிட்சம் பெருகும் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதனால் ஏரி, குளங்களில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயம் பெருகும்.
இந்த ஆண்டு சூரியன், சந்திரன் ஆகிய 2 கிரகணங்களும் செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனால் நோய் தாக்கம் பெருமளவில் குறையும், தொற்று நோய் அழியும். கல்வி வளர்ச்சி ஏற்படும். புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக செயல்படுத்தப்படும்.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலவநாம கரணத்தில் ஆண் புலி வாகனத்தில் மகா சங்கராந்தி புருஷர் வருவதால் இந்த ஆண்டு ராகு, கேது, குரு பெயர்ச்சி இல்லை.
புதன், ராகு, சூரியன் ஒரே வீட்டில் இருப்பதால் அதிக பலன்களே கிடைக்கும்.
ஆற்காடு கா.வெ.சீதா ராமய்யர் சர்வ மகூர்த்த பஞ்சாங்கத்தை லாவன்யா பதிப்பக கணிதர் கே.என். சுந்தராஜன் ஐயர் கணித்துள்ளார். அவர் பஞ்சாங்கத்தில் கணித்துள்ள தகவல் படி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.
அதன்படி தற்போதுள்ள நடைமுறைகள் படி பஞ்சாங்கத்தில் கணித்திருப்பதாவது:-
மேஷ ராசிக்கு சூரியன் இன்று காலை 7.36 மணிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி செவ்வாய் ஓரையில் சுபகிருது புத்தாண்டு பிறந்தது. ஏற்கனவே மேஷ ராசியில் புதன், ராகு வீற்றிருக்கின்றனர். தற்போது சூரியன் பெயர்ச்சியானதால் மேஷ ராசியில் புதன், ராகு, சூரியன் இருக்கின்றனர். இது அரிய நிகழ்வாகும். இதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
ஆன்லைன் பரிவர்த்தனை அதிகளவில் நடக்கும். மழை பொழிவும் அதிகமாக இருக்கும் வெயில் தாக்கம் இருந்தாலும் மழையால் குளிர்ச்சி சூழ்நிலை ஏற்படும். விஷ காய்ச்சல் பரவும் ஆனால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. 3 நாட்களில் பாதிப்பு சரியாகிவிடும்.
மகா சங்ராந்தி புருஷர் ஆண்புலி வாகனத்தில் பாலவ நாம கரணத்தில் வருகிறார். இதனால் உயிரினங்களுக்கு உண்ண உணவு தங்குமிடத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.
காடு செழிப்புடன் காணப்படும். தமோ மேகம் வடக்கு திசையில் உற்பத்தியாகி வடமாநிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். மீனத்தில் ஆட்சிபெற்ற குரு தனது 5-ம் பார்வையாக கடக ராசியையும், 7-ம் பார்வையாக கன்னி ராசியையும், 9-ம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்ப்பதால் உலகம் முழுவதும் பரவலாக நல்ல மழைபெய்து சுபிட்சம் பெருகும் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதனால் ஏரி, குளங்களில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயம் பெருகும்.
இந்த ஆண்டு சூரியன், சந்திரன் ஆகிய 2 கிரகணங்களும் செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனால் நோய் தாக்கம் பெருமளவில் குறையும், தொற்று நோய் அழியும். கல்வி வளர்ச்சி ஏற்படும். புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக செயல்படுத்தப்படும்.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலவநாம கரணத்தில் ஆண் புலி வாகனத்தில் மகா சங்கராந்தி புருஷர் வருவதால் இந்த ஆண்டு ராகு, கேது, குரு பெயர்ச்சி இல்லை.
புதன், ராகு, சூரியன் ஒரே வீட்டில் இருப்பதால் அதிக பலன்களே கிடைக்கும்.
இவ்வாறு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்ற சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்-தாமஸ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது அப்போது நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் 9 பேர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டத்-திற்குள் வந்து நகர மன்ற தலைவரிடம் பொதுமக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் கையெழுத்-திட்ட மனு அளித்தனர்.-
அப்போது நகர்மன்ற தலைவர் சவுந்த-ரராசன் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி வேண்டும் அதற்காக தான் தமிழக அரசு சொத்துவரி உயர்த்தியுள்ளது.
நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
ஆவின் டெண்டரை ரத்து செய்யக்கோரி கலெக்டர் பெயரில் போலி உத்தரவு அனுப்பிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு இ-மெயிலில் இருந்து கடந்த மாதம் 8-ந்தேதி அதே நிர்வாக பொது மேலாளரின் இ-மெயிலுக்கு கடிதம் ஒன்று சென்றது.
அந்தக் கடிதத்தை பொது மேலாளர் ரவிக்குமார் பார்த்தபோது, அதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவு நகல் ஒன்று இருந்தது.
அதில், ஆவினில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட 12 வகையான டெண்டர்களில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே அதை நிவர்த்தி செய்து மறு டெண்டர் விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கலெக்டரின் உத்தரவு தொடர்பாக வந்த இ-மெயில் குறித்து சந்தேகம் அடைந்த பொதுமேலாளர் இதுகுறித்து கலெக்டர் அலுவலக நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
பின்னர் அந்த இ-மெயிலில் வந்த உத்தரவு போலியான உத்தரவு என்பது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் (பொது) வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்-கண்ணனிடம் புகார் தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஆவின் ஒப்பந்ததாரரான ஜெகன் என்ற ஜெயச்சந்திரன் (வயது 35) போலியான உத்தரவு நகலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் மீதான செயல்பாடுகள் குறித்து ஆவின் நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது. இவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்றனர்.
லாங்கு பஜாரில் நெரிசலை குறைக்க பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் வாகன நிறுத்தும் இடமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வேலூர்:
வேலூர் லாங்கு பஜாரில் நேதாஜி மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் பலர் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். பஜார் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மார்க்கெட்டுக்கு வருபவர்கள் வண்டியை நிறுத்த இடமில்லாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் அருகே உள்ள பழைய மீன் மார்க்கெட் வளாகத்தை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் ஏலம் கோரப்பட்டுள்ளது
குடியாத்தத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து 8 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியில் கடைகள், வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கும் பைக்குகளை திருடி செல்கின்றனர். இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் பைக் திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி செதுகரை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது பைக்கை திருடிச் சென்றனர். இது குறித்து அவர் குடியாத்தம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர்.
நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
அப்போது அதில் ஒருவன் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் போலவே இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் மொய்தீன் பேட்டை மசூதி அருகே பைக் திருடியது தெரியவந்தது.
அவர்கள் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தைச் சேர்ந்த அம்பேத்கர் (வயது 30 ) வேன் டிரைவர் என்பதும், இவரது நண்பர்கள் கஸ்பா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (24) கட்டிட தொழிலாளி, தன கொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த விக்ரம்( 21) ஆட்டோ டிரைவர் என்பதும் இவர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்து 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது. மேலும் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஏடிசி மாவட்ட தலைவர் சங்கர் மேஸ்திரி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் தீபா குணசேகரன், தாலுக்கா தலைவர் நித்தியானந்தன், செயலாளர் அன்பு, துணை செயலாளர் சுப்பிரமணி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தேவதாஸ் மாவட்ட செயலாளர் சாம்பசிவம் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பேறு காலத்தில் 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.
இ எஸ் ஐ பி எப் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரிய பதிவுக்கு விஏஓ சான்று கூறுவது கைவிட வேண்டும்.
நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்த ஒரு வார காலத்தில் கிடைக்கச் செய்திட வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவு வாரியம் முழுமையாக ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.






