என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த போது எடுத்த படம்.
குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்ற சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்-தாமஸ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது அப்போது நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் 9 பேர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டத்-திற்குள் வந்து நகர மன்ற தலைவரிடம் பொதுமக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் கையெழுத்-திட்ட மனு அளித்தனர்.-
அப்போது நகர்மன்ற தலைவர் சவுந்த-ரராசன் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி வேண்டும் அதற்காக தான் தமிழக அரசு சொத்துவரி உயர்த்தியுள்ளது.
நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Next Story






