என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Machines were inspected."

    • கலெக்டர் பார்வையிட்டார்
    • அறை சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக பின்புறம் அமைந்துள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது.

    எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு குடோன் திறக்கப்பட்டது. பின்பு அங்குள்ள எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×