என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் எ.வ. வேலு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் எ.வ. வேலு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம்.

    திருவண்ணாமலையில் பயனாளிகளுக்கு ரூ.16 கோடி நலத்திட்ட உதவிகள்

    திருவண்ணாமலையில் பயனாளிகளுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டத்தில் ஒர்க் ஆர்டர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 940 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
     
    அவர் பேசும்போது கூறியதாவது:-

    குடிசையில் வசிக்கும் மக்களுக்காக இலவச வீடு கட்டும் திட்டத்தை முதன் முதலில் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதை பார்த்து அப்போதைய மத்திய அரசு இந்திரா தொகுப்பு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது.தமிழகத்தில் 860 பஞ்சாயத்துகளை கொண்ட முதல் பெரிய மாவட்டம் திருவண்ணாமலை. 

    அதேவேளையில் குடிசைகள் அதிகம் கொண்ட மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அடுத்த படியாக திருவண்ணாமலை உள்ளது. இந்த மாவட்டத்தில் இப்போது 18 ஆயிரம் பேருக்கு இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இப்போது பட்டா வைத்து உள்ளவர்களையும் இந்த திட்டத்தில் இணைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், சுகாதார துணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பார்வதி சீனுவாசன், துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சரவணன், திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், யூனியன் தலைவர்கள் கலைவாணி கலைமணி (திருவண்ணாமலை) அன்பரசி ராஜசேகரன் (கலசபாக்கம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×