என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க பழகுங்கள்
    X

    வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற மாணவர் பேரவை தொடக்க விழாவில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பேசிய காட்சி. அருகில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம்.

    எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க பழகுங்கள்

    • வி.ஐ.டி.யில் மாணவர் பேரவை தொடக்கம்
    • தீயணைப்பு துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பேச்சு

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக 5-வது இடத்தில் உள்ளது. நாட்டின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாய் 3.7 டிரில்லியன் டாலராக உள்ளது. எனினும் தனிநபர் வருமானத்தில் இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. இங்கு, தனிநபர் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2,600 டாலராக உள்ளது.

    இதற்கு, பெரும்பாலான மக்களுக்கு தரமான கல்வி கிடைக்காததே காரணமாகும். நாடு பொரு ளாதாரத்தில் உயர வேண்டும் என்றால், அதற்கு கல்வியும் வளர் வேண்டும். அதற்கு அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

    குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரமக்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அவர் பேசியதாவது:-

    "நல்ல பழக்க வழக்கங்கள் தான் சிறந்த எதிர் காலத்தை உருவாக்கும். அத்தகைய நல்ல பழக்க வழக்கங்களை மாணவர்கள்கல்வி படிக்கும் காலத்திலேயே வளர்த்து கொள்ள வேண்டும்.

    அதற்காக எங்கும், யாரிடமும் வணக்கம், காலை மதிய வணக்கம், இரவு வணக்கம் எனக்கூறி பழக வேண்டும்.

    இதேபோல், எந்த நேரத்திலும் நன்றி கூறவும் தவறக்கூடாது. குறிப்பாக விடுதியில் சமையல் செய்யும் சமையலர், தூய்மையா ளர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி வெளியில் பஸ், ஆட்டோவில் போது பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு என எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க பழக வேண்டும்.

    அது உங்கள் மீதான நன்மதிப்பை உருவாக்கும்.

    அந்த வகையில், வணக்கமும், நன்றியும் நமது வாழ்க்கையின் அங்கமாக இருக்க வேண்டும். அதேபோல், தவறுகள் நேர்ந்துவிட்டால் மன்னிப்பும் கேட்டு பழக வேண்டும்.

    இதுபோன்ற நல்ல பழக்கங்களை கடைபி டிக்கும் போது அதுவே எதிர்காலத்தில் நல்ல பலனை உருவாக்கித்தரும்.

    மேலும், நாம் அனைவரும் இயற்கையை துணைத் சார்ந்தே வாழ்கிறோம். அதனால், இயற்கையை புரிந்து கொள்ளவும், அதனை பாதுகாக்கவும் வேண்டும். அதற்கு நாம் நமது சுற்றுசூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.

    மனிதர்களில் ஒரு சிலர் தங்கள் நலனை மட்டுமே சிந்திக்கக் கூடியவர்கள், சிலர் தம்மையும், தன்னை சார்ந்தவர்களின் நலனை மட்டும் சிந்திப்பவர்கள், சிலர் மனித குலத்தின் நன்மையை பற்றி சிந்திப்பவர்கள் என 3 வகையாக உள்ளனர்.

    இதில் மாணவர்கள் மனிதகுல நலனை பற்றி சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கையில் சிறந்த பலன்களை அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம், பதிவாளர் ஜெயபாரதி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×