என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம்
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
போளூர்:
போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் ராணி சண்முகம் தலைமை தாங்கினார்.
செயலாளர் முஹம்மது ரிஸ்வான் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சாந்தி நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சட்டமன்றத் தொகுதியிலிருந்து ரூ.1 கோடியே 50 லட்சத்தில் தெருவிளக்கு சாலை வசதி என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 2021-2022-ம் நிதியாண்டில் மூலதனம் மானிய நிதியில் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு நவீன எரிமேடை தகன மேடை அமைத்தல்.
ஆரணி பாராளுமன்ற எம்.பி. நிதியில் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து நகர உயர் கோபுர மின் விளக்கு அமைத்தல், 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.23 லட்சத்தில் குடிநீர் வசதி 15-வது நிதிக்குழு மானியத்தில் போல பெரிய கால்வாய் தூர்வாரும் பணியை ரூ.45 லட்சத்தில் சீரமைத்தல் என 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






