என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 76,956 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்

    வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 76,956 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 8,237 மாணவர்கள் 8,720 மாணவிகள் உள்பட 16,957 பேர் தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 120 பள்ளிகளை சேர்ந்த 14,320 மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 56 மையங்களில் இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு நடந்தது. இதில் 14,699 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 257 பள்ளிகளில் படிக்கும் 15,459 மாணவர்கள் 15,521 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 980 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர்.

    அரசு பொதுத் தேர்வுகளை முன்னிட்டு நிலையான படை உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

    இது தவிர மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொதுத் தேர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.

    அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால்டிக்கெட் கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டனர். எலெக்ட்ரானிக், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க படவில்லை.
    Next Story
    ×