என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் அமைத்து சாதனை படைத்த கலெக்டருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் விவசாய மாவட்டமாகும்.இங்கு சாத்தனூர் அணை பாசனத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைகாலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க  கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். 

    அதனடிப்படையில் மிகக் குறுகிய காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன. இந்த பணியில் மகளிர் குழுவினர் உட்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.

    பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பருவ மழை பெய்ததால் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேறு மாவட்டத்தில் இல்லாத வகையில் அதிக அளவில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டதால் அதற்கு உலக சாதனை அமைப்புகள் மூலம் 4 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

    இதுபற்றி அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக ஊரக வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட கலெக்டர் முகேஷுக்கு நேற்று தலைமை செயலகத்தில் 2021- ம் ஆண்டுக்கான விருது வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள், பொதுப்பணித்துறை செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காட்டாம் பூண்டி கிராமத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கர் ஓடை நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.

    திருவண்ணாமலை அடுத்த காட்டாம் பூண்டி கிராமத்தில் ஓடை நிலத்தை ஆக்கிரமித்திருந்த 1 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் மற்றும் அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    மேலும் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை எந்திரங்கள் மூலம் அகற்றினர்.
    சேத்துப்பட்டு அருகே டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். 

    மணிகண்டன் டிரைவர் வேலை செய்து வந்தார். மணிகண்டனுக்கு உடல் நல குறைவால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் மணிகண்டன் மன உளைச்சலுக்கு ஆளானார். 

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மணிகண்டனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். 

    இது குறித்து சேத்துபட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு அருகே ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம்  சேத்துப்பட்டு பேரூராட்சியில் போளுர் சாலையில் அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த மருத்துவமனையில் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

    இங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

    ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்புகள் நெல்பயிர் மற்றும் வீடு கட்டியுள்ளது தெரிந்தது. இதை அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். 

    இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் கோமதி, வருவாய் ஆய்வாளர்கள் ஹேமலதா, கன்னியப்பன் கிராம நிர்வாக அலுவலர்கள் பஷீர் முருகானந்தம் அப்சர் கலைவாணன் மற்றும் நில அளவை துறை ஊழியர்கள் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடு மற்றும் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரை அகற்றினர்.
    போளூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்ரோட்டில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    மோரக்கனியனூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள மோரக் கனியனூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமிற்கு சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் லட்சுமி லலிதா வேலன் மண்டல துணை தாசில்தார் கோமதி, மோரக்கனியனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணியப்பன், நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வரவேற்றார்.

    முகாமில் சிறப்பு அழைப் பாளராக பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்து கொண்டு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா, புதிய பட்டா, பட்டா பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20 பேர் மனு அளித்தனர்.

    இதில் உரிய ஆவணம் உள்ள 11 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக நலத்திட்ட உதவிகளை பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இளங்கோவன் வழங்கினார். 

    முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்சர் கலைவாணன் மற்றும் நில அளவைத் துறையினர் வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோரக் கனியனூர் கிராம நிர்வாக அலுவலர் ராகவ சந்திர கோட்டீஸ்வரன் நன்றி கூறினார்.
    திருவண்ணாமலை அருகே சுடுகாடு வசதி இல்லாததால் அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் வட்டத்திற்குட்பட்ட வட ஆண்டா பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து  வருகின்றனர்.

    அந்தபகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எந்தவிதமான சுடுகாடு வசதியும் இல்லாததால் அந்த கிராம மக்கள் கடும் சிரமத்தை உள்ளாகியுள்ளனர்.

    இதுதொடர்பாக பலமுறை கலெக்டர் மற்றும் தாசில்தார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்வைல.

    இந்த நிலையில்நேற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் இறந்து விட்டார்.அவரது உடலை அடக்கம் செய்யமுடியாமல் தவித்த அந்தப் பகுதி மக்கள் தலித் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தலித் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் நேரடியாக அந்தப் பகுதிக்குச் சென்று, இறந்தவர் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    இதுபற்றி அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார், போலீசார் நேரடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்து சமாதானக் பேச்சுவார்த்தைநடத்தினர்.

    இதில் அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக சர்வே செய்து சுடுகாடு அமைக்க இடம் வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.இதைத்தொடர்ந்து பொது மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பணியாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகபணியாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. 

    கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டு உறுப்பினர்களில் 13 நபர்கள் புதியவர்களும், 2-நபர்கள் முன்னாள் கவுன்சிலர்களும் என மக்களால் தேர்ந்ததெடுக் கப்பட்டு கடந்த (2-ந்தேதி) பதவி ஏற்றுகொண்டனர். 

    இதில், 8-வது வார்டு உறுப்பினர் சரவணன் தலைவராகவும், 9&வது வார்டு உறுப்பினர் தமிழரசி சுந்தரமூர்த்தி துணை தலைவராகவும் (4&ந்தேதி) பொறுப்பேற்று கொண்டனர். இதனை அடுத்து, மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அறிமுக கூட்டம் (11-ந்தேதி) நடந்தது. 

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைதலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். 

    செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். வார்டு வாரியாக தேர்ந்தெடுக் கப்பட்ட மன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பற்றி உறுப்பினர்களுக்குள் செயல் அலுவலர் அறிமுகம் செய்தார். 

    பின்னர், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களை அறிமுகம் செய்தும், அவர்களின் பணி விவரம் குறித்தும் செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவித்தார். 

    வார்டு கவுன்சிலர்கள் பலராமன், பாக்யராஜ், ஏழுமலை, மணி, சாந்தகுமாரி, கனகா, கவிதா, ஜீவா, தமிழ்குடிமகள், அஞ்சலை, மல்லிகா, அம்பிகா, இளநிலை உதவியாளர் தனமல்லி, வரி தண்டவர் பூபாலன், கணினி இயக்குனர் சுரேஷ், அலுவலக உதவியாளர் சுதா, தூய்மை காவலர்கள், மகளிர் குழு தூய்மைபணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். பேரூராட்சிக்குட்பட்ட 15 - வார்டுகளிலும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை, செயல் அலுவலர் உடன் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில், இளநிலை உதவியாளர் தனமல்லி நன்றி கூறினார்.
    உக்ரைனை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் 22 பேர் தங்கி உள்ளனர்.

    திருவண்ணாமலை:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்த நிலையில் உக்ரைனை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் 22 பேர் தங்கி உள்ளனர்.

    உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் தவித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன் என்பவர் தனது சொந்த விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 ஆண்கள் உள்பட 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து தங்க வைத்துள்ளார்.

    போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உக்ரைனை சேர்ந்த மக்கள் தவித்து வருவதாக தகவல் அறிந்தேன். உக்ரைனை சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன்.

    இதை அறிந்த திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் மட்டுமின்றி பெங்களூரு, ரிசிகேஷ் பகுதியில் இருந்தும் உக்ரைனை சேர்ந்த வெளிநாட்டினர் என்னை தொடர்பு கொண்டனர். தற்போது எனது வீடுதியில் 22 பேர் தங்கியுள்ளனர்.

    இங்கு தங்கி இருப்பவர்களுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். இவர்களுக்கு சுற்றுலா விசாவிற்கான நாட்கள் கூட முடிய வாய்ப்புகள் உள்ளது.

    எனவே உக்ரைன் நாட்டில் நிலைமை சீராகி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை திருவண்ணாமலையில் உள்ள யாத்திரிகா நிவாஸ் போன்ற அரசின் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டினரை தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    செய்யாறு அருகே தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    செய்யாறு :

    செய்யாறு அருகே உள்ள கீழ்நீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 31). இவர் சலவை தொழிலாளி. இவரது மனைவி புனிதா.

    இவர்களின் மகள் சுஷ்மிதா (3) நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சுஷ்மிதா அங்குள்ள தொட்டியில் தவறி விழுந்துள்ளார். 

    புனிதா நீண்ட நேரமாக குழந்தையை தேடியபோது தொட்டிக்குள் குழந்தை மூழ்கிய நிலையில்  கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக குழந்தையை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேணுகோபால் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    சேத்துப்பட்டு கொங்காபுரம் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.
    சேத்துப்பட்டு :

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கொங்காபுரம் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது முகாமிற்கு சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் பட்டா மாறுதல் புதிய பட்டா பெயர் திருத்தம் முகவரி மாற்றம் உள்ளிட்ட நிள அளவை துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36 பேர் மனு அளித்திருந்தனர்.

    இதில் உரிய ஆவணம் உள்ள 7 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக நலத்திட்ட உதவிகளை பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திராஇளங்கோவன் வழங்கி பேசினார். 

    முகாமில் வருவாய்த்துறையினர் நிள அளவை துறையினர் ஊர் பொதுமக்கள் பெரியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலையில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தையல் தொழிலாளர்களுக்கு சமூகநலத்துறை சார்பில் தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், தையல் தொழிலாளர்களுக்கு அரசு தையல் எந்திரங்களை வழங்க வேண்டும் என்று தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

    அதனடிப்படையில் 21 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. 
    ×