என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் செயின் பறித்து சென்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாயநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. 

    இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி சாந்தா (வயது 60)  அணிந்திருந்த 2 பவுன் செயின், ஏகாபரத்தின் மனைவி சூரியகலா அணிந்திருந்த 3 பவுன் செயின், நடராஜன் மனைவி சகுந்தலா அணிந்திருந்த 3 பவுன் செயின் என மொத்தம் 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இது குறித்து 3 பேரும் ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    ஆரணி அருகே மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 29).இவரது மனைவி யுவராணி. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். யுவராணி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 3 மகள்,ஒரு மகன் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் யுவராணி கணவரை பிரிந்து குன்னத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    மதன் யுவராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து யுவராணி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதன் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.

    போலீசார் இது தொடர்பாக மதனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலும் இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 12 புத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது நின்று மதன் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். இதற்கு உறுதி அளித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன்.

    இல்லாவிட்டால் குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து விடுவேன் என மதன் மிரட்டினார்.தொடர்ந்து 2 மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகு சமாதானமான மதன் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது.

    நேற்று 3-ம் நாள் விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் என்பதால் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமேதியது.

    அதனை தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    சீ.ம.புதூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நமைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கல்வி வட்டாரத்திலுள்ள சீ.ம. புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. சீ.ம.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர்கள். ரங்கநாதன், தரணி, குணசேகரன், ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சீ.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நம்பெருமாள், வரவேற்றார்.பள்ளி வளாகத்தில் மேடை அமைத்து ஆங்கிலம் உரையாடுதல், ஆத்திச்சூடி ஒப்புவித்தல், 

    மாறுவேடப் போட்டி, பல்வேறு வேடம் அணிந்து நாடகங்கள், கலை நிகழ்ச்சி, ஆகியவற்றை மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆண்டறிக்கை ஆசிரியர் சரவணன், வாசித்தார்.

    இதில் தெள்ளார் வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஆசிரியர் பயிற்றுநர் தமிழ்நேசன், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், ஊர் பெரியவர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் ஆசிரியர் கங்காபரமேஸ்வரி, நன்றி கூறினார்.
    திருவண்ணாமலையில்வருகிற 12-ந்தேதி முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. 

    இந்த நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளின் கோரிக்கையின் பேரில் இந்த முகாமானது தற்காலிகமாக அதாவது வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாற்றி நடத்திடப்பட உள்ளது.

    மேலும் இம்முகாமில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு தங்களுக்கு தேவையான மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதியதாக பெறுதல் அல்லது புதுப்பித்துக்கொள்ள நேரடியாக விண்ணப்பிக்கலாம். 

    அதனை தொடர்ந்து இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களும் தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய சான்றுகளுடன் நேரில் வர வேண்டும். 

    இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அன்றைய தினமே புதிய அட்டை மற்றும் பழைய அட்டை புதுப்பித்து வழங்கப்படும். என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
    திருவண்ணாமலை அருகே மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக கலசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். 

    இவர் வட்டிக்கு பணம் கடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒருவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு சென்று உடனடியாக கடன் தொகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. 

    அந்த சமயத்தில் அவர் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பவன் குமார், மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் ஜெய்சங்கரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலையில் விசாரணை கைதி சாவு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறப்பதற்கு முன்பு உடலில் காயங்கள் இருந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவித்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா இளையாங்குன்னியை அடுத்த தட்டராணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 48) கூலித்தொழிலாளி.
    இவரை கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராய வழக்கு தொடர்பாக கைது செய்தனர். 

    பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 

    தங்கமணியின் இறப்பிற்கு போலீசார் காரணம் என அவரது உறவினர்கள் உடலை வாங்காமல் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். \மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடல் பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

    மேலும் இந்த வழக்கை விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள்து. இந்த நிலையில் சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    முதல்கட்டமாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த தங்கமணியின் வலது கையில் இரண்டு இடங்களிலும் இடது கையில் ஒரு இடத்திலும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயங்கள் இறப்பதற்கு முன்பு 12 மணிநேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது. 

    மேலும் இடது கையின் பின்புறத்தில் சுண்டு விரலுக்கு அருகே உள்ள எலும்பில் ஆழமான ரத்தக்கட்டு உள்ளது. இந்த காயம் இறப்பதற்கு 6 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது. 

    நாக்கு நடுப்பகுதியில் காயம் உள்ளது. இதேபோல் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் 3 மற்றும் 4-வது விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டு இரத்த கட்டு உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை சக மாணவன் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    அந்த மாணவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் அந்த மாணவி திருமணம் செய்து கொள்ள கேட்டபோது மாணவர் மறுத்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் காதலித்து ஏமாற்றியதாக சக மாணவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அந்த மாணவன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

    மேலும் போலீசார் அவரை தேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் காலகட்டத்தில் மாணவன் தலைமறைவாக உள்ளதால் பிளஸ் டூ தேர்வு எழுதாமல் இருந்து வருகிறான்.
    ஆரணி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்.
    ஆரணி:

    கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடிர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆரணி டவுன் பஜார் வீதி மார்க்கெட் வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஓட்டல்கள் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில்

    15-க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து ஷவர்மர் போன்ற சிக்கன் சம்மந்தபட்ட உணவை பரிசோதனைக்காக பறிமுதல் செய்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.

    இதனை தொடர்ந்து ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதனை கைப்பற்றி தலா ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
    ஆரணி அருகே கிணற்றில் மூழ்கிய வாலிபர் பிணம் மீட்கப்பட்ட நிலையில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் புதுக்காமூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 25). இவர் நண்பர்களுடன் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் நேற்று மாலை சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது புஷ்பராஜ் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். 

    இதனைக் கண்ட நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அவர்களால் முடியாததால் உடனடியாக ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

    பின்னர் இன்று காலையில் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 3 மணி நேரம் கழித்து புஷ்பராஜ் பிணத்தை மீட்டனர். ஆரணி தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை ப்பகுதியில் இருந்த புள்ளிமான் உணவிற்காக வழி தவறி திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. 

    இதனை அந்த பகுதி மக்கள் மீட்டு வன அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த மானுக்கு உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டுள்ளதால் அதனை கால்நடை பராமரிப்பு மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
    பிரம்மோற்சவ விழா 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
    சோளிங்கர்,

    ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா மலைக்கோயவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழா 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் 750 அடி மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

    பக்தர்கள் சாமி தரிசனம் நேற்று ஊர் கோவிலில் இருந்து பக்தோசிபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மலைக் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சோளிங்கர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு யோக லட்சுமி நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயார் தரிசனம் செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தோசித பெருமாள் தங்க கருட வாகனத்தில் வரும் 10-ந் தேதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைத் தொடர்ந்து 12-ந்்தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது.

    இதில் ஆந்திரா கர்நாடகா தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×