என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுதைகள் திருட்டு"

    • புகார் கொடுத்தால் போலீசார் வாங்க மறுப்பதாக ஆதங்கம்
    • இறைச்சிக்காக திருடிச்சென்றனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சரவணன், சவுக் ரோடு பகு தியைச் சேர்ந்தவர் அருண். இவர்கள் 2 பேரும் சலவைத் தொழிலாளிகள்.

    இவர்கள் மொத்தம் 6 கழுதைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கழுதைகளை வீட்டின் முன்பு கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் திடீரென 6 கழுதைகளும் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மர்ம நபர்கள் கழுதைகளை இறைச்சிக்காக திருடிச்சென்றுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் சீராலா, குண்டூர், பாபட்லா பகுதிகளில் ஆஸ்துமா, முதுகு வலி, வலிமைக்காக கழுதை இறைச்சியானது கிலோ ரூ.ஆயிரத்துக்கும், கழுதை நெய் 250 மில்லி ரூ.500-க்கும் அமோகமாக விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

    இதனால் கழுதைகளை மர்ம நபர்கள் திருடி வேன்மூலம் கடத்திச்சென்று ஆந்திர பகுதிகளில் நல்ல விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனராம்.

    இதுகுறித்து கழுதைகளின் உரிமையா ளர்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

    ஏற்கனவே ஒருமுறை வேன் கொண்டு வந்து கழுதைகள் திருடப்ப ட்டுள்ளது. புகார் கொடுத்தால் போலீசார் வாங்க மறுக்கின்றனர் என சலவை தொழிலாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    ×