என் மலர்
வேலூர்
வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 60). லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்றுவிட்டார். மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் குமரவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு பொழுதை கழித்தார். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் அவர் கோமதியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று இரவு குமரவேல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் கணவன் மனைவி சண்டை முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குமரவேல் கத்தியை எடுத்து கோமதியை வெட்டினார். அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் தப்பி ஓடிய கோமதி கத்தியை பிடுங்கி கணவன் என்று பாராமல் குமரவேலை எதிர்த்து வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வெட்டுக்காயத்தில் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரவேல் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்தார். கோமதி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். மதுப்பழக்கத்தால் குமரவேல் தகராறில் ஈடுபட்டதால் அவர்களது குடும்பத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது.
தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக்கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது கோவேக்சின் செலுத்தியவர்கள் அதே ஊசியையும்.கோவிஷீல்டு செலுத்தியவர்கள் அதே ஊசியை 2வது, 3வது தவணை செலுத்தி வருகின்றனர்.
கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
அதில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாகுமா என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்கள் 200 தன்னார்வலர்களிடம் மாறி மாறி தடுப்பூசிகளை செலுத்தி ஆராய்ச்சி செய்தனர்.
இதில் தடுப்பூசிகளை கலப்பதால் எந்த பயனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரே வகையான தடுப்பூசியை செலுத்தும் போது அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. மாறி, மாறி தடுப்பூசிகளை செலுத்தும் போது அதில் போதிய ஊக்கம் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
நோய் தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் கலந்து செலுத்துவது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை. இதனால் இந்தியாவில் ஒரே வகையான தடுப்பூசி செலுத்த மட்டுமே தற்போது அனுமதித்து வருகின்றனர்.
மேலும் பல ஆராய்ச்சி முடிவு எடுக்க இந்திய அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... வருகிற 15-ந்தேதி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்






