என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்கப்பட்ட நிலத்தில் பயிர்கள் அகற்றப்படுவதை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    மீட்கப்பட்ட நிலத்தில் பயிர்கள் அகற்றப்படுவதை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் பார்வையிட்ட போது எடுத்த படம்.

    காட்டாம் பூண்டி கிராமத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கர் ஓடை நிலம் மீட்பு

    காட்டாம் பூண்டி கிராமத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கர் ஓடை நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.

    திருவண்ணாமலை அடுத்த காட்டாம் பூண்டி கிராமத்தில் ஓடை நிலத்தை ஆக்கிரமித்திருந்த 1 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் மற்றும் அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    மேலும் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை எந்திரங்கள் மூலம் அகற்றினர்.
    Next Story
    ×