என் மலர்
நீங்கள் தேடியது "மின் கசிவால் விபத்து"
- தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
- மின் கசிவால் ஏற்பட்டது
வேலூர்:
காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லப்பின் ஜோனகன். இவரது வீட்டில் நேற்று காலை ஏ.சி. ஓடிக்கொண்டிருந் தது. அப்போது திடீரென அதில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி அருகே வைக்கப்படிருந்த புத்தகங்கள் மீது பிடித்து எரிந்துள்ளது.
இதை பார்த்து ஜோனகன் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏ.சி. சுவிட்சை அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
- தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை மேற்கூரையில் தீ பிடித்து எரிந்தது, இதனைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் சில சமையல் பொருட்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன.
சேலம்:
சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை மேற்கூரையில் தீ பிடித்து எரிந்தது, இதனைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் சித்துராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிரகாசம், மாதேஷ், நவீன்,கண்ணன், அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சமையலறையின் மேலே மேற்கூறையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீஉடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் சில சமையல் பொருட்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுபற்றி சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






