என் மலர்
திருவண்ணாமலை
உழவர் சந்தை காய்கறிகளை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை :
தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் சு.மருதாசலம் கலந்து கொண்டு பேசினார்.
உதவி தோட்ட கலை அலுவலர்களுக்கு பயணப்படி மாதாமாதம் ரூ.600 வழங்கப்படுகிறது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ரூ.6000 வழங்க வேண்டும்.
2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவி தோட்ட கலை அலுவலர்கள் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.
உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் அனைத்தும் தோட்டக்கலைக்துறையை சார்ந்தது. ஆனால் அதனை வேளாண்மை துறைக்கு கொடுத்துள்ளனர்.
எனவே தோட்டக்கலைத்துறைக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை அருகே ஆசிரியர் மற்றும் அவரது மகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது40) இவர் சே.கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சிவபாலனுக்கு திருமணமாகி ரம்பா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவபாலன் தனது செல்போனை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றார். அப்போது அவரது வீட்டில் மகள் தேவிப்பிரியா (17) மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் மாயமான சிவபாலன் மணலூர்பேட்டை செல்லும் ரோட்டில் உள்ள காட்டில் கழுத்து, கை நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தேவிபிரியாவும், சிவபாலனும் எப்படி இறந்தனர்? என்பது மர்மமாக உள்ளது.அவர்கள் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை.
தேவிப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.அவர் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.சிவபாலன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.அவர் திருவண்ணாமலை மாவட்டம் வேலையாம்பாக்கத்தை சேர்ந்த ரம்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த மர்மசாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவிப்பிரியா இறந்தது தொடர்பாக தண்டராம்பட்டு போலீசாரும், சிவபாலன் இறந்தது தொடர்பாக தச்சம் பட்டு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிவில் மேலும் பல தகவல்கள் தெரியும் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாவுக்கு வந்த உக்ரைன் நாட்டினர் 22 பேர் நாடு திரும்ப முடியாமல் திருவண்ணாமலையில் தவித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சுற்றுலாவாக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையிலும் பலர் தங்கி உள்ளனர்.
அவர்கள் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோட்டில் ‘குளோபல் வாட்ச் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன் என்பவர் அவரது சொந்த விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 ஆண்கள் உள்பட 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து தங்க வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உக்ரைனை சேர்ந்த மக்கள் தவித்து வருவதாக தகவல் அறிந்தேன்.
உக்ரைனை சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். இதையறிந்த திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் மட்டுமின்றி பெங்களூரு, ரிஷிகேஷ் பகுதியில் இருந்தும் உக்ரைனை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.
தற்போது எனது விடுதியில் 22 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கி இருக்கும் இவர்களுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். இவர்களுடைய சுற்றுலா விசா காலம் முடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே உக்ரைன் நாட்டில் நிலைமை சீராகி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை திருவண்ணாமலையில் உள்ள ‘யாத்திரி நிவாஸ்’ போன்ற அரசின் தங்கும் விடுதிகளில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சுற்றுலாவாக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையிலும் பலர் தங்கி உள்ளனர்.
அவர்கள் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோட்டில் ‘குளோபல் வாட்ச் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன் என்பவர் அவரது சொந்த விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 ஆண்கள் உள்பட 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து தங்க வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உக்ரைனை சேர்ந்த மக்கள் தவித்து வருவதாக தகவல் அறிந்தேன்.
உக்ரைனை சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். இதையறிந்த திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் மட்டுமின்றி பெங்களூரு, ரிஷிகேஷ் பகுதியில் இருந்தும் உக்ரைனை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.
தற்போது எனது விடுதியில் 22 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கி இருக்கும் இவர்களுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். இவர்களுடைய சுற்றுலா விசா காலம் முடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே உக்ரைன் நாட்டில் நிலைமை சீராகி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை திருவண்ணாமலையில் உள்ள ‘யாத்திரி நிவாஸ்’ போன்ற அரசின் தங்கும் விடுதிகளில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருவண்ணாமலையில் உரத்தட்டுபாட்டை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், அரசு நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் ஒருமூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை பணம் வசூலிப்பதை கண்டித்தும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை கண்டித்தும் பா.ஜ.க.சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம், பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலாளர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் கோட்ட விவசாய அணி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
ரேசன் அரிசியை பளபளப்பாக்க ஆலைகள் நவீனமாக்கப்பட்டு வருகிறது.
போளூர்:
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில், ஒரு கோடிக்கும் அதிகமான ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ரேசனில் வழங்கப்படும் அரிசி பெரும்பாலும் தரமாக இருப்பதில்லை. கல், குருணை, பழுப்பு நிறம் நீக்காமல் தரமற்ற வகையில் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பிரச்னைக்கு முடி வுகட்டும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளில், நவீன எந்திரங்களை பொருத்தி, கல், குருணை மற்றும் பழுப்பு நிறத்தை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 23 நவீன அரிசி ஆலைகளில் ஏற்கனவே 6 ஆலைகளில் தலா 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, போளூர் உட்பட 12 நவீன அரிசி ஆலைகளில் புதிய எந்திரங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
போளூர் அடுத்த சனிக்கவாடி அருகே உள்ள அரசு நவீன அரிசி ஆலையில் புதிய எந்திரம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதை மாவட்ட வினியோக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தாசில்தார் சண்முகம், அரிசி ஆலை பொறியாளர் சுந்தரமகாலிங்கம் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் பங்குனி திருவிழா நடைபெற வேண்டி பெண்கள் வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிப்பட்டனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரியநாயகி அம்மன் கனககிரி ஈஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டிற்கு ஒருமுறை பங்குனி உத்திரப் பெருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் திருவிழாவை நடத்தி வந்தனர்.
இதில் மற்றொரு தரப்பினர் பெரியநாயகி அம்மன் பங்குனி உத்திர தேர் திருவிழாவை எங்களுக்கும் ஒருநாள் நடத்த அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு தேவிகாபுரத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதை அடுத்து வழக்கம்போல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடத்தும் ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க நீதிபதி 2 வார காலம் அவகாசம் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் பெரியநாயகி அம்மன் கனககிரீசுவரர் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வழக்கம்போல் நடைபெற வேண்டி தேவிகாபுரத்தில் உள்ள பெண்கள் அவர்கள் வீட்டின் முன்பு வாழை இலையில் பச்சரிசி வைத்து 5 விளக்குகள் ஏற்றி தேர் திருவிழா நடைபெற வேண்டுமென்று பெரிய நாயகி அம்மனையும் கனககிரி ஈஸ்வரையும் வேண்டி விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் மதுவிலக்கு சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் திருவண்ணாமலையில் உள்ள போலீஸ்சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற்றது.
இதில் 99 இரண்டு சக்கர வாகனங்களும், ஒரு மூன்று சக்கர வாகனம் 6 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 106 வாகனங்கள் ரூ.15லட்சத்து 65ஆயிரத்து 400-க்கு ஏலம் போனது. இதற்கு சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.2லட்சத்து 81ஆயிரத்து 772 உட்பட மொத்தம்
ரூ.18லட்சத்து 47ஆயிரத்து 172&க்கு ஏலம் விடப்பட்டது.
ஆரணி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவருக்கு சதீஷ் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் உள்ளனர்.
சதீஷ் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார் சந்தியா ஆரணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டதாரி முதலாமாண்டு படித்து வருகிறார்.
வீட்டில் வேலை செய்யாத காரணத்தினால் பெற்றோர்கள் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தில் பெருங்கற்கால வாழ்விடம், தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வெடால் அருகே உள்ள மாந்தாங்கல் என்னும் கிராமத்தில் பெருங்கற்கால வாழ்விடம், தொழிற்கூடம் மற்றும் ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் அவ்வமைப்பைச் சேர்ந்த குணகம்பூண்டி மூ.பழனி, வெடால் விஜயன் ஆகியோர் இணைந்து வந்தவாசி வட்டத்தில் உள்ள குணகம்பூண்டி ஊரை ஒட்டிய பகுதியில் கள ஆய்வு செய்த பொழுது அவ்வூரை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சுற்றிலும் ஏராளமான பெருங்கற்கால சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய மாந்தாங்கல் ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள மலையின் அடிவாரத்தில், ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 செ.மீ சுற்றளவு கொண்ட இரு துண்டு குழாய்களும் மேற்பரப்பிலே கள ஆய்வில் கண்டறியப்பட்டது. இக்குழாய்களின் மத்தியில் உள்ள துவாரம் 1 செ.மீ சுற்றளவுடன் காணப்படுகிறது.
சுடுமண்ணால் ஆன இக்குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்றுக் கிடக்கின்றன. இரும்பு இருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காகத் துருத்தி போலத் தூரத்திலிருந்து இதுபோன்ற குழாய்கள் மூலம் காற்றுக் கொண்டுபோக இவ்வமைப்பை பயன்படுத்தி இருக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் ஏராளமான கருப்பு சிவப்பு பானை ஓடுகளும், இரும்பு உருக்கு கழிவுகளும் அதிகளவில் காணப்படுகிறது. இதன்மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் இரும்பு பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை உபயோகித்து உள்ளது தெரியவருகிறது.
இப்பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதன் பாறைகளிலில் இருந்த இரும்பை உலையில் வைத்துப் தனியாகப் பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி கோடாரி, வேல், போன்ற பல பொருட்களைத் தயாரித்துள்ளதை அறியமுடிகிறது.
இப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியின் மற்றொரு புறம் இதற்கு இணையாக நீண்ட கோடு போல இன்னொரு மலையும் காணப்படுகிறது. இந்த இரு மலைப்பகுதியின் மத்தியில் பெரிய சமவெளி பரப்பு காணப்படுகிறது.
இவ்விடத்திலும் ஏராளமான பானை ஓடுகள் மற்றும் கல்லாயுதங்கள் காணக்கிடைக்கிறது. மலைகளுக்கிடையே அமைந்துள்ள இச்சமவெளிப் பகுதி மனிதர்களின் வாழவிடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு மேற்கே ஏராளமான கல்வட்டங்கள் காணக்கிடைக்கிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கல்வட்டங்கள் எந்த சிதைவும் இன்றி காணப்படுகிறது. ஏனைய கல்வட்டங்கள் விவசாயம் மற்றும் ஊர் வளர்ச்சியின் காரணமாகச் சிதைந்து அதன் எச்சங்கள் இன்றளவும் அப்படியே காணமுடிகிறது.
இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இன்றைய மாந்தாங்கல் ஊரின் சுடுகாடும் இந்த ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கிறது.
சுமார் 3 வருடம் முன்பு இவ்வூரில் சாலையோரம் இருந்த பெரிய கல்லை நகர்த்திய பொழுது ஈமப்பேழை ஒன்று கண்டெடுக்கப்பட்டு, அது திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் இருப்பது குறிப்பிடதகுந்தது.
சுமார் 3000 வருடங்கள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்கள் உள்ள இவ்வூரில் தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால் இப்பகுதியின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய தகவல்கள வெளி உலகிற்கு தெரிய வரும்.
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இன்ஸ்பெக்டர் ஆணிப்படுக்கையில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செயல்பட்டுவரும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையத்தில் விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலர் ஜி.கண்ணகி தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயம் தொண்டுநிறுவனம் மோகன் குமார், தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் பி.மதன்மோகன், மண்டலத் தலைவர் ஆர்.சிவராமன், மாவட்ட தலைவர் க.சா.முருகன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சித்ரப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பெண் குழந்தை களுக்கு வன்கொடுமைகள் நடப்பதை தடுக்க வேண்டும்., பெண்கள் மன உறுதி, உடல் வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் (சென்னை) இன்ஸ்பெக்டர் காஞ்சனா (வயது49) அவரது மகள் வர்ஷினி ஆகிய இருவரும் ஆணி படுக்கையில் 10நிமிடங்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவரும் நெல் வகைகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் ----என சேத்துப்பட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையங்குளத்தூர் சமுதாய கூடத்தில்சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி கள்) சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சேத்துப்பட்டு வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் கொள் முதல் செய்ய வேண்டும்.
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உர கடைகளில் விவசாயிகள் உரம் வாங்கும் போது கூடுதலாக விவசாய இடுபொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை உண்டான பணத்தை வியாபாரிகள் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்துகிறார்களா என்று விசாரணை நடத்தி பணத்தை உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேத்துப்பட்டு அருகே உள்ள மேலத்தாங்கல் கூட்டு ரோட்டிலிருந்து மேலத்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.
எனவே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கூட்டத்தில் கால்நடை மருத்துவர் ஹரிகுமார் மின்வாரிய உதவி பொறியாளர் பக்தவசலம் பெரணமல்லூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராஜாராம் மற்றும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் பயனாளிகளுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை:
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டத்தில் ஒர்க் ஆர்டர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 940 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
குடிசையில் வசிக்கும் மக்களுக்காக இலவச வீடு கட்டும் திட்டத்தை முதன் முதலில் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதை பார்த்து அப்போதைய மத்திய அரசு இந்திரா தொகுப்பு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது.தமிழகத்தில் 860 பஞ்சாயத்துகளை கொண்ட முதல் பெரிய மாவட்டம் திருவண்ணாமலை.
அதேவேளையில் குடிசைகள் அதிகம் கொண்ட மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அடுத்த படியாக திருவண்ணாமலை உள்ளது. இந்த மாவட்டத்தில் இப்போது 18 ஆயிரம் பேருக்கு இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இப்போது பட்டா வைத்து உள்ளவர்களையும் இந்த திட்டத்தில் இணைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், சுகாதார துணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பார்வதி சீனுவாசன், துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சரவணன், திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், யூனியன் தலைவர்கள் கலைவாணி கலைமணி (திருவண்ணாமலை) அன்பரசி ராஜசேகரன் (கலசபாக்கம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.






