என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ரெயில் நிலையம் அருகே ஓட்டலில் திடீர் தீ விபத்து
    X

    ஓட்டல் மேற்கூரையில் தீ பிடித்து எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் அணைப்பதையும் படத்தில் காணலாம். 

    சேலம் ரெயில் நிலையம் அருகே ஓட்டலில் திடீர் தீ விபத்து

    • தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை மேற்கூரையில் தீ பிடித்து எரிந்தது, இதனைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்தில் சில சமையல் பொருட்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை மேற்கூரையில் தீ பிடித்து எரிந்தது, இதனைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் சித்துராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிரகாசம், மாதேஷ், நவீன்,கண்ணன், அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சமையலறையின் மேலே மேற்கூறையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீஉடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் சில சமையல் பொருட்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுபற்றி சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×