என் மலர்
நீங்கள் தேடியது "விழா மேடை அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளை"
- எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்தனர்
- வேலூர் மாநகர பகுதி முழுவதும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
வேலூர், ஜூன்.17-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி வேலூர் வருகிறார்.வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து வேலூர் கோட்டை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தி.மு.க. மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விழா மேடை அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். மேலும் தரமானதாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாநகரப் பகுதியில் சீரமைப்பு பணிகள், அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலையோரங்களில் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புச் சுவர்களில் கருப்பு வெள்ளை நிற வண்ணங்கள் தீட்டி வருகின்றனர்.
இதனால் வேலூர் மாநகர பகுதி முழுவதும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.






