என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
  X
  வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

  வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  வேலூர்:

  வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஏடிசி மாவட்ட தலைவர் சங்கர் மேஸ்திரி தலைமை தாங்கினார்.

  மாவட்ட பொருளாளர் தீபா குணசேகரன், தாலுக்கா தலைவர் நித்தியானந்தன், செயலாளர் அன்பு, துணை செயலாளர் சுப்பிரமணி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார். 

  ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தேவதாஸ் மாவட்ட செயலாளர் சாம்பசிவம் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

  கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பேறு காலத்தில் 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். 

  இ எஸ் ஐ பி எப் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரிய பதிவுக்கு விஏஓ சான்று கூறுவது கைவிட வேண்டும்.

  நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்த ஒரு வார காலத்தில் கிடைக்கச் செய்திட வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவு வாரியம் முழுமையாக ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
  Next Story
  ×