என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூரில் இருந்து வேலூர் சென்ற தனியார் பஸ்சை செல்போன் பேசியபடி ஓட்டிச் சென்ற டிரைவர்.
செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர்
- அச்சத்தில் உறைந்த பயணிகள்
- விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் ஒடுகத்தூர் இடையே அணைக்கட்டு வழித்தடத்தில் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தனியார் பஸ்களும் அடங்கும்.
அச்சத்தில் உறைந்த பயணிகள்
இந்த நிலையில் நேற்று ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டி ருந்தது. அப்போது அந்த பஸ் டிரைவர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே பஸ்சை ஓட்டிச் சென்றார். சாகசம் செய்வதை போலஒரே கையால் ஸ்டேரிங்கை பிடித்தும், அதே கையால் ஹாரனையும் அடித்தபடி ஓட்டினார்.
சில சமயம் ஸ்டேரிங்கை விட்டுவிட்டு அவர் செய்த ரகளை, பஸ்சில் இருந்த பயணிகளை அச்சத்தில் உறைய செய்தது. இதுகுறித்து பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பொதுமக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






