என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் போலீஸ் நிலையம் அருகே கையை அறுத்த வாலிபர்
வேலூரில் கோபித்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் அருகே கையை அறுத்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் மேல் பாடியில் போலீசார் தொல்லை தருவதாக கூறி வாலிபர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாலிபர் ஒருவர் நிலபிரச் சினையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்றார். கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனால் தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாலும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத தாலும் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு கோபித்து கொண்டு சென்றுவிட்டார் அவரை சேர்த்து வைக்கக்கோரி வாலிபர் ஒருவர் போலீசிஸ் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமோசா வியாபாரம் செய்து வருகிறார்.இவர் நேற்று வடக்கு போலீஸ் நிலையம் முன்பு வந்து திடீரென தனது கையை அறுத்துக் கொண்டார். இதைக் கண்ட போலீசார் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். கையை அறுத்துக் கொண்ட வாலிபருக்கு முதலுதவி அளித்தனர்.
அவரிடம் விசாரித்ததில் எனக்கு திருமணமாகி 5 ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவியுடன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.நான் குடும்பம் நடத்த அழைத்தும் வர மறுக்கிறார்.
மேலும் அவரது குடும்பத்தினரும் என்னை தாக்க வருகின்றனர். தயவுசெய்து என்னோடு மனைவியை சேர்த்து வையுங்கள்.அதற்காகத்தான் கையை அறுத்துக் கொண்டேன் என கூறினார் இதனைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கணவன்- மனைவிக்குள் சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று.
இது குறித்து மனு அளித்திருந்தால் அழைத்துப் பேசி சமாதானம் செய்து வைத்திருப்போம். ஆனால் இப்படி கையை அறுத்துக்கொண்டதால் உனக்கு தான் கஷ்டம்.நீதான் அவதிப்பட வேண்டும் என அறிவுரை கூறினர் அப்போது அவர் சரி மாமு என்றார்.
அப்போதுதான் வாலிபர் மதுபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.இதனையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story






