என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்கர்ஷ் திவேதி
வி.ஐ.டி. உயர்த்தியதாக பேட்டி
- யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் வி.ஐ.டி. முன்னாள் மாணவர் 5-வது இடம் பெற்றார்
- வேந்தர் விசுவநாதன் வாழ்த்து
வேலூர்:
இந்திய அளவில் நடைபெற்ற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேர்வில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விஐடி முன்னாள் மாணவர் உத்கர்ஷ் திவேதி ( 2014-ம் ஆண்டு பி.டெக் மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்தவர்) இந்திய அளவில் 5-வது இடம் பிடித்துள்ளார். வெற்றி குறித்து உத்கர்ஷ் திவேதி கூறியதாவது.
மகிழ்ச்சியாக உள்ளது இத்தருணத்தில் இறைவன், பெற்றோர், குடும்பம், ஆசிரியர் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடிமைப் பணியில் தான் நாட்டில் மாற்றத்தை உருவாக்கி மக்களுக்கு உதவிட முடியும், அதே போல் சமுதாயத்தில் என்னால் முடிந்த பணிகள் மூலம் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உதவிட முடியும். கல்லூரி காலத்தில் என்னை வாழ்க்கையில் பல்வேறு நிலைக்கு ( வி ஐ டி ) உயர்த்தி சென்றது.
இங்கு உள்ள பல மாணவ அமைப்புகளில் உறுப்பினராக சேர்ந்து அவற்றின் வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தலைமை பண்பை வளர்த்துக்கொண்டேன். என்னுடைய கல்லூரி காலத்தில் கடினமான உழைப்பின் மூலம் வாழ்வில் உயரலாம் என விஐடியில் அறிந்து கொண்டேன் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் மாணவரின் சாதனையை பாராட்டி மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்தினார்.






