என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை அரசுப் பள்ளிக்கூடத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்
திருவண்ணாமலை அரசு பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மர கன்று நடும் விழா
திருவண்ணாமலை அரசு பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மர கன்று நடும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை:
உலகம் பூமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்துல்கலாம் புதிய மக்கள் அமைப்பின் சார்பாக அப்துல் கலாம் கூற்றுப்படி மாணவ, மாணவிகள் தலை குனிந்து மரம் நட்டால், உங்களை இந்த உலகம் தலை நிமிர்ந்து பார்க்கும் மேலும் உலகம் எதிர்கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை மரக்கன்று நட்டால் நம்மையும்,
இந்த உலகத்தையும் காக்கும் ஆற்றல் நம்மிடம் தான் உள்ளது என்று தெரிந்த அப்துல் கலாமின் வழியின் படி திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், பள்ளி வளாகத்தில் மர கன்றுகள் நட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது/
இதில் அப்துல்கலாம் புதிய மக்கள் அமைப்பின் நிறுவனர் தேசிய தலைவர் சிலம்பரசன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மர கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, மற்றும் விவேக், வழக்கறிஞர் மாரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
Next Story






