search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு
    X

    அரக்கோணம் அரசு பெண்கள் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நடந்த காட்சி.

    குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு

    • 1 கோடியே 27 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டுபிடிப்பு‌.
    • குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை உழைப்பு எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியை அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார அமைப்பு ஒருங்கிணைத்தது.

    ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ரஜினிப்பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆசிரியர்கள் ஏ.ஜோதி, பாக்கியலட்சுமி, அமுதா, காவேரி, சாந்தலட்சுமி, பிரீத்தா மற்றும் சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐடி தேவாசீர்வாதம், மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    6 வயது முதல் 14 வயது வரையுள்ள இளஞ்சிறார்கள் சட்டவிரோதமாக மிகக்குறைந்த கூலிக்கு சாதாரண தொழில்கள் முதல் அபாயகரமான தொழில்கள் வரை முந்திரி, ரப்பர் தோட்டங்கள், பனியன் தொழிற்சாலைகள், பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், சாலையோர உணவகங்கள், செங்கல் சூளைகள், கல்குவாரிகள், ஓட்டல்கள், மிட்டாய், இறைச்சி மற்றும் டீ கடைகளிலும் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் 2001-ன் கணக்கெடுப்பின்படி 1 கோடியே 27 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌. மேலும் இந்தியாவில் தேசிய உற்பத்தியில் 20 சதவீதம் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாக்கப்படுகிறது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    இந்த குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் போக்கிட, சிறார் அனைவருக்கும் தொடக்கக்கல்வி கட்டாய மாக்கப் படவேண்டும்.

    தொழிலாளர் நலத்துறையில் உள்ள இத்துறையை பிரித்து தனித்துறையை ஏற்படுத்தவேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென தனி அலுவல கங்களை ஏற்படுத்தவேண்டும்.

    ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளை வேலை களில் ஈடுபடுத்துவேரை கண்காணிக்க பணியாளர்களை நியமிக்கவேண்டும்.

    குழந்தைகளை வேலைக்கு அமர்த்து வோரின் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்வதுடன் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

    குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குடும்பத்தினரின் வறுமையைப் போக்கி கூடுதல் வருவாய்க்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்களை முன்வைத்து உரையாற்றினர்.

    இறுதியாக ஆசிரியர் ஜி.விஜயகுமாரி நன்றி கூறினார்.

    Next Story
    ×