என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோலப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணுக்கு டி.வி. பரிசாக வழங்கிய போது எடுத்த படம்.
    X
    கோலப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணுக்கு டி.வி. பரிசாக வழங்கிய போது எடுத்த படம்.

    திருவண்ணாமலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி

    திருவண்ணாமலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டிநடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கோலம் கோலாகலம் என்ற தலைப்பில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி மதியம் 1மணிவரை நடைபெற்றது.பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஏ.எஸ்.பி. கிரண் ஸ்ருதி கலந்துகொண்டார்.பரிசுக்குரிய கோலங்களை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.

    அதன்படி அகிலா, சரண்யா, கஸ்தூரி, அனந்தலட்சுமி ஆகிய 4 பேருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது.சங்கீதா, தீபா, ஷீபா, பவித்ரா ஆகிய 4 பேருக்கு இரண்டாம் பரிசாக எல்.இ.டி.டி.வி. வழங்கப்பட்டது.பார்வதி, ஆனந்தபைரவி, மகாலட்சுமி, வரலட்சுமி, ஆகிய 4 பேருக்கு மூன்றாம் பரிசாக வாஷிங்மிஷின் வழங்கப்பட்டது.

    பரிசுகளை ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, சிவா எலக்ட்ரானிக்ஸ் விமல் குமார், தொழிலதிபர் செந்தில் ஆகியோர் வழங்கினர். இதுதவிர ஆறுதல் பரிசாக 200 பெண்களுக்கு ரூ.500 மதிப்பிலான கூப்பன் வழங்கப்பட்டது. 
    Next Story
    ×