என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கே.வி.குப்பம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
கே.வி.குப்பம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் நேற்று இரவு சூறைகாற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால்அப்பகுதியில் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சாந்தி (50) சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தனது கையால் அகற்ற முயன்றுள்ளார்.
அப்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின் சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடடித்து பரிதாபமாக இறந்தார். இதை கண்ட கிராம மக்கள் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






