என் மலர்
வேலூர்
- எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநகர மாவட்ட அதிமுக சார்பில் இன்று திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம்
மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் துணை செயலாளர்கள் ஜெயபிரகாஷ், உமா விஜயகுமார், தாஸ், வக்கீல் பி.எஸ்.பழனி, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் நாகு, ஏ.ஜி பாண்டியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், எழில், வன்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
- வேலூர் கலெக்டர் எச்சரிக்கை
- கரும்பை எடுத்து செல்பவர்கள் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராமத்தில் அமைந்துள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரைவை பருவத்திற்கு 5990 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2021-22ம் ஆண்டில் அரைவை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் கரும்பு கிரயத்தொகை நிலுவை ஏதும் இல்லாமல் தமிழக அரசின் கரும்பை நிதி உதவியோடு வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட ஆலை துணை விதிக ளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டபடி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நட்டம் ஏற்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன.
முறை கேடுகளில் ஈடுபடும் சங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலைப்பகுதிக்கு உட்பட்ட பதிவு மற்றும் பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அதன்பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செல்போன் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் குளித் துக் கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அடுத்த பச்சகுப் பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண் வீட்டுக்கு வந்தார்.
அவர் தனது செல்போனில் அந்தப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பார்த்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து, அவரை கண்டித்தார். வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து 'விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆட்டோவில் வந்து தப்பி சென்றனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னையை சேர்ந்தவர் மகேஷ் ராஜசேகரன் (வயது30). இவர் சம்பவத்தன்று சென்னையிலிருந்து காரில் வேலூர் வழியாக பெங்களூருக்கு புறப்பட்டு வந்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பாக காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
காரில் ரூ.2 லட்சம் மற்றும் செல்போன் காரின் மற்றொரு சாவி, சில ஆவணங்கள் இருந்தன. அவர் ஓட்டலில் சாப்பிட்ட நேரத்தில் மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து ரூ.2 லட்சம், செல்போன், கார் சாவி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ராஜசேகரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஓட்டல் காவலர்கள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர்
தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்த ஒரு கேமராவில் காரில் மர்மநபர்கள் பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
ராஜசேகரன் காரை பூட்டிவிட்டு ஓட்டலுக்குள் சென்றதும் ஆட்டோவில் வந்து 3 பேர் இறங்குகின்றனர். ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து பணம், செல்போன் ஆகியவற்றை திருடுகிறார். பின்னர் இருவரும் அவர்கள் ஏற்கனவே வந்த ஆட்டோவில் தப்பிச் செல்கின்றனர்.
இந்த காட்சிகள் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதில் உள்ள மர்ம நபர்கள் வேலூரைச் சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்த கொள்ளையர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
- உணவு பொருள் தயாரிக்கும் வளாகத்தில் எலி, பூச்சிகள் நடமாட்டம் இருக்க கூடாது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை இனிப்பு காரம் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு சான்றிதழ் பெறாமல் உணவு தயாரிப்பதோ, விற்பதோ உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 பிரிவு 31-ன் கீழ் சட்டப்படி குற்றமாகும்.
எலி, பூச்சிகள் இருக்க கூடாது
தயாரிப்பு பகுதி சமையலறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். தயாரிப்பு பகுதி இருட்டாகவும் சுவர்களில் கரி படிந்திருக்கக்கூடாது. தரைத்தளம் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும், தரைத்தளம் உடைந்த நிலையில் பூச்சிகள். எலிகள், நடமாட்டம் இருக்கம் வகையில் இருக்க கூடாது.
உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள், புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி சுட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்பின் போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக ஒரு முறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும் புதிய எண்ணெயை சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.
நகைகள் அணிய கூடாது
இனிப்பு/காரவகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் அளவில் சேர்க்கலாம். அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்க கூடாது மேலும் அணுமதிக்கப்பட்ட வண்ணங்கள் அளவை மீறக்கூடாது.
உணவு தயாரிப்பிற்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
உணவு பொருள் தயாரிப்பு விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு உபயோகப்படுத்தும் தூய்மையாக கழுவி நன்றாக உலர்த்தப்பட்டிருக்க வேண்டும். கலன்கள் உணவு சமைக்கும் கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் கைகளில் நகங்களுடன், முழுச்சீருடையற்ற வகையில் எளிதில் கழன்று விழக்கூடிய நகைகள் மோதிரங்களுடன் பணியாற்றக் கூடாது.
புகை பிடிப்பவர்கள் அனுமதிக்க கூடாது
பணியின்போது பணியாளர்கள் கையுறை தலையுறை மேலங்கி அணிந்திருக்க வேண்டும். வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், எச்சில் துப்பதல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிப்பு வளாகத்தின் எப்பகுதியிலும் அனுமதிக்கக் கூடாது. உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் எவரையும் உணவு தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.
பேக்கிங் உணவுப் பொட்டலங்கள் மீது உணவு பொருளின் விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். விபரச்சீட்டு எளிதில் அழிய கூடிய வகையிலோ, கிழியக்கூடிய வகையிலோ, மேலும் ஸ்டிக்கர் வடிவிலோ வீபரச்சீட்டு அமைக்க கூடாது. சில்லரை வகையில் வீற்பனை செய்யப்படும் இனிப்பு/காரம் போன்ற உணவு பொருட்களின் தயாரிப்பு /காலாவதி விபரங்கள் காட்சி படுத்த வேண்டும்.
உணவு பொருட்களை அச்சிடப்பட்ட தாள்கள்/செய்தித் தாள்கள் வைத்து பறிமாறலோ,
தடைசெய்யப்பட்ட நெழி (Carry Bag) பைகளிலோ விற்பனை செய்யக் கூடாது.
உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட இடுபொருட்கள்/நுணை பொருட்களை வாங்கியதற்கான ரசிதுகள்/பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மற்றும் முகவரி தெரியாத உணவு வணிகர்களிடம் உணவு பொருட்களை வாங்கவோ விற்கவோ கூடாது. நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும். இனிப்பு கார வகைகளில் தரம் அளவுக்கு அதிகமான நிறமிகள் பயன்பாடு, லேபிள் விபரம் இல்லாமல் இருந்தால், உணவு பாதுகாப்பு துறையின் வாட் எஸ் அப்பில்.9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் பேட்டி
- 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில்பாஜக பட்டியல் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.இதில் கலந்துகொண்ட பட்டியல்அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பட்டியல் இன மக்களுக்காக பாஜக அரசு செய்த சாதனைகளை பட்டியல் இன மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இலவச வீடு போன்ற திட்டங்கள் மோடி தந்துள்ளார்.
பட்டியலின மக்களுக்காக பல்வேறு சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது. திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு துரோகம் செய்கிறது.
சமூகநீதி பேசும் இவர்கள் பட்டியல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு கூர்நிதியை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர்.
பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூர் நிதி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை பஞ்சமி நிலத்தை மீட்போம் என்றார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பஞ்சமி நிலத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு போலி நாடகம். இந்தி அவர்களுக்கு மட்டும் தேவையாக உள்ளதுஆனால் ஏழை எளிய பொதுமக்களை இந்தி கற்க விடாமல் தடுக்கின்றனர்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழே தெரியாது. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன் பொதுச் செயலாளர் ஜெகன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மோர்தானா அணையிலிருந்து 700 கன அடி நீர் வெளியேற்றம்
- தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை யாகும் கடந்த 2000-ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
சுமார் 11.50 மீட்டர் உயரமும் 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், மோர்தானா அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆதாரமான ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள பெரிய ஏரியான மாடிஏரி நிரம்பி வழிவதால் மோர்தனா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அணை 9 சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து அணையின் நீர்மட்டம் 11.56 மீட்டராக உயர்ந்தது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 844 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.
அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மோர்தானா அணைக்கு முக்கிய நீர் ஆதாரமான பலமநேர், புங்கனூர், கோட்டூர்புரம், மாடிஏரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை நள்ளிரவு வெள்ளம் தாண்டி சென்றது. காலை முதலே பொதுமக்கள் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை காண திரண்டு வந்து பார்த்து செல்கின்றனர்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோயில் தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டதால் தரைப்பாலும் சீரமைக்கும் பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உத்தரவு பேரில் நகராட்சி ஊழியர்கள் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரை பகுதியிலும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கலெக்டரும் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்
- கைது செய்ய உத்தரவு
வேலூர்:
வேலூர் அடுத்த ஓதியத்தூர் மலை கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் நினைவு அரங்கம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விசாரித்தார். தனது தந்தை பெயரில் உள்ள வீட்டுமனை நிலத்தை குறைவாக காண்பித்து பட்டா வழங்கியிருக்கிறார்கள்.இது பற்றி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விஜயலட்சுமி கூறினார்.
அப்போது கலெக்டர் மீண்டும் ஒருமுறை மனு தாருங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்றார். ஆனாலும் விஜயலட்சுமி எனக்கு தீர்வு கிடைத்தே தீர வேண்டும் மனு அளிக்க முடியாது என்றார்.
உடனே கலெக்டரும் தரையில் அமர்ந்து விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் இருந்த ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார். கலெக்டர் தரையில் அமர்ந்து குறை கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் நீங்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லுங்கள் என கலெக்டர் கூறினார். ஆனாலும் அவர் செல்ல மறுத்தார்.
இதனால் அவரை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். விஜயலட்சுமியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனது நிலத்திற்கான பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் முன் வரவில்லை இதற்காக மனு அளித்து அலைக்கழித்ததில் எனது தந்தை இறந்தே விட்டார். அவரை கொன்று விட்டீர்கள் என கண்ணீர் மல்க கூறினார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- 2-வது மண்டலத்தில் விழிப்புணர்வு
- 300 பேருக்கு இலவசமாக குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடு வீடாக சென்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்
அதற்குப் பிறகு மக்கும் குப்பை மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வீடுகளில் குப்பை வழங்கும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தெரு, சாலைகள் கால்வாயில் குப்பைகளை கொட்ட கூடாது.இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலகத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 27-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300 பேருக்கு இலவசமாக குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். பச்சை நிற தொட்டியில் உணவு காய்கறி பழங்கள் இலைகள் சமையல் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை சேகரியுங்கள்.
நீல நிற தொட்டியில் பிளாஸ்டிக் கேரி பேக் பாட்டில் கவர் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் சேகரியுங்கள். இதனை வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படையுங்கள்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
- ஐகோர்ட்டு உத்தரவுபடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்து பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் கோபால் ஜி தலைமையில் மனு அளித்தனர். அதில் சென்னை ஐகோர்ட்டு சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சாலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
வேலூர் கீழ்மொணவூர் ஊராட்சி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் என்கிற ரவீந்திரன் மனு அளித்தார்.
அதில் எனது வாடுக்கு உட்பட்ட கீழ் மொணவூர், மேல்மொணவூர் ஊராட்சியில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் 38 பேர் உள்ளனர். அவர்கள் வாழ வழி இல்லாமல் வறுமையில் தவிக்கின்றனர். அவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பொன்னை அருகே உள்ள பி. என். பாளையம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இதில் 30 குடும்பத்தினருக்கு 1.50 சென்ட் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கினார்கள். இதனை 3 சென்ட் நிலமாக உயர்த்தி பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
- புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்பு
- பொதுக்குழு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் ஒருமனதாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்திர பொது குழு கூட்டம் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை சங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார்.
இந்த பொது குழு கூட்டத்தில் வரும் 3 ஆண்டு களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக நறுவீ மருத்துவ மனை தலைவர் ஜி.வி. சம்பத், துணைத் தலைவர்களாக எஸ்.விஜயகுமார், வி.கிருஷ்ணகுமார், பி.எஸ்.தினேஷ் சங்கர், ஆர்.கங்காதரன், பி.வினோத்குமார், செயலாளராக எஸ்.ஸ்ரீதரன், பொருளாளராக பி.எஸ். சாய் விக்னேஷ்வர், துைண செயலாளராக ஜி.நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி.வி. சம்பத் சர்வதேச மேலாண்மை துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
மேலும், சங்கத்தின் துணைத் தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்துள்ளார். பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.வி. சம்பத்துக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- பைக்ைக போட்டு விட்டு தப்பி ஓட்டம்
- போலீசாரவிசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் குடியாத்தம் வனச்சர கத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் கொட்டாளம் வனப்பகுதியை அருகே ரோந்து சென்றனர்.
அப்போது ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டி ருந்தனர்.
ரோந்து சென்ற வனத்துறையினரை கண்டவுடன் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றனர் அதற்குள் கும்பல் தப்பி சென்றனர்.
கும்பல்
மோட்டார் சைக்கிளுடன் நாட்டு துப்பாக்கி, டார்ச் லைட் மற்றும் வேட்டையாட பயன்படுத்தும் உபகர ணங்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து வந்த அந்த கும்பல் வனவிலங்கு அல்லது மானை வேட்டையாடி அதனை விற்க வந்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.






