என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக நறுவீ ஜி.வி.சம்பத் தேர்வு
    X

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத்துடன் செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் மற்றும் துணை செயலாளர் ஜி.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் உள்ளனர்.

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக நறுவீ ஜி.வி.சம்பத் தேர்வு

    • புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்பு
    • பொதுக்குழு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் ஒருமனதாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார்.

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்திர பொது குழு கூட்டம் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை சங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார்.

    இந்த பொது குழு கூட்டத்தில் வரும் 3 ஆண்டு களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக நறுவீ மருத்துவ மனை தலைவர் ஜி.வி. சம்பத், துணைத் தலைவர்களாக எஸ்.விஜயகுமார், வி.கிருஷ்ணகுமார், பி.எஸ்.தினேஷ் சங்கர், ஆர்.கங்காதரன், பி.வினோத்குமார், செயலாளராக எஸ்.ஸ்ரீதரன், பொருளாளராக பி.எஸ். சாய் விக்னேஷ்வர், துைண செயலாளராக ஜி.நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி.வி. சம்பத் சர்வதேச மேலாண்மை துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

    மேலும், சங்கத்தின் துணைத் தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்துள்ளார். பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.வி. சம்பத்துக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×