என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள்
பள்ளியில் மாணவர்களை அடித்து ராகிங் செய்து அட்டூழியம்- சமூக வலைதளங்களில் பரபரப்பு வீடியோ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ராக்கிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கம்:
அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்க முயற்சி, வகுப்பறையில் பெண் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே நடனமாடும் மாணவர்கள், ஆமாம் நானும் ரவுடிதான் என்று ஆசிரியரையே மிரட்டும் தொனியில் பேசும் காட்சி, மேஜை நாற்காலிகளை உடைக்கும் அட்டகாச காட்சிகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் மற்றும் வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேஜைகளை உடைத்த மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ராக்கிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் சக மாணவனை அடித்து துன்புறுத்தி நடனமாட செய்கின்றனர்.
மேலும் பாட்டு பாடிக்கொண்டு தங்களுக்கு விசிறி விட சொல்லியும் சக மாணவர்களை அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்களை அடித்து தொந்தரவு செய்யும் மாணவர்களால் மற்ற மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது முறையாக எந்த பதிலும் கூறாமல் இன்னும் 5 நாட்களில் தேர்வு முடிந்து விட்டால் மாணவர்கள் சென்று விடுவார்கள் என்று அலட்சியமாக கூறினார்.
இதுபோன்ற அடித்து துன்புறுத்தி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Next Story