என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு"

    • பைக்கில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வி.ஜி ராவ் நகர் அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 50) வேலூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று மாலை அவரது வீட்டின் அருகே வாக்கிங் சென்றார். அப்போது பைக்கில் மர்மநபர்கள் 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

    அந்த நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. அப்போது மர்ம நபர்கள் ஆசிரியை விஜயகுமாரி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட விஜயகுமாரி அலறி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து விஜயகுமாரி காட்பாடி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×