என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில ஆயிரம் என்ஜினீயர்கள் மட்டுமே உருவாகினர்."

    • ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் பேச்சு
    • வி.ஐ.டி.யில் கிராவிடாஸ் அறிவுசார் திருவிழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் 2022 அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா இன்று தொடங்கியது.

    இதன் தொடக்க விழாவிற்கு வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இந்திய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் திறன்களை வெளி கொணர முடியும். இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    15 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 5 அல்லது 6 என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சில ஆயிரம் என்ஜினீயர்கள் மட்டுமே உருவாகினர்.ஆனால் தற்போது ஒரு ஆண்டுக்கு 14 லட்சம் என்ஜினீயர்கள் வெளியே வருகிறார்கள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க அரசு பங்களிப்பு அளித்து வருகிறது.

    10,15 ஆண்டுகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்தவர்கள் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகி விடுவார்கள்‌ ஆனால் தற்போது என்ஜினீயரிங் படித்த 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலேயே பணிபுரிகிறார்கள். சுய தொழில் தொடங்குகிறார்கள்.

    கடந்த 2016-ம் ஆண்டு 421 சுய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு 75,000 சுய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளது.

    நாட்டின் தேவைக்காக அனைத்தையும் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது நமக்கு தேவையான வற்றை உற்பத்தி செய்து வருகிறோம். உலகிலேயே நீளமான 150 எம்.எம்.துப்பாக்கி இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான எந்திரங்கள் உள்ளிட்டவற்றை நாமே தயாரிக்கிறோம்.இணையவழி குற்றங்களை கண்டுபிடிக்கவும் தேவையான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

    இதில் இளம் என்ஜினீயர்கள் பங்கு அதிகமாக உள்ளது.

    மாணவர்கள் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். தொழில்துறை உற்பத்தி தற்போது 17 சதவீதமாக உள்ளது. இதனை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இளம் என்ஜினீயர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். உலகில் முதல் முறையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். ராணுவ தொழில்நுட்ப நிதி ரூ.10 கோடியாக இருந்தது தற்போது 50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-

    வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கிராவிடாஸ் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் விஐடி மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மற்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதில் 140-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்படுகின்றன.

    உலகில் 5-வது பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்தியா பணக்கார நாடாக உள்ளது. ஆனால் இந்தியர்கள் ஏழையாக உள்ளனர்.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து கொண்டே போவது கவலை அளிக்கிறது. வேளாண்மை தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயர்கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு ஆட்டோ டயர்ஸ் நிறுவனங்களுக்கு ஆசிரியர்களின் கல்வி துறை தலைவர் தீபங்கர்பட்டாச்சாரியா, ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன உதவி தலைவர் சித்ராசுகுமார், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் உட்பட 13 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    ×