என் மலர்
நீங்கள் தேடியது "24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை"
- குடியாத்தத்தில் எஸ்.பி. ஆய்வு
- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் வாகன சோதனை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகல் ஆந்திர மாநில எல்லை பகுதியை ஒட்டியபடி உள்ளது.
தற்போது அக்டோபர் 2-ந்தேதி பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிலிருந்து தமிழக அரசு தடை செய்துள்ளது. மேலும் ஒரு அமைப்பையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.
இதனால் முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக குடியாத்தம் பகுதியில் வாகன சோதனை மற்றும் பல இடங்களில் காவல்து றையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் திடீரென பாதுகாப்பு பணிகளையும், வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறை யினரின் பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்து றையினரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனை களையும் அறிவுரை களையும் காவல்துறை யினருக்கு வழங்கினார்.
இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது மாநில அளவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டுவேலூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 48 முக்கிய நபர்களுக்கும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 அலுவல கங்களுக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
மேலும் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட பின் அதன் உரிமையா ளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அந்த வாகனங்கள் விடுவிக்க ப்படும்.
மேலும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் மூலம் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய அமைப்புகளின் நபர்கள் மற்றும் அலுவலகங்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்டோபர் 2-ந்தேதி தமிழக அரசு ஊர்வலம் மற்றும் பேரணியை தடை செய்துள்ளது. வேலூர் மாவட்டத்திலும் பேரணி மற்றும் ஊர் வலங்களுக்கு அனுமதி இல்லை.
குற்றத் தொடர்புடைய முக்கிய நபர்கள் கண்கா ணிக்கப்பட்டு வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்றார்.






