என் மலர்
வேலூர்
- பேரணாம்பட்டு அருகே துணிகரம்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள நலங்காநல்லூர் கிராம பகுதியில் வனப்பகுதியை யொட்டி அதே கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் என்பவ ருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் பின்புறம் நாகாலம் மன் கோவில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட் டாசி மாதங்களில் இந்த கோவிலில் கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இங்கு புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் காரில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் ஒன்று கடப்பாரை, மண்வெட்டி கொண்டு நாகாலம்மன் கோவிலில் சுமார் 2 அடி பள் ளம் தோண்டி அங்கிருந்த 3நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி சென்றனர்.
இதனை பார்த்த ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் கள் சென்று கேட்டபோது நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக கூறி உள்ளனர். ஆனால் கிராம மக்கள் அவர் களைவிரட்டி சென்று பிடிக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென் றனர்.
இது குறித்து பேரணாம் பட்டு போலீஸ் நிலையத்தில் நலங்கா நல்லூர் கிராம மக் கள் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கிராம மக்களி விசாரணை நடத்தினார்.
மேலும் காரில் சிலைகளை கடத்திய மர்ம கும்பல் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் பார்வையிட்டார்
- அறை சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக பின்புறம் அமைந்துள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு குடோன் திறக்கப்பட்டது. பின்பு அங்குள்ள எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் பேச்சு
- வி.ஐ.டி.யில் கிராவிடாஸ் அறிவுசார் திருவிழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் 2022 அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா இன்று தொடங்கியது.
இதன் தொடக்க விழாவிற்கு வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இந்திய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் திறன்களை வெளி கொணர முடியும். இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
15 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 5 அல்லது 6 என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சில ஆயிரம் என்ஜினீயர்கள் மட்டுமே உருவாகினர்.ஆனால் தற்போது ஒரு ஆண்டுக்கு 14 லட்சம் என்ஜினீயர்கள் வெளியே வருகிறார்கள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க அரசு பங்களிப்பு அளித்து வருகிறது.
10,15 ஆண்டுகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்தவர்கள் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகி விடுவார்கள் ஆனால் தற்போது என்ஜினீயரிங் படித்த 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலேயே பணிபுரிகிறார்கள். சுய தொழில் தொடங்குகிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு 421 சுய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு 75,000 சுய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளது.
நாட்டின் தேவைக்காக அனைத்தையும் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது நமக்கு தேவையான வற்றை உற்பத்தி செய்து வருகிறோம். உலகிலேயே நீளமான 150 எம்.எம்.துப்பாக்கி இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான எந்திரங்கள் உள்ளிட்டவற்றை நாமே தயாரிக்கிறோம்.இணையவழி குற்றங்களை கண்டுபிடிக்கவும் தேவையான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
இதில் இளம் என்ஜினீயர்கள் பங்கு அதிகமாக உள்ளது.
மாணவர்கள் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். தொழில்துறை உற்பத்தி தற்போது 17 சதவீதமாக உள்ளது. இதனை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இளம் என்ஜினீயர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். உலகில் முதல் முறையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். ராணுவ தொழில்நுட்ப நிதி ரூ.10 கோடியாக இருந்தது தற்போது 50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கிராவிடாஸ் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் விஐடி மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மற்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் 140-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்படுகின்றன.
உலகில் 5-வது பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்தியா பணக்கார நாடாக உள்ளது. ஆனால் இந்தியர்கள் ஏழையாக உள்ளனர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து கொண்டே போவது கவலை அளிக்கிறது. வேளாண்மை தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயர்கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு ஆட்டோ டயர்ஸ் நிறுவனங்களுக்கு ஆசிரியர்களின் கல்வி துறை தலைவர் தீபங்கர்பட்டாச்சாரியா, ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன உதவி தலைவர் சித்ராசுகுமார், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் உட்பட 13 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
- 8 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கும்
- ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் முதல் முயற்சியாக 4 முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஏடிஎம் மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.8 விலைக்கு ஸ்மார்ட் அட்டை மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் மக்கள் தொகை சுமார் 8 லட்சமாக இருக்கிறது. மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் நிறுவனத்தின் மூலம் இதற்கான முன் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சியில் முதல் முயற்சியாக 4 முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. காட்பாடி உழவர் சந்தை அருகில், சிஎம்சி மருத்துவமனை அருகில், பழைய மீன் மார்க்கெட் அருகில், புதிய பஸ் நிலையம் அருகில் என 4 இடங்களில் இந்த சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் மையங்கள் அமைய உள்ளன.
இங்கு தாகத்துக்காக வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாகவும் 20 லிட்டர் பாட்டிலில் எடுத்துச்செல்ல கட்டணமும் வசூலிக்க உள்ளனர். பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிச் செல்பவர்களின் வசதிக்காக ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட் அட்டையும் வழங்க உள்ளனர்.
ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் மையமும் 1,050 சதுரடி பரப்பளவு கொண்டதாக அமையும். இங்கு தினமும் 24 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேங்க் ஒன்று மூலம் சேமிக்கப்பட்டு விநியோகம் செய்ய உள்ளனர்.
மேலும் மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட நேரங்களில் அவசர தேவைக்காக 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய டேங்க் மூலமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாராக வைத்திருக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
8 ரூபாய்க்கு 20 லிட்டர்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் மையங்களில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் தண்ணீர் 8 ரூபாய்க்கு ஸ்மார்ட் கார்டு மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில் வே ''முதல் கட்டமாக 4 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையம் தொடங்க உள்ளோம். அதன் பிறகு ஒவ்வொரு வார்டிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் மையம் தொடங்கப்படும்.
வார்டுகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் வீதம் விநியோகம் செய்யப்படும். இதற்காக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.8 விலை என தற்போதைக்கு நிர்ணயித்துள்ளோம்.
குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவை இருந்தால் அந்த வார்டு கவுன்சிலர் மூலம் பரிந்துரை கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு 100 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 40 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.
குடிநீர் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். குடிநீர் உற்பத்தி, பராமரிப்பு, விநியோக பணி முழுவதும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக முதல்தர நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது என்றார்.
- குடியாத்தத்தில் எஸ்.பி. ஆய்வு
- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் வாகன சோதனை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகல் ஆந்திர மாநில எல்லை பகுதியை ஒட்டியபடி உள்ளது.
தற்போது அக்டோபர் 2-ந்தேதி பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிலிருந்து தமிழக அரசு தடை செய்துள்ளது. மேலும் ஒரு அமைப்பையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.
இதனால் முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக குடியாத்தம் பகுதியில் வாகன சோதனை மற்றும் பல இடங்களில் காவல்து றையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் திடீரென பாதுகாப்பு பணிகளையும், வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறை யினரின் பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்து றையினரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனை களையும் அறிவுரை களையும் காவல்துறை யினருக்கு வழங்கினார்.
இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது மாநில அளவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டுவேலூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 48 முக்கிய நபர்களுக்கும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 அலுவல கங்களுக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
மேலும் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட பின் அதன் உரிமையா ளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அந்த வாகனங்கள் விடுவிக்க ப்படும்.
மேலும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் மூலம் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய அமைப்புகளின் நபர்கள் மற்றும் அலுவலகங்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்டோபர் 2-ந்தேதி தமிழக அரசு ஊர்வலம் மற்றும் பேரணியை தடை செய்துள்ளது. வேலூர் மாவட்டத்திலும் பேரணி மற்றும் ஊர் வலங்களுக்கு அனுமதி இல்லை.
குற்றத் தொடர்புடைய முக்கிய நபர்கள் கண்கா ணிக்கப்பட்டு வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்றார்.
- 3 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை
- சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட் டுள்ளதால் வேலூர் மாநகராட்சிக்கு உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. காவிரி கூட்டுக்குடிநீர்
வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பாலாற்றின் கரையோரம் ராட்சத குழாய் அமைக்கப் பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலை யில் மாதனூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குழாய்உடைப்பு சரிசெய்யப்பட்டது.
இந்தநிலையில் குழாயின் உறுதித்தன்மையை அதிகாரி கள் ஆய்வு செய்தனர். அப் போது ஆம்பூர் அருகே சுண்ணாம்புக்கல் என்ற பகுதியில் குழாயில் விரிசல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே அதை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த குழாய் உடைப்பு மற்றும் விரிசல் காரணமாக வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்துக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நீர் ஆதாரம் இதனால் 3 நாட்களாக குடி நீர் வினியோகிக்கப்பட வில்லை. எனினும் வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்துக்கு குடிநீர் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை (சனிக்கிழமை) குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் தொடங்கப் படும் என அதிகாரிகள் தரப பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாநகராட்சி சார்பில் உள்ளூர் நீர் ஆதாரத்தினை கொண்டு குடிநீர் வினி யோகம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணம் மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியிலும் 24 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு பள்ளிகொண்டா போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு 4 பேர் கும்பல் பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட போலீசார் அங்கிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் பிளாஸ்டிக் கவரில் செய்யப்பட்ட பண்டல்களை காரில் இருந்து லாரிக்கு மாற்றியது தெரிய வந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து பணம் மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
அந்த பண்டல்களில் ரூ.10 கோடி பணம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
ரூ.10 கோடிக்கு மேல் பணம் இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. காரில் இருந்து லாரியில் மாற்றப்பட்ட பண்டல்களில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிவதற்காக எந்திரங்கள் மூலம் பணத்தை எண்ணும் பணி நடந்து வருகிறது. முழுமையான எண்ணிக்கை நடந்த பிறகு பணம் எவ்வளவு உள்ளது என்பது துல்லியமாக தெரியவரும்.
பிடிப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பணத்தை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. அவர்கள் சென்னையில் இருந்து பணத்தை கேரளாவுக்கு கொண்டு சென்றனரா? அல்லது ஆந்திராவில் இருந்து கொண்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பிடிபட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாளை நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.
மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- சோதனையை தீவிரபடுத்த முடிவு
- ஏராளமான போலீசார் குவிப்பு
வேலூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் மற்றும் 200 பயிற்சி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் கஸ்பா, ஆர்.என்.பாளையம், கொணவட்டம், பேர ணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கேமராக்கள் மூலமாக வாகனங்கள் கண்காணித்து வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது. ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். வருகிற 2-ந்தேதி வரை சோதனை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.
- மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் அவதி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.52 கோடியில் புதியதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காட்பாடி வழியாக செல்லும் டவுன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டவுன் பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் புதியதாக பயணிகள் நிழற்கூரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. புதியதாக அமைக்கப்பட்ட மேற்கூரை வேறு ஒரு இடத்தில் இருந்து கழற்றிக் கொண்டு வந்து பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கூரையில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதால் மழைபெய்யும் போது ஓட்டைகளில் மழைநீர் ஒழுகி பயணிகள் மீது விழுகின்றன.
இதனால் நிழற்கூரை இருந்தும் அதன் கீழே பயணிகள் ஒதுங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தற்போதுள்ள மேற்கூரையை அகற்றிவிட்டு புதியதாக மேற்கூரை அமைக்க வேண்டுமென பயணிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் புதிய பஸ் நிலையத்தில் ஆங்காங்கே தற்காலிக தள்ளுவண்டிக் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களும் புதிய பஸ் நிலையம் காட்பாடி ரோட்டில் பஸ்களுக்கு குறுக்கு நிறுத்தி விடுவதால் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஜவ்வாது மலை கிராமங்களில் மாணவர்கள் பயனடைவார்கள்
- அண்ணாதுரை எம்.பி. பேச்சு
வேலூர்:
பி.எஸ்.என்.எல் வேலூர் தொலைதொடர்பு வணிகப்பகுதியின்2022-23 நிதி ஆண்டிற்கான முதல் தொலைபேசி ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வேலூர் தொலைபேசி ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வேலூர் பி.எஸ்.என்.எல் 66 சதவீத ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற்ற போதிலும் கொரோனா காலத்தில் தொலைதொடர்பு சேவைகளை பராமரிப்பதில் ஊழியர்களின் முயற்சிகள் நன்றாக இருந்தது.
தொலைதொடர்பு துறை ஒரு முக்கியமான துறை பி.எஸ்.என்.எல்-க்கு அளிக்கப்பட்ட மறுமலர்ச்சி தொகுப்பை வரவேற்கிறேன்.
கிராமப்புறம் மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலை குழுவில் நான் இருக்கிறேன். தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தொலைத்தொடர்பு முக்கிய பங்காற்று இருக்கிறது.
தற்போது மொபைல் கவரேஜ் இல்லாத தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் 4 ஜி மொபைல் செயலிகளை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் சாச்சுரேஷன் திட்டத்தை வரவேற்கிறேன். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை பகுதியில் போன் கவரேஜ் பெற உள்ளது. இதன் மூலம் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெ றுவார்கள். பி.எஸ்.என்.எல்.க்கு இலவசமாக மாநில அரசு மூலமாக நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான அதிகபட்ச உதவி அளிக்கப்படும்.
பிஎஸ்என்எல் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறும். அனைத்து கிராம மக்களுக்கும் பிஎஸ்என்எல் சேவைகள் பயனளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் ஸ்ரீகுமார், துணை பொது மேலாளர்கள் சிவராமன், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அழுகிய நிலையில் பிணம் கண்டெடுப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
அணைக்கட்டு தாலுகா, டி.சி.குப்பம் அடுத்த கரடிகுடி காட்டுப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரி யாத நபர் தூக்கில் தொங்கினார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து பல நாட்களாகி இருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபிநாதன், தனிப் பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந் தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த சேர் பாடி கூட்ரோடு கல்லுட்டை பகுதியில் ஆள் இல்லாத வீட்டின் முன்பு, அடையா ளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க நபர் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
உடல் அருகே மது பாட் டில்கள் கிடந்தன. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விஏஓ சரளா வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் அன் பழகன், ஏட்டு முத்துகுமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






