search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மழை, சூறை–க்காற்றால் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம்
    X

    கோப்புபடம்

    மழை, சூறை–க்காற்றால் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம்

    • மின்தடை குறித்து 1912 மற்றும் 18004258912 எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
    • மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின்ஒப்பந்ததாரர் மூலமாக செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், அதனை எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை ஆப் செய்து விடுங்கள். பழுதான மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் சுவிட்சுகள், பிளக்குகளை அமைக்க வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மின்கம்பம் அல்லது அவற்றை தாங்கும் இழுவை கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

    மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மற்றும் புதைவட மின்கம்பிகளை பொதுமக்கள் தொடவோ, அதன் அருகிலோ செல்ல வேண்டாம்.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். இடி, மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள்.

    மின்தடை குறித்து கட்டணமில்லாத தொலைபேசி எண் 1912 மற்றும் 18004258912 ஆகியவற்றின் மூலம் புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×