என் மலர்
வேலூர்
- மின்தடை குறித்து 1912 மற்றும் 18004258912 எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
- மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின்ஒப்பந்ததாரர் மூலமாக செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், அதனை எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை ஆப் செய்து விடுங்கள். பழுதான மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள்.
ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் சுவிட்சுகள், பிளக்குகளை அமைக்க வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும்.
மின்கம்பம் அல்லது அவற்றை தாங்கும் இழுவை கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மற்றும் புதைவட மின்கம்பிகளை பொதுமக்கள் தொடவோ, அதன் அருகிலோ செல்ல வேண்டாம்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். இடி, மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள்.
மின்தடை குறித்து கட்டணமில்லாத தொலைபேசி எண் 1912 மற்றும் 18004258912 ஆகியவற்றின் மூலம் புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1 கோடியே 27 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டுபிடிப்பு.
- குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.
அரக்கோணம்:
அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை உழைப்பு எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சியை அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார அமைப்பு ஒருங்கிணைத்தது.
ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ரஜினிப்பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர்கள் ஏ.ஜோதி, பாக்கியலட்சுமி, அமுதா, காவேரி, சாந்தலட்சுமி, பிரீத்தா மற்றும் சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐடி தேவாசீர்வாதம், மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
6 வயது முதல் 14 வயது வரையுள்ள இளஞ்சிறார்கள் சட்டவிரோதமாக மிகக்குறைந்த கூலிக்கு சாதாரண தொழில்கள் முதல் அபாயகரமான தொழில்கள் வரை முந்திரி, ரப்பர் தோட்டங்கள், பனியன் தொழிற்சாலைகள், பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், சாலையோர உணவகங்கள், செங்கல் சூளைகள், கல்குவாரிகள், ஓட்டல்கள், மிட்டாய், இறைச்சி மற்றும் டீ கடைகளிலும் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் 2001-ன் கணக்கெடுப்பின்படி 1 கோடியே 27 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தேசிய உற்பத்தியில் 20 சதவீதம் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாக்கப்படுகிறது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் போக்கிட, சிறார் அனைவருக்கும் தொடக்கக்கல்வி கட்டாய மாக்கப் படவேண்டும்.
தொழிலாளர் நலத்துறையில் உள்ள இத்துறையை பிரித்து தனித்துறையை ஏற்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென தனி அலுவல கங்களை ஏற்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளை வேலை களில் ஈடுபடுத்துவேரை கண்காணிக்க பணியாளர்களை நியமிக்கவேண்டும்.
குழந்தைகளை வேலைக்கு அமர்த்து வோரின் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்வதுடன் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குடும்பத்தினரின் வறுமையைப் போக்கி கூடுதல் வருவாய்க்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்களை முன்வைத்து உரையாற்றினர்.
இறுதியாக ஆசிரியர் ஜி.விஜயகுமாரி நன்றி கூறினார்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலத்தில் இருந்து வட விரிஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ் டிரைவர் கொசவன் புதூரை சேர்ந்த முரளி (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.
விரிஞ்சிபுரம் வேளாண்மை பல்கலைக்கழகம் அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியில் பஸ் சென்றது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் தள்ளிப்போய் பஸ் நின்றது. இதனால் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் சக்திவேல்( 19) டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரத்த காயம் அடைந்த டிரைவர் முரளி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக டிரைவர் முரளி கொடுத்த புகாரின்பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
- அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் முதல் கிரீன் சர்க்கிள் வரையிலான பகுதி வரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது , சாலையை ஒட்டிய பகுதியில் பொது மக்களுக்கும், போக்குவ இடையூறு ரத்துக்கும் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தி வைத் திருந்தது, தனியார் நிறுவ னத்தினர் தங்கள் வாக னங்களை நிறுத்தி அவர்கள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்வது, டீக் கடைகள் தள்ளுவண்டி ஆகியவை கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது ஆகியவற்றை கண்டு பிடித்தனர்.
இவற்றை, அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி கிரீன் சர்க்கிள் முதல் அல மேலு மங்காபுரம் வரை யிலான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், ஒரு வாரத்துக்குள் ஆக்கி ரமிப்பு அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட் சத்தில் அடுத்த வாரம் முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என குறிப் பிடப்பட்டிருந்தது.
- மர்ம நபர்களை பிடிக்க கேமராக்கள் ஆய்வு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூரில் ரூ. 4.45 லட்சம் கள்ள நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ள நோட்டுகள்
வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே காமராஜர் சிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மர்மநபர்கள் செல்போன் வாங்க வந்தாக கூறப்படுகிறது.
அப்போது கடைக்காரரிடம் அவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். அவர் பணத்தை எண்ணும்போது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் இது கள்ளநோட்டு என்பதை அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நோட்டுகளை வாங்கி கொண்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சற்று தொலைவில் 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சாலையில் வீசிவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் சாலையில் வீசிவிட்டு சென்ற ரூ.4.45 லட்சம் கள்ள நோட்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அது கள்ளநோட்டு என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தினர்.
விசாரணை
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் காந்திநகர் பாபுராவ் தெருவில் ஆந்திராவை சேர்ந்த கள்ளநோட்டு கும்பலுக்கும், தமிழகத்தை சேர்ந்த கும்பலுக்கு கள்ளநோட்டு கும்பலுக்கும் கள்ளநோட்டை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் அங்கு கூடியதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
- நாடு முழுவதிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
- போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு
வேலூர்:
மத்திய அரசு ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ரெயில்களுக்கு தீ வைத்து எரிக்க சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள ரெயில் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.
பயணிகளின் உடமைகளை முழு பரிசோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
- சி.எம்.சி. சுரங்கப்பாதைக்கு கட்டாயம் இடம் தர வேண்டும்
- வேலூரில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்
வேலூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 20 மற்றும் 21-ந் தேதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு முதல்அமைச்சர் மு. க ஸ்டாலின் வருகிறார். 20-ந் தேதி மாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியை திறந்துவைக்கிறார். பின்னர் ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
21-ந் தேதி காலை திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பல்வேறு கட்டிடங்களை திறப்பு விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
21-ந்தேதி மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
2 நாள் நிகழ்ச்சியில் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்களை முதல்அமைச்சர் சந்திக்கிறார்.
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாதனூர், விரிஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மாதனூர் பாலாற்றில் ரூ.30 கோடி, விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ. 27 கோடியில் மேம்பாலங்கள் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும்.
வேலூர் ஆற்காடு சாலையில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சுரங்கப் பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎம்சி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சிஎம்சி நிர்வாகத்தினர் தாங்களாகவே முன்வந்து நிலத்தை கொடுத்தால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். அல்லது எங்களுக்கு உள்ள நில எடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கான தொகையை வழங்கி நிலத்தை எடுத்து கண்டிப்பாக சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கு நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து உள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு அந்த இடத்திலும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ,கோவை, மதுரை, போல பழம்பெரும் நகரமான வேலூரில் பெரிய மேம்பாலங்கள் அதாவது மேலே செல்லும் சாலைகள் அமைக்க வேண்டுமென எம்.எல்ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூரில் பெரிய மேம்பாலங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து மேம்பாலங்கள் அதாவது மேலே செல்லும் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் வி.ஐ.டி. முன்னாள் மாணவர் 5-வது இடம் பெற்றார்
- வேந்தர் விசுவநாதன் வாழ்த்து
வேலூர்:
இந்திய அளவில் நடைபெற்ற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேர்வில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விஐடி முன்னாள் மாணவர் உத்கர்ஷ் திவேதி ( 2014-ம் ஆண்டு பி.டெக் மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்தவர்) இந்திய அளவில் 5-வது இடம் பிடித்துள்ளார். வெற்றி குறித்து உத்கர்ஷ் திவேதி கூறியதாவது.
மகிழ்ச்சியாக உள்ளது இத்தருணத்தில் இறைவன், பெற்றோர், குடும்பம், ஆசிரியர் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடிமைப் பணியில் தான் நாட்டில் மாற்றத்தை உருவாக்கி மக்களுக்கு உதவிட முடியும், அதே போல் சமுதாயத்தில் என்னால் முடிந்த பணிகள் மூலம் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உதவிட முடியும். கல்லூரி காலத்தில் என்னை வாழ்க்கையில் பல்வேறு நிலைக்கு ( வி ஐ டி ) உயர்த்தி சென்றது.
இங்கு உள்ள பல மாணவ அமைப்புகளில் உறுப்பினராக சேர்ந்து அவற்றின் வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தலைமை பண்பை வளர்த்துக்கொண்டேன். என்னுடைய கல்லூரி காலத்தில் கடினமான உழைப்பின் மூலம் வாழ்வில் உயரலாம் என விஐடியில் அறிந்து கொண்டேன் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் மாணவரின் சாதனையை பாராட்டி மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்தினார்.
- பைக்கில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி வி.ஜி ராவ் நகர் அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 50) வேலூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று மாலை அவரது வீட்டின் அருகே வாக்கிங் சென்றார். அப்போது பைக்கில் மர்மநபர்கள் 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
அந்த நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. அப்போது மர்ம நபர்கள் ஆசிரியை விஜயகுமாரி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட விஜயகுமாரி அலறி கூச்சலிட்டார்.
அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து விஜயகுமாரி காட்பாடி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
தமிழகத்தில் மனைப்பிரிவுகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றிற்கு நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்கான சம்பந்தப்பட்ட அலுவலங்களுக்கு மனுதாரர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது தமிழகம் முழுவதும் நகர் ஊரமைப்புத் துறையில் மனைப்பிரிவு அனுமதிக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையில் நடை முறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஒற்றை சாளர முறை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இதனை நடைமுறை படுத்துவது தொடர்பாக நகர் ஊரமைப்புத்துறையின் அலுவலர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
விண்ணப்ப தாரர்களுக்கு வேலூர் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் வேலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட அலுவலர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. இதனை சேலம் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் ராணி தொடங்கி வைத்தார்.
பயிற்சியின் போது ஒற்றை சாளர முறையில் மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல், மற்றும் அரசுக்கான கட்டணங்கள் செலுத்துதல், ஆணை வழங்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் குறித்து அலுவலக பயிற்சியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதில் மேற்பார்வையாளர் விசுவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1.20 லட்சம் மோசடி
- விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி செங்காநத்தம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39).இவரது பேஸ்புக் கணக்கிற்கு உடனடி கடன் தருவதாக விளம்பரம் ஒன்று வந்தது. செந்தில்குமார் அந்த விளம்பரத்தில் உள்ள ஆன்லைன் முகவரி மூலம் தொடர்பு கொண்டார். அதில் உடனே கடன் பெறுவதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி செந்தில்குமார் பணம் செலுத்தினார்.தொடர்ந்து பல்வேறு கட்டணங்கள் கட்ட சொல்லிக் கேட்டனர். அதனை நம்பி ரூ.1லட்சத்து 26,481 வரை அந்த இணைய தளத்தில் இருந்த வங்கி கணக்கில் செலுத்தினார்.
ஆனாலும் தொடர்ந்து அந்த இணையதளத்தில் இருந்து பல்வேறு கட்டணங்கள் என்ற பெயரில் பணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது செந்தில்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக பணத்தை திருப்பித் தருமாறு அவர் இணையதளத்தில் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை.
அப்போதுதான் அவர் போலி இணையதள முகவரியில் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் வங்கிக்கடன் தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்தனர்
- வேலூர் மாநகர பகுதி முழுவதும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
வேலூர், ஜூன்.17-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி வேலூர் வருகிறார்.வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து வேலூர் கோட்டை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தி.மு.க. மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விழா மேடை அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். மேலும் தரமானதாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாநகரப் பகுதியில் சீரமைப்பு பணிகள், அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலையோரங்களில் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புச் சுவர்களில் கருப்பு வெள்ளை நிற வண்ணங்கள் தீட்டி வருகின்றனர்.
இதனால் வேலூர் மாநகர பகுதி முழுவதும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.






