என் மலர்
வேலூர்
- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
- ரூ.150 கோடியில் 7 மாடி கட்டிட பணிகள்
வேலூர்:
வேலூர் பெண்ட்லேன்ட் மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், தேவராஜ், வில்வநாதன், மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷ்னர் ஜானகி ரவீந்திரன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தை எனது சொந்த மாவட்டமாக கருதுகிறேன்.
இங்குள்ள பெண்ட்லேன்ட் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த கார்த்திகேயன் கோரிக்கை வைத்தார்.
இதை எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலினும் வலியுறுத்தினார். ஆனால் பணிகள் நடைபெறவில்லை தொடர்ந்து ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ரூ.150 கோடியில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்க 3 பகுதிகளாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது இங்கு தரைத்தளம் தவிர்த்து 7 மாடி கட்டிடம் உருவாகிறது.
18 மாதத்திற்குள் பணியை முடிக்க தெரிவித்துள்ளோம். இப்பணிகள் 3-3 2025 க்குள்முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.மேலும் இங்கு ஆய்வு கூடம் ஒன்று அமைக்க உத்தரவிட்டேன்.அதன் மூலம் மணல், தண்ணீர், கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும்.இங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன.
வேலூர்-விரிஞ்சிபுரம் பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது திட்டம் மதிப்பீடு பணிகள் முழுமை பெற்ற பின்னர் தொடர்ந்து முதல் அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் 10 ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அது குறித்து ஆய்வு செய்து பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- டிரைவர், கண்டக்டரை உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு
- போலீசில் புகார்
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தில் இருந்து குடி யாத்தம் நோக்கி நேற்று முன் தினம் மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால், உள்ளே மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடம்விட்டு, படியில் நின்றபடி மாணவர்கள் வந்தனர். அவர்களை டிரைவர் திருநாவுக்கரசு, கண் டக்டர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பலமுறை எச்சரிக்கை செய்தனர். அவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலேயே பயணம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி வந்த கண்டக்டர், மாணவர்களை கீழே இறங்கும்படி கூறி வாக்குவாதம் செய்தார். அதற்கு மறுத்த ஒரு மாணவரை கண் டக்டர் கன்னத்தில் அடித்த தாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த மாணவர் கீழ் ஆலத்தூரில் இறங்கினார். அவர் தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் பஸ்நிறுத்தத்திற்கு விரைந்து பஸ் குடியாத்தம் சென்று திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.
பஸ் வந்ததும் பஸ்சை நிறுத்தி கண்டக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை ரோஷன் சுபேதார் தெருவை சேர்ந்தவர் இம்ரானா (வயது 15). இவர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அவரது பெற்றோர் மகளிடம் விசாரித்த போது நாளை பள்ளிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மாலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் இம்ரானா தூக்கில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
- தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது.
ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தீ விபத்துகளை தவிர்க்கும் முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
- மின் கசிவால் ஏற்பட்டது
வேலூர்:
காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லப்பின் ஜோனகன். இவரது வீட்டில் நேற்று காலை ஏ.சி. ஓடிக்கொண்டிருந் தது. அப்போது திடீரென அதில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி அருகே வைக்கப்படிருந்த புத்தகங்கள் மீது பிடித்து எரிந்துள்ளது.
இதை பார்த்து ஜோனகன் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏ.சி. சுவிட்சை அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
- அச்சத்தில் உறைந்த பயணிகள்
- விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் ஒடுகத்தூர் இடையே அணைக்கட்டு வழித்தடத்தில் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தனியார் பஸ்களும் அடங்கும்.
அச்சத்தில் உறைந்த பயணிகள்
இந்த நிலையில் நேற்று ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டி ருந்தது. அப்போது அந்த பஸ் டிரைவர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே பஸ்சை ஓட்டிச் சென்றார். சாகசம் செய்வதை போலஒரே கையால் ஸ்டேரிங்கை பிடித்தும், அதே கையால் ஹாரனையும் அடித்தபடி ஓட்டினார்.
சில சமயம் ஸ்டேரிங்கை விட்டுவிட்டு அவர் செய்த ரகளை, பஸ்சில் இருந்த பயணிகளை அச்சத்தில் உறைய செய்தது. இதுகுறித்து பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பொதுமக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
- தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இரண்டு அறைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து உள்ளனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில் பயன்படுத்தப்படும் அறைகள் சேதம் அடைந்து வருவதாகவும் அதனை பராமரிப்பு செய்ய வேண்டி உள்ளதால் அறைகளை காலி செய்ய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் அகல்யா உத்தரவிட்டார்.
இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து இன்று ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் ஆய்வு செய்தார்.
அப்போது ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் பயன்படுத்தும் அறைகளை 3 நாட்களில் காலி செய்து தர வேண்டும். உணவு உண்பதற்காக பயன்படுத்தப்படும் டேபிள் சேர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
- வி.ஐ.டி.யில் மாணவர் பேரவை தொடக்கம்
- தீயணைப்பு துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பேச்சு
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக 5-வது இடத்தில் உள்ளது. நாட்டின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாய் 3.7 டிரில்லியன் டாலராக உள்ளது. எனினும் தனிநபர் வருமானத்தில் இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. இங்கு, தனிநபர் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2,600 டாலராக உள்ளது.
இதற்கு, பெரும்பாலான மக்களுக்கு தரமான கல்வி கிடைக்காததே காரணமாகும். நாடு பொரு ளாதாரத்தில் உயர வேண்டும் என்றால், அதற்கு கல்வியும் வளர் வேண்டும். அதற்கு அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரமக்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:-
"நல்ல பழக்க வழக்கங்கள் தான் சிறந்த எதிர் காலத்தை உருவாக்கும். அத்தகைய நல்ல பழக்க வழக்கங்களை மாணவர்கள்கல்வி படிக்கும் காலத்திலேயே வளர்த்து கொள்ள வேண்டும்.
அதற்காக எங்கும், யாரிடமும் வணக்கம், காலை மதிய வணக்கம், இரவு வணக்கம் எனக்கூறி பழக வேண்டும்.
இதேபோல், எந்த நேரத்திலும் நன்றி கூறவும் தவறக்கூடாது. குறிப்பாக விடுதியில் சமையல் செய்யும் சமையலர், தூய்மையா ளர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி வெளியில் பஸ், ஆட்டோவில் போது பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு என எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க பழக வேண்டும்.
அது உங்கள் மீதான நன்மதிப்பை உருவாக்கும்.
அந்த வகையில், வணக்கமும், நன்றியும் நமது வாழ்க்கையின் அங்கமாக இருக்க வேண்டும். அதேபோல், தவறுகள் நேர்ந்துவிட்டால் மன்னிப்பும் கேட்டு பழக வேண்டும்.
இதுபோன்ற நல்ல பழக்கங்களை கடைபி டிக்கும் போது அதுவே எதிர்காலத்தில் நல்ல பலனை உருவாக்கித்தரும்.
மேலும், நாம் அனைவரும் இயற்கையை துணைத் சார்ந்தே வாழ்கிறோம். அதனால், இயற்கையை புரிந்து கொள்ளவும், அதனை பாதுகாக்கவும் வேண்டும். அதற்கு நாம் நமது சுற்றுசூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.
மனிதர்களில் ஒரு சிலர் தங்கள் நலனை மட்டுமே சிந்திக்கக் கூடியவர்கள், சிலர் தம்மையும், தன்னை சார்ந்தவர்களின் நலனை மட்டும் சிந்திப்பவர்கள், சிலர் மனித குலத்தின் நன்மையை பற்றி சிந்திப்பவர்கள் என 3 வகையாக உள்ளனர்.
இதில் மாணவர்கள் மனிதகுல நலனை பற்றி சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கையில் சிறந்த பலன்களை அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம், பதிவாளர் ஜெயபாரதி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
- பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று நடந்தது.கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த 38 வயது பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 15 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு சிறிய வயதாக இருந்ததால் என்னுடைய தாய் மறுமணம் செய்து வைப்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்து இருந்தார்.
திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு நான் காட்பாடியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறேன் என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை பணம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
திருமணத்திற்கு பிறகு அவர் என்னை ஏமாற்றி 5-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன்.
என் மீது கால் புணர்ச்சி கொண்ட அவர் என்னுடைய போட்டோக்களை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செல்போன் என்னை பதிவிட்டு நடத்தையை இழிவுபடுத்தி உள்ளார்.
இதனால் பலர் என்னை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைக்கின்றனர். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி
காட்பாடி அடுத்த கரிகிரியை, ஏழுமலை (வயது 29) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது நண்பர் ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தர முடியும் என்று கூறி ரூ.7 லட்சம் வாங்கி கொண்டார்.
இப்போது வேலை பற்றி கேட்டபோது உனக்கு பணமும் கிடையாது. வேலையும் வாங்கிதர முடியாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். ஆகவே மோசடி செய்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
காட்பாடியைச் சேர்ந்த மகாலட்சுமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; காட்பாடியைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி நிர்வாகி நான் நடத்தி வந்த சீட்டில் உறுப்பினராக சேர்ந்து அவ்வப்போது என்னிடம் பணம் பெற்றார்.
நான் நடத்திய சீட்டில் சுமார் ரூ.4,28 லட்சம் பணமும் ,என்னுடைய 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் ரூபாயும்,எனது உறவினரிடமிருந்து ரூ.13 லட்சமும் வாங்கிக் கொடுத்துள்ளேன்.
தற்போது பணத்தை கேட்டால் தர மறுக்கிறார்.மேலும் என்னை மிரட்டுகிறார். என்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3 நாட்களுக்கு வழங்கப்பட்டது
- தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1.500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படை யில் சிறையில் பல பணிகளில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.
பரோல் அனுமதி குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டி கைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி, 40 கைதிகள் மனு அளித்தனர்.
இதில், முதல்கட்டமாக 13 கைதிகளுக்கு 3 நாட்களுக்கு பரோல் வழங்க சிறைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கைதிகள் விரும்பும் நாட்களில் அந்த விடுமுறை அளிக்க பரிசீலனை செய்யப்படும். மேலும் மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கலெக்டர், நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதா கவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவ மனைக்கு தூக்கி செல்வ தாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவ மனை உள்ளிட்ட வெளியி டங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டிதான் மலைகி ராமத்திற்கு சுமந்து செல்கின்றனர். பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச் செல்லும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது.
துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் கானாறுகள் செல்கிறது.
ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.
தொடர் மழையின் காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
சுமார் 7 கிலோமிட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. கிராமத்திற்கு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்கின்றனர்.
இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தெள்ளை மலை கிராமம் வரை ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாலை இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சப்- கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாபு வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. மாவட்ட வன அலுவலர் கலாநிதி, நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இதில் பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புகார் கொடுத்தால் போலீசார் வாங்க மறுப்பதாக ஆதங்கம்
- இறைச்சிக்காக திருடிச்சென்றனர்
வேலூர்:
பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சரவணன், சவுக் ரோடு பகு தியைச் சேர்ந்தவர் அருண். இவர்கள் 2 பேரும் சலவைத் தொழிலாளிகள்.
இவர்கள் மொத்தம் 6 கழுதைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கழுதைகளை வீட்டின் முன்பு கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென 6 கழுதைகளும் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மர்ம நபர்கள் கழுதைகளை இறைச்சிக்காக திருடிச்சென்றுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சீராலா, குண்டூர், பாபட்லா பகுதிகளில் ஆஸ்துமா, முதுகு வலி, வலிமைக்காக கழுதை இறைச்சியானது கிலோ ரூ.ஆயிரத்துக்கும், கழுதை நெய் 250 மில்லி ரூ.500-க்கும் அமோகமாக விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் கழுதைகளை மர்ம நபர்கள் திருடி வேன்மூலம் கடத்திச்சென்று ஆந்திர பகுதிகளில் நல்ல விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனராம்.
இதுகுறித்து கழுதைகளின் உரிமையா ளர்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.
ஏற்கனவே ஒருமுறை வேன் கொண்டு வந்து கழுதைகள் திருடப்ப ட்டுள்ளது. புகார் கொடுத்தால் போலீசார் வாங்க மறுக்கின்றனர் என சலவை தொழிலாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.






