என் மலர்
திருவண்ணாமலை
விவசாயியை கொலை செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரகுளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது26). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(45). சரண்ராஜிக்கும் ஏழுமலைக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏழுமலை, சரண்ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிவந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சரண்ராஜ் தனது நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் இரும்பு கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
இதனையறிந்த ஏழுமலை சரண்ராஜை கொலை செய்ய அங்கு சென்றார். மின்சார ஒயரை அங்கு சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் கொக்கி போட்டு சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றார்.
அப்போது சரண்ராஜ் விழித்து கொண்டு கத்தி கூச்சலிட்டார். அதை கேட்டு பக்கத்து வீட்டில் படுத்திருந்த ரேணுகோபால்(33) என்பவர் ஓடி வந்து தடுத்தார்.
இருட்டில் ஏழுமலை கையில் வைத்திருந்த மின்சார வயரை கவனிக்காமல் ரேணுகோபால் பிடித்ததால் ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய இருவரும் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்ராஜ் இதுபற்றி கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் பலியான சம்பவம் கலசபாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் திருவிழா தொடர்பான அமைதி கூட்டத்தில் சமரசம் ஏற்படாததால் தேவிகாபுரத்தில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ளது தேவிகாபுரம் தேவிகாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்திர பெருவிழா 14 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதை ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் நடத்தி வந்தனர். இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் மற்றொரு பிரிவினர் எங்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கீடு செய்து திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.இதற்கு வழக்கமாக திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையடுத்து சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி லட்சுமி தலைமை தாங்கினார்.
செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், போளூர் டி.எஸ்.பி. குணசேகரன், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், செய்யாறு சிப்காட் தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் முரளி மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா விழா குழு பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் இதற்கு முன்பு திருவிழா நடத்திய ஒரு பிரிவினர் உள்பட கலந்து கொண்டனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி கூறுகையில்:-
புதிதாக விழா நடத்த அனுமதி கேட்டு உள்ள ஒரு பிரிவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தீர்ப்பு நாளை வர உள்ளது. அதன் பிறகு திருவிழா நடத்துங்கள். மேலும் எங்களது உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு சொல்வதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொள்ளாத இதற்கு முன்பு திருவிழா நடத்திய ஒரு பிரிவினர் மற்றும் விழாக்குழு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேத்துப்பட்டு நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் கோவில் 61ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது.
கடந்த 1-ந் திருவிழா கொடி ஏற்றப்பட்டது இதைத் தொடர்ந்து 2-ந் தேதி மயானக்கொள்ளை திருவிழா 3-ந் தேதி அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும் 4-ந் தேதி புஷ்ப பல்லக்கில் வீதஉலா 5-ந் தேதி ஓட வாகனத்தில் வீதி உலா 6-ந்தேதி வெள்ளித் தேரில் வீதி உலாவும் நடைபெற்றன.
நேற்று அம்மன் தேர் விழா நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக காலையில் விரதம் இருந்த சுமங்கலி பெண்கள் பல்வேறு வேண்டுதல்களை வேண்டி பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் கோவிலை சுற்றி ஊரணி பொங்கல் வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் தர்ம கர்த்தாக்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறங்காமல் மக்கள் பணியாற்றி வருகிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி சார்பில் தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் 69&வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் நேற்று இரவு நடைபெற்றது.
பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 1,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் மிஷின், டீ பாய்லர், இட்லி குண்டா உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசும்போது கூறியதாவது:-
திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக இருப்பது நமக்கு பெருமை. இங்கு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர்.
தி.மு.க.ஆட்சியில் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை மூலம் தனியார் வசம் இருந்த கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது. கடைசி காலத்தில் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை கைவிட்டுவிட்டார். கடவுள் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறினார்.
தி.மு.க ஆன்மீக வாதிகளுக்கும் துணையாக இருக்கிறது. அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் கனவு. கோவிலில் பூஜை செய்பவர்களின் பிள்ளைகளும் தற்போது எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போலதான் மற்றவர்களும் கோவில் பூஜை செய்வதில் தவறில்லை என்று அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றவர்களும் பூஜை செய்வதில் எந்த தவறும் இல்லை. அதையும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.
கிராமங்களில் அங்குள்ள மக்களே பூஜை செய்கின்றனர்.நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் காரணம்.
கடந்த 9 மாதங்களாக முதல்&அமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அவர் இரவில் தூங்காமல் அமைச்சர்களை தொடர்பு கொண்டு திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும் என்று கேட்டு வருகிறார். என்னிடம் ஒரு நாள் இரவு 2 மணியளவில் பேசினார். அப்போது மதுரையில் நூலகம் கட்டும் பணி தொடர்பாக கேட்டறிந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை அருகே ½ பவுன் நகைக்காக சிறுவர்கள் மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓடை பகுதியில் விறகு வெட்ட சென்ற சுசிலா அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் காணாமல் போய் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சுசிலா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுசிலாவின் மகன் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் திருட திட்டம் தீட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து மூதாட்டியை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மலை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதில் ஒரு சிறுவன் பிளஸ்-2, மற்றொரு சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறன்றனர். மேலும் ஒரு சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓடை பகுதியில் விறகு வெட்ட சென்ற சுசிலா அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் காணாமல் போய் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சுசிலா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுசிலாவின் மகன் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் திருட திட்டம் தீட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து மூதாட்டியை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மலை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதில் ஒரு சிறுவன் பிளஸ்-2, மற்றொரு சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறன்றனர். மேலும் ஒரு சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய அதிகாரிகளால் வேட்டவலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேட்டவலம்:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அணுகுமுறை ஊராட்சிக்கு உட்பட்ட பொன்ன மேடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள தாங்கள் குளம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
மண்டல துணை தாசில்தார் கவுரி தலைமையில் பி.டி.ஓ. பரமேஸ்வரன், துணை பி.டி.ஓ. பாக்கியலட்சுமி, ஆர்.ஐ.அல்லி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தண்டபாணி, வி.ஏ.ஓ மாலதி, ஞானவேல் மற்றும் போலீசார் முன்னிலையில், குளத்திற்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்து, அங்கு ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழாவை வழக்கம் போல் நடத்த கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ளது தேவிகாபுரம் தேவிகாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்திர பெருவிழா 14 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதை ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் நடத்தி வந்தனர்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் மற்றொரு பிரிவினர் எங்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கீடு செய்து திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். இதற்கு வழக்கமாக திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு வழக்கம் போல் திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனைத்து கடைகளுக்கும் சென்று நாளை ஒரு நாள் (இன்று) அனைவரும் கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டம் செய்ய வேண்டும் என கேட்டனர்.
இதையடுத்து தேவிகாபுரம் கிராமத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் இன்று மூடப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் இன்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் வழக்கம்போல் திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் மற்றும் திருவிழா நடத்த அனுமதி கேட்ட ஒரு பிரிவினர் அனைவரையும்ம் அழைத்து கோவிலில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வழக்கமாக திருவிழா நடத்தும் பிரிவினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அவர்கள் அங்கிருந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சேத்துப்பட்டில் பஸ்-பைக் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் ஞானசேகர் (வயது 35) திருமணம் ஆகவில்லை.
ஞானசேகர் மோட்டார் சைக்கிளில் வயலூர் கிராமத்திலிருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்தவாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது மேல்மலையனூரில் வந்த சுற்றுலா பஸ் பைக் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட ஞானசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள பாலியப்பட்டு ஊராட்சியில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வருவாய்த்துறையினர் மூலம் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கு தேவையான நிலங்கள் பார்வையிட பட்டன. இதுபற்றி அறிந்த விவசாயிகள் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் கிராம மக்கள் சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் போராட்டம் தொடங்கி 75-ஆவது நாளை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஊர்வலமாக வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.அப்போது கையில் கரும்புடன் ஏராளமான கிராம மக்கள் வந்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிப்காட் அமைப்பதன் மூலம் பாலியப்பட்டு, புதிய காலனி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல் காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர், செல்வபுரம், வாணியம்பாடி ஆகிய கிராமங்கள் மற்றும் பெரிய புனங்காடு, சின்ன பாலியப்பட்டு கிராமங்கள் உள்பட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
சிப்காட் அமைத்தால் தற்போது தங்கள் விளைநிலங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், நெல், மணிலா கரும்பு மற்றும் சிறுதானியம் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், மேலும் தாங்கள் கால்நடைகளை வளர்த்து பொருளீட்ட முடியாது என்றும், கிராம மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டிநடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கோலம் கோலாகலம் என்ற தலைப்பில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி மதியம் 1மணிவரை நடைபெற்றது.பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஏ.எஸ்.பி. கிரண் ஸ்ருதி கலந்துகொண்டார்.பரிசுக்குரிய கோலங்களை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.
அதன்படி அகிலா, சரண்யா, கஸ்தூரி, அனந்தலட்சுமி ஆகிய 4 பேருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது.சங்கீதா, தீபா, ஷீபா, பவித்ரா ஆகிய 4 பேருக்கு இரண்டாம் பரிசாக எல்.இ.டி.டி.வி. வழங்கப்பட்டது.பார்வதி, ஆனந்தபைரவி, மகாலட்சுமி, வரலட்சுமி, ஆகிய 4 பேருக்கு மூன்றாம் பரிசாக வாஷிங்மிஷின் வழங்கப்பட்டது.
பரிசுகளை ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, சிவா எலக்ட்ரானிக்ஸ் விமல் குமார், தொழிலதிபர் செந்தில் ஆகியோர் வழங்கினர். இதுதவிர ஆறுதல் பரிசாக 200 பெண்களுக்கு ரூ.500 மதிப்பிலான கூப்பன் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார்.இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓடை பகுதியில் விறகு வெட்ட சென்ற சுசிலா அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் காணாமல் போய் இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சுசிலா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுசிலாவின் மகன் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் திருட திட்டம் தீட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து மூதாட்டியை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மலை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதில் ஒரு சிறுவன் பிளஸ்&2, மற்றொரு சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறன்றனர். மேலும் ஒரு சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.திருவண்ணாமலை அருகே நகைக்காக சிறுவர்கள் மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 15 பதவிகளை பெண்கள் கைப்பற்றினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 14 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் 273 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2-ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 14 தலைவர் மற்றும் 14 துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பேரூராட்சிகளில் பெண்களின் ஆதிக்கம் உள்ளனர். 10 பேரூராட்சி தலைவர் பதவிகளில் சேத்துப்பட்டு, தேசூர், கண்ணமங்கலம், போளூர், பெரணமல்லூர், புதுப் பாளையம், வேட்டவலம் ஆகிய 7 பேரூராட்சி தலைவர் பதவியை பெண்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோல் 10 பேரூராட்சிகளில் துணைத் தலைவர் பதவியை செங்கம், சேத்துப்பட்டு, தேசூர், கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், போளூர், புதுப்பாளையம், வேட்டவலம் ஆகிய 8 இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் 20 பதவிகளில் 15 பதவிகளை பெண்கள் கைப்பற்றியுள்ளனர்.
3 (செங்கம், களம்பூர், கீழ்பென்னாத்தூர்) தலைவர் மற்றும் 2 (களம்பூர், கண்ணமங்கலம்) துணை தலைவர் பதவிகளை மட்டுமே ஆண்கள் கைப்பற்றியுள்ளனர்.
அதேபோல் நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளில் ஆண்களின் ஆதிக்கம் உள்ளது. 4 நகராட்சிகளில் ஆரணி, வந்தவாசி, திருவத்திபுரம் (செய்யாறு) ஆகிய 3 நகராட்சித் தலைவர் பதவிகளையும் மற்றும் ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய 3 நகராட்சி துணை தலைவர் பதவிகளை ஆண்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவி மற்றும் திருவொற்றியூர் நகராட்சி துணைத்தலைவர் பதவி என 2 பதவிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளனர்.






