என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே 7-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபரையும் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் மார்பின் சீரி (வயது25) என்பவர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். வாலிபரும் சிறுவனும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய மார்பின் சீரியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் மார்பின் சீரி (வயது25) என்பவர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். வாலிபரும் சிறுவனும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய மார்பின் சீரியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு வரை காத்துக்கிடந்த பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று இரண்டு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து முகூர்த்த நாள் என்பதால் வீடு வாங்கவும் விற்கவும், வீட்டுமனை வாங்க விற்பது சம்பந்தமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
பத்திர பதிவு காலை முதல் மந்தநிலையில் சென்றதால் கூட்டம் அதிகரித்து கொண்டு இருந்தது.
மாலை 3 மணி பிறகு பத்திரப் பதிவு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன சுமார் 30&க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு செய்யப்படாமல் சுமார் இரவு 7 மணி வரையும் காக்க வைத்துவிட்டு மறுநாள் காலை 10 மணிக்கு மேல் வாருங்கள் என பாத்திரத்தை திருப்பிக் கொடுத்தனர்.
இதனால் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்துக்கிடந்தவர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலரிடம் கேட்டபோது நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் பத்திர பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் ஒருநாளில் 100-க்கும் மேற்பட்ட பத்திர பதிவு செய்யப்பட்டு வரும் இந்த அலுவலகத்தில் நெட்வொர்க் பிரச்னை என்று கூறுவது மிகவும் வேதனையாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
போளூர்:
போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் ராணி சண்முகம் தலைமை தாங்கினார்.
செயலாளர் முஹம்மது ரிஸ்வான் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சாந்தி நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சட்டமன்றத் தொகுதியிலிருந்து ரூ.1 கோடியே 50 லட்சத்தில் தெருவிளக்கு சாலை வசதி என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 2021-2022-ம் நிதியாண்டில் மூலதனம் மானிய நிதியில் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு நவீன எரிமேடை தகன மேடை அமைத்தல்.
ஆரணி பாராளுமன்ற எம்.பி. நிதியில் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து நகர உயர் கோபுர மின் விளக்கு அமைத்தல், 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.23 லட்சத்தில் குடிநீர் வசதி 15-வது நிதிக்குழு மானியத்தில் போல பெரிய கால்வாய் தூர்வாரும் பணியை ரூ.45 லட்சத்தில் சீரமைத்தல் என 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை சேஷாத்ரி ஆசிரமத்தில் திருமந்திரம் 75-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் திருமந்திரம் 75-வது மாநாடு அமுதமொழி சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது.
மாநாடு ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலையார் திருமூலர் திருமந்திரம் திருக்குடில் இறைபணி சித்தர் முத்துகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த அறிஞர்கள் சைவசித்தாந்த வல்லுனர்கள் சிவனடியார்கள் பக்தர்கள் தமிழ் அறிஞர்கள் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் ஆய்வரங்கம் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
சேஷாத்திரி ஆசிரம நிர்வாகத் தலைவர் நீதியரசர் ராமநாதன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.
பேராசிரியர் மல்லிகா திருமந்திரத்தில் தியானம் தியானம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அமுதவல்லி சங்கரநாராயணன் சித்தர்கள் உலகம் திருமந்திரம் எண்ணங்கள் என்ற இரு தலைப்புகளில் 2 நாட்கள் பேசினார்.
நிலக்கோட்டை மடாதிபதி ஞானபாரதி திருமந்திரத்தில் எனது உள்ளம் என்ற தலைப்பில் பேசினார். திருவண்ணாமலை இறைப்பணி சித்தர் திருமந்திரம் வாழ்வியல் மந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
புலவர் மாசிலாமணி எழுதிய ஸ்ரீ மீனாட்சி அம்மை கலிவெண்பா திருப்போரூர் தவத்திரு சிதம்பர சுவாமிகள் அருளியது.
நூலினை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் வெளியிட இறைபணி சித்தர் முத்துகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
வாழ்த்துரை திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் சங்கத் தலைவர் இந்தராஜன். புதுச்சேரி மணிமாறன் கல்பனா அவர்களின் வீணை இசை விருந்து நடைபெற்றது.
மேலும் மாநாட்டில் பல்வேறு அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் பேராசிரியர்கள் திருமந்திரத்தில் முனைவர் பட்டம் பெற்ற வல்லுநர்கள் மடாதிபதிகள் பேசினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் விடுதிகளில் முறைகேடு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், போளூர், செங்கம் சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் உட்பட 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் தாய் தந்தை இழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 1100 ரூபாயும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 49 விடுதிகளுக்கு மாணவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வழங்குவதற்காக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனோ வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கடந்த டிசம்பர் மாதம் முதல் விடுதிகள் அனைத்தும் இயங்கத் தொடங்கியுள்ளன.
விடுதிகளில் வார்டன் அங்கே தங்கி இருந்து மாணவர்களுக்கு பாதுகாப் பாகவும் 3 வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யது படிப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு விடுதிகளில் வார்டன்கள் தங்குவதில்லை அதேபோல் மாணவர்களும் விடுதியில் தங்காமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் பயிலா மலேயே தங்கி பயிலுவதாக விடுதி காப்பாளர்கள் போலியாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிகள் மற்றும் கலெக்டர் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள அனைத்து மாணவர்கள் விடுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டன.
இதில் பல்வேறு விடுதிகளில் முறைகேடுகள் நடப்பதை கண்டுபிடித்து அதற்கான அறிக்கையும் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் முதல்கட்டமாக 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ராக்கிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கம்:
அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்க முயற்சி, வகுப்பறையில் பெண் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே நடனமாடும் மாணவர்கள், ஆமாம் நானும் ரவுடிதான் என்று ஆசிரியரையே மிரட்டும் தொனியில் பேசும் காட்சி, மேஜை நாற்காலிகளை உடைக்கும் அட்டகாச காட்சிகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் மற்றும் வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேஜைகளை உடைத்த மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ராக்கிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் சக மாணவனை அடித்து துன்புறுத்தி நடனமாட செய்கின்றனர்.
மேலும் பாட்டு பாடிக்கொண்டு தங்களுக்கு விசிறி விட சொல்லியும் சக மாணவர்களை அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்களை அடித்து தொந்தரவு செய்யும் மாணவர்களால் மற்ற மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது முறையாக எந்த பதிலும் கூறாமல் இன்னும் 5 நாட்களில் தேர்வு முடிந்து விட்டால் மாணவர்கள் சென்று விடுவார்கள் என்று அலட்சியமாக கூறினார்.
இதுபோன்ற அடித்து துன்புறுத்தி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்க முயற்சி, வகுப்பறையில் பெண் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே நடனமாடும் மாணவர்கள், ஆமாம் நானும் ரவுடிதான் என்று ஆசிரியரையே மிரட்டும் தொனியில் பேசும் காட்சி, மேஜை நாற்காலிகளை உடைக்கும் அட்டகாச காட்சிகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் மற்றும் வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேஜைகளை உடைத்த மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ராக்கிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் சக மாணவனை அடித்து துன்புறுத்தி நடனமாட செய்கின்றனர்.
மேலும் பாட்டு பாடிக்கொண்டு தங்களுக்கு விசிறி விட சொல்லியும் சக மாணவர்களை அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்களை அடித்து தொந்தரவு செய்யும் மாணவர்களால் மற்ற மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது முறையாக எந்த பதிலும் கூறாமல் இன்னும் 5 நாட்களில் தேர்வு முடிந்து விட்டால் மாணவர்கள் சென்று விடுவார்கள் என்று அலட்சியமாக கூறினார்.
இதுபோன்ற அடித்து துன்புறுத்தி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஆரணி அருகே நிர்வாண நிலையில் எலும்பு கூடாக பெண் பிணம் மீட்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலை பாலாற்றுவென்றான் கிராமத்தின் கூட்ரோடு அருகில் ரெயில்வே சரக வன பகுதியில் நிர்வாண நிலையில் சுமார் 35வயது மதிக்கதக்க பெண் பிணம் கிடந்தது.
ஆடு மேய்ப்பவர்கள் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தொவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பாசோதனைக்கு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பெண் கொலை செய்யபட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி பஞ்சாயத்தில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் புறகணிப்பு செய்து விட்டனர்.
காஞ்சி ஊராட்சி மன்றத்தின் சார்பில் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபா நடந்தது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிகோபால் தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என யாரும் கலந்து கொள்ளாததால் அங்கு வந்திருந்த மக்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர் அப்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னரே கடலடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை அமைதிப்படுத்தினார் இருப்பினும் சிறப்பு கிராம சபா குறித்து முறைப்படி துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்காதது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கே அழைப்பு இல்லாதபோது இந்த கிராமத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
கீழ்பென்னாத்தூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், மேக்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்குட்பட்ட கீக்களூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், புஷ்பா சதாசிவம், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு கலைஞர் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவர்கள் கலந்துகொண்டு கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு, சம்பந்தப்பட்ட நோய்கள், நீரழிவு நோய், காச நோய், இருதய நோய், இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்பின் அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீரில் உப்பு சர்க்கரைஅளவு கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய பாப் தடவல், கண்புரை கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கபடுதல் என பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் வேட்டவலம் விஜயகுமார், மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், சக்தி பிரியன், ராஜலட்சுமி, ஸ்ரேயா உள்ள மருத்துவ குழுவினர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சக்கரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர்கள், கீக்களூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலநந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜினி அன்பழகன் மற்றும் கீக்களூர், மேக்களூர், கத்தாழபட்டு, செவரபூண்டி உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழ்வல்லம் பள்ளியில் மேலாண்மை குழுக்கூட்டம் நடந்தது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே கணியம்பாடி ஒன்றியம், கீழ்வல்லம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று 23-ந்தேதி பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர்.சி. சிவகுமார் தலைமையில், தலைமையாசிரியர்.கே.ஜனார்த்தனன் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போதுஇருபது உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மை குழுத் தலைவராக கே.பாரதி பார்த்திபன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
திருவண்ணாமலை அரசு பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மர கன்று நடும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை:
உலகம் பூமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்துல்கலாம் புதிய மக்கள் அமைப்பின் சார்பாக அப்துல் கலாம் கூற்றுப்படி மாணவ, மாணவிகள் தலை குனிந்து மரம் நட்டால், உங்களை இந்த உலகம் தலை நிமிர்ந்து பார்க்கும் மேலும் உலகம் எதிர்கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை மரக்கன்று நட்டால் நம்மையும்,
இந்த உலகத்தையும் காக்கும் ஆற்றல் நம்மிடம் தான் உள்ளது என்று தெரிந்த அப்துல் கலாமின் வழியின் படி திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், பள்ளி வளாகத்தில் மர கன்றுகள் நட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது/
இதில் அப்துல்கலாம் புதிய மக்கள் அமைப்பின் நிறுவனர் தேசிய தலைவர் சிலம்பரசன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மர கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, மற்றும் விவேக், வழக்கறிஞர் மாரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் கீழ் பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
வட்டார வளமைய மேற் பார்வையாளர் செல்வம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி கலந்துகொண்டு, 85 மாற்று திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை, பஸ் பயண சலுகை அட்டைகளை வழங்கினார்.
முகாமில் 114 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ வசதிகளை பெற்றனர்.
முகாமில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மஞ்சு, அம்பிகா, மணி, சரண்யா, கிருஷ்ணபிரியா மற்றும் மருத்துவ குழுவினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.






