என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலெக்டர் முருகேசுக்கு விருது வழங்கிய போது எடுத்த படம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் அமைத்து சாதனை படைத்த கலெக்டருக்கு விருது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் அமைத்து சாதனை படைத்த கலெக்டருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் விவசாய மாவட்டமாகும்.இங்கு சாத்தனூர் அணை பாசனத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைகாலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் மிகக் குறுகிய காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன. இந்த பணியில் மகளிர் குழுவினர் உட்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.
பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பருவ மழை பெய்ததால் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேறு மாவட்டத்தில் இல்லாத வகையில் அதிக அளவில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டதால் அதற்கு உலக சாதனை அமைப்புகள் மூலம் 4 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுபற்றி அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக ஊரக வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட கலெக்டர் முகேஷுக்கு நேற்று தலைமை செயலகத்தில் 2021- ம் ஆண்டுக்கான விருது வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள், பொதுப்பணித்துறை செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






